அண்ணாச்சி பெண் போட்டியாளர்களை மட்டம் தட்டுகிறாரா?? சுருதியின் விளக்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்ணாச்சியின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்களின் கேள்விக்கு சுருதி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக அண்ணாச்சி ஒருசில போட்டியாளர்களுடன் தான் நெருக்கமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்ற ரசிகர்களுக்கு சந்தேகம் தோன்றியிருக்கிறதாம்.
ஒரு சில பெண் போட்டியாளர்கள் இடம் கொஞ்சம் அதிகமாகத்தான் அண்ணாச்சிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. காரணம் இதுதான் என்று சுருதி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

வழக்கம்போல இந்த சீசனும் தொடர்கிறது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சண்டை சச்சரவுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சமில்லாமல் தான் இருந்து வருகிறது. அதில் இந்த சீசனும் விதிவிலக்கல்ல. இந்த சீசனில் ஆரம்பத்தில் முதல் வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் அட இந்த சீசன் இதற்குமுன் இருந்த சீசனை விட ஜாலியாக இருக்கும் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த சீசனும் வழக்கத்திற்கு மாறாக இல்லை என்பதை புரிந்து கொண்டனர்.

அண்ணாச்சியின் கருத்து பொய்க்கவில்லை
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே அண்ணாச்சி மட்டும் கருத்தாக இன்னும் ஒரு சில வாரங்களில் அனைத்து போட்டியாளர்களின் மனநிலையும், கேரக்டரும் வெளியே தெரிந்துவிடும் என்று அவ்வபோது கூறிக்கொண்டிருந்தார். அதுபடியே நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரத்திலிருந்து போட்டியாளர்கள் தங்களுடைய கேரக்டரை தொடங்க ஆரம்பித்துவிட்டனர், அதில் அண்ணாச்சியும் ஒருவர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அண்ணாச்சிக்கு பெருகும் ஆதரவுகளும், அட்வைஸ்களும்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அண்ணாச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவருடைய என்ட்ரி யை பார்த்ததும் முதலில் அவருடைய ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர் நடந்து கொள்வதை பார்த்து இவருக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் போது சக பணியாளர்களிடம் இவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பாரபட்சம் காட்டுகிறாரா??
அண்ணாச்சி சக பெண் போட்டியாளர்களிடம் பாரபட்சம் காட்டுவதை பலரும் பார்த்து வருகின்றனர் என்று சுருதி கூறியிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே சின்னப்பொண்ணு, தாமரைச்செல்வி, பிரியங்கா, சுருதி, இசைவாணி, பாவனி என போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் அண்ணாச்சிக்கு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. தன்னுடைய கருத்தை அனைவரும் கேட்க வேண்டுமென்று அடுத்தவர்களின் கருத்தை தட்டிக் கழித்து வருகிறார் என்று இவர் மீது போட்டியாளர்கள் குற்றசாட்டுகளை வைத்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் இவர் செய்யும் செயல் அப்படித்தான் இருக்கிறது என்று சில ரசிகர்களும் கூறிவருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications