உள்ளே வரும்போதே சொல்லிதான் அனுப்பினாங்க... கதறும் தாமரை..இப்படி உண்மையை போட்டு உடைச்சிட்டீங்களே
சென்னை: குழந்தைத்தனமாக இருப்பவர்களை எப்போதுமே ரசிகர்களுக்கு பிடிக்கும், அது தற்போது தாமரைச் செல்வியின் விஷயத்தில் நிரூபணமாகிவிட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதுமுகங்கள் களமிறங்கி இருந்தாலும் அதில் ஒரு சிலர் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டனர்.
நிகழ்ச்சி தொடங்கி மூன்று நாட்களுக்குள் இந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் தாமரைச்செல்வி இடத்தை பிடிப்பார் என்று அவரே நினைத்திருக்க மாட்டார் போல.

பெண் போட்டியாளர்கள் அதிகம்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்திருந்தாலும் ரசிகர்கள் பலர் இந்த சீசனில் செம என்டர்டைன்மென்ட் இருக்கிறது என்று கூறிவருகின்றனர். இந்த சீசனில் அதிகமான புதுமுகங்கள் இருந்தாலும் பெண்கள் போட்டியாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களில் பலர் மாடலாகவும் ஒரு சிலர் பாடகர்களாகவும், நடிகர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஒரு சிலர் ரசிகர்களின் மனதில் டக்கென்று பதிந்து விட்டனர். அதில் தாமரை செல்வியும் ஒருவர்.

மனதைக் கவர்ந்த தாமரை
முதல்நாள் நிகழ்ச்சி தொடங்கியதும் இவர் பேசிய வார்த்தைகள் குழந்தை தனமாகவும் வெகுளித்தனமாவும் இருந்ததால் யார் இவர் என்று அதிகமாக ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஒரு நாடகக் கலைஞரான இவர் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் போட்டியாளர்களுடன் சகஜமாக பழகுவது மற்றும் பேய் கதைகளுக்கு பயப்படுவது போன்ற குழந்தைத்தனமான செயல்களாலும் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்களுடன் விட்டுக்கொடுத்து இருக்கும் இவருடைய குணம் பலருக்கும் பிடித்திருக்கிறது.

அந்த எக்ஸ்பிரஷன் இருக்கே. ...
ரசிகர்கள் ஒரு பக்கம் இவரை பார்த்து பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் போது, ஒருசில நெட்டிசன்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் எல்லாரும் இருப்பார்கள் போகப்போக பார்த்தால் தான் தெரியும் அவர்களின் சுயரூபம் என்று கூறி வருகின்றனர். ஆனால் எதையும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் என்று இவர்கள் கூறிக் கொண்டு இருந்தாலும், இவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நேற்று பவானி ரெட்டியிடம் அவருடைய வயதை கேட்ட விதமும், பவானி ரெட்டி வயதை சொன்னதும் அதற்கு தாமரைச்செல்வி கொடுத்த எக்ஸ்பிரஷன் மீம்ஸ்களாக பறந்து வருகிறது.

அந்த வார்த்தையை சொல்லாதீங்க
இந்த நிலையில் இன்று டைனிங் ஹாலில் அமர்ந்துகொண்டு இவர் மற்றும் பிரியங்கா, இமான் அண்ணாச்சி, கலை வாணி மற்றும் பலர் சுற்றி இருந்து கொண்டு இருக்கும் போது அதில் பிரியங்கா நீங்க எப்போது என்கூட எலிமினேட் ஆகுவிங்க என்று கேட்கிறார். அதற்கு தாமரைச்செல்வி எலிமினேட் என்றால் என்ன என்று ஜிபி முத்துவின் பாணியில் அர்த்தம் தெரியாமல் கேள்வி கேட்கிறார். அதற்கு எலிமினேஷன் என்றால் வெளியே செல்வது என்று ப்ரியங்கா கூறியிருக்கிறார். அதை கேட்டதும் என்னை வெளிய போக சொல்லாதீங்க....இங்க நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கிறது, என்று தனக்கே உரிய அந்த சிரிப்போடு கூறிக் கொண்டிருக்கிறார்.

இப்படி உண்மைய சொல்லிட்டீங்களே
அதுமட்டுமல்லாமல் உள்ளே வரும் போது யாராவது ஏதாவது சொன்னார்களா?? என்று பிரியங்கா மேலும் இவரிடம் கேள்வி கேட்க அதற்கு ஆமாம்..உள்ளே சண்டை எல்லாம் போடுவாங்க என்று நிறைய பேரு சொன்னாங்க, நான் டீவிலேயே பாக்குறதுக்கு உள்ள போய் பார்க்கலாம் என்று வந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் எங்க வீட்ல ஏசி எல்லாம் இல்ல இங்க நல்லா ஏசி இருக்கிறது. குளுகுளுன்னு இருக்கு அண்ணாச்சி என்று இவர் கூறுவதை கேட்டதும் இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். இப்படி உண்மை எல்லாம் பப்ளிக்கா சொல்லிட்டீங்களே என்று பலர் கமெண்டில் அனுப்பி இருக்கின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications