ஐஸ் வைத்த பிரியங்கா...அல்வா கொடுத்த தாமரை...வேற லெவல் தான் நீங்க.. கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை இப்போது பிரியங்காவுக்கு தாமரை நிரூபித்துவிட்டார்.
என்ன மாதிரி கேட்டாலும் பதில் இப்படி தான் சொல்வேன் என்று குதர்க்கமாக பேசிய தாமரைக்கு குவியுது வாழ்த்துக்கள்.
பிரியங்காவின் ஐஸ் இப்படி உருகி விட்டதே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தலைவர் ஆகிவிட்டாரே தாமரை
இந்த வார தலைவராக இருக்கும் தாமரையை தன் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கலாம் என்று எதிர்பார்த்திருந்த பிரியங்காவுக்கு செம மொக்கை கிடைத்துவிட்டது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இருந்தாலும் இந்த மாதிரி ஒரு பஞ்ச் கொடுப்பார் என்று தாமரையின் ரசிகர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. அதனாலேயே, தாமரைக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா என்று பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். வெள்ளந்தியாக இருந்தாலும் விவரமான ஆளாகதான் தாமரை இருக்கிறார் என்று சிலர் இவர் மீது கொஞ்சம் பொறாமை படவும் ஆரம்பித்திருக்கின்றனர்.

கலக்கும் மீம்ஸ்கள்
இத்தனை நாளா இவர் தன்னுடைய துறுதுறு பார்வையால் மட்டும் அல்லாமல் அடுத்தவர்களை வாய் சாமர்த்தியத்தாலும் மிரட்டிக் கொண்டிருந்தார் பிரியங்கா. ஆனால், பிரியங்காவின் சாமர்த்தியம் கிராமத்துப் பெண்ணான தாமரை இடம் எடுபடாமல் போய்விட்டது என்று பல இணைய தள குறும்பர்கள் குறும்பாக மீம்ஸ்களை ரெடி பண்ணி விட்டனர். சும்மாவே பிரியங்காவை கலாய்க்கும் ரசிகர்கள் கூட இந்த அவமானம் உனக்கு தேவையா என்று மீம்ஸ்களைப் போட்டு கொளுத்தி வருகின்றனர்.
Recommended Video

என்ன வார்த்தை சொல்லி விட்டார்
வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேணாலும் பேசலாம் என்று இல்லை என தற்போது அமைதியாக தலையை ஆட்டிக்கொண்டே தாமரைச்செல்வி நிரூபித்திருக்கிறார். இந்த வாரம் வீட்டில் யார் அதிகமாக வேலை செய்தார்கள் என்று கேட்டால் யார் பெயரை சொல்லுவாய் என்று ப்ரியங்கா தாமரைச்செல்வியிடம் போட்டு வாங்கலாம் என்று கேட்ட கேள்விக்கு தாமரைச்செல்வி நிதானமாகவும் அமைதியாகவும் 3 பேர் என்று சொல்லுவேன் என கூறியிருக்கிறார். அதற்கு நான் உனக்கு பிடிக்கும்தானே அதனால் என்னை பிடிக்கும் என்பதற்காக என்ன சலுகை செய்வாய்?? என்று இவர் ஐஸ் வைக்கிற மாதிரி கேட்கும் கேள்விக்கு தன் அமைதியாக முகத்தில் எந்த எக்ஸ்பிரஷனையும் காட்டாமல் தலையை ஆட்டிக் கொண்டிருந்த தாமரைச்செல்வி சொன்ன பதில்தான் பிரியங்காவை மட்டுமல்ல ரசிகர்களையும் ஆட வைத்து விட்டது.

இதை எதிர்பார்க்கலையே
அடடா இவருக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா என்று பலர் இப்போது சமூக வலைத்தளத்தில் தாமரை செல்வியை பார்த்து அசந்துபோய் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள். காரணம் பிரியங்கா மிரட்டியும், ஐஸ் வைத்தும் கேட்ட கேள்விக்கு கடைசி நாடியா பெயரை சொல்லிவிட்டார். ஆரம்பத்தில் பிரியங்காவின் கேள்விகளுக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருந்ததை பார்த்ததும் இவர் பிரியங்காவிற்கு ஜால்ரா போட்டு விடுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் இவர் நாடியா பெயரைச் சொன்னதும் கொஞ்சம் ஷாக்காக தான் இருந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications