தி லாஸ்ட் ஆஃப் அஸ் சீசன் 2 படம் எப்படி இருக்கிறது? ஜோம்பிஸ் உலகில் மர்மம்!
The Last of Us Season 2 இந்த தொடரின் சிறப்பம்சம் - ஒரே நேரத்தில் பல கதைகளை, சொல்லி பயணிக்கிறது. ஜோம்பிஸ் உலகத்தை பின்புலமாக வைத்துக் கொண்டு, சிறந்த முறையில் காட்சிப்படுத்துகிறது. பழிக்குப் பழி என்ற அந்த மனநிலை, இருவருக்கும் நேர்ந்த இழப்புகளின் பின்னணியில் மிகுந்த பரிதாபத்துடன் நகர்கிறது.

Fireflies vs. Revenge
இந்த சீசனில், ஒரு பெண் தனது அப்பாவை கொன்றவரை தேடிச் செல்லும் பயணத்தின்போது, நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த குழுவே "Fireflies" என அழைக்கப்படுகிறது. அவர்கள் ஒரு விதத்தில் புரட்சி வீரர்களே. ஆனால், அவர்களது செயல் முறைகள் எப்போதும் நியாயமானவையா? என்ற கேள்வி முழு தொடரில் உதிர்த்துச் செல்லும் கேள்வி.
அதே நேரத்தில், இன்னொரு குழுவினர் - ஜோம்பிகள் நிரம்பிய பனிமலைகள் பகுதிகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். இக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட திரைப்பட தர ஒளிப்பதிவு நம்மை நேரில் அந்த இடத்தில் இருப்பது போல் உணரச் செய்கிறது. பனிக்கட்டிகளால் மூடப்பட்ட காடுகள், புகை மூடலில் இருந்து திடீரென வரும் ஆபத்துகள் - அனைத்தும் ஒரு உயிர் வாழும் போராட்டத்தை உணரச் செய்கின்றன.
கதையின் துவக்கம்
The Last of Us Season 2, முதன்மை கதாபாத்திரமான Ellie-யின் வாழ்க்கையின் புதிய படிநிலையை நம்மிடம் விவரிக்கிறது. Joel மற்றும் Ellie ஆகியோர் ஜாக்ஸனில் ஒரு சமுதாயத்தில் நிம்மதியாக வாழத் தொடங்குகிறார்கள். ஆனால் அந்த அமைதியான வாழ்க்கை நீடிக்காது. Joel மீது நடக்கின்ற ஒரு கொடூரமான தாக்குதலால் Ellie-க்கு ஆழ்ந்த உள்மன வேதனை ஏற்படுகிறது. பழிவாங்கும் நோக்கில் ஒரு பயணத்தை Ellie தொடங்க, அந்த பயணம் நம்மை எதிர்பாராத உணர்வுகளும், வன்முறையும் நிறைந்த ஒரு கதைக்குள் இழுத்துச் செல்கிறது.
கதாபாத்திரம்
Ellie (Bella Ramsey) கதாபாத்திரம் இந்த சீசனில் இயல்பாக மிரட்டலாக உள்ளது. Joel (Pedro Pascal) அவரது நகர்வுகள் கதையின் திசையை மாற்றுகின்றன. இந்த சீசனில் புதிய கதாபாத்திரமாக அறிமுகமாகும் Abby, மிக முக்கியமான பாத்திரமாக வருகிறார். அவளும் தனது துன்பங்களை, முடிவுகளைப் பற்றிய விளக்கங்களை வழங்கும் வகையில் கதைக்கு ஒரு எதிர்மறையான நாயகியாக அமைகிறார். இதில் வரும் குதிரைகள் உண்மையானதா அல்லது கிராபிக்ஸ்சா என்று தெரியவில்லை. ஆனால் பார்க்க பிரமிப்பை தருகிறது.
இயக்கம், ஒளிப்பதிவு, பின்னணி இசை
Neil Druckmann மற்றும் Craig Mazin தலைமையில் உருவான இந்த தொடரின் Season 2, கிராஃபிக்ஸ் மற்றும் நுணுக்கமான இயக்கத்துடன் தொடர்கதைக்கு மிகச் சிறந்த ஒளிப்பரப்பை வழங்குகிறது. ஒவ்வொரு காட்சியிலும் மனதை பதைக்கும் ஒளிப்பதிவு மற்றும் Gustavo Santaolalla-வின் இசை, கதையின் உணர்வை பல மடங்கு உயர்த்துகிறது. வன்முறை, பயம், மன உளைச்சல் ஆகியவை உணர்வுபூர்வமாக காட்டப்பட்டுள்ளன.
விரிவாக்கம்
இந்த சீசன் சீரியஸ் மற்றும் மாறுபட்ட பார்வைகள் கொண்ட நுணுக்கமான ஒரு காதல் - பழி - மன அழுத்தம் ஆகிய கருத்துக்களை நம்மிடம் பரப்புகிறது. இங்கிருக்கும் வன்முறை வெறும் வெளியே காட்டத்தக்கதல்ல, அது ஒவ்வொரு மனதிலும் ஏற்படும் தாக்கத்தையும் காட்டுகிறது. 'எது நியாயம்? எது தவறு?' என்ற கேள்விக்குப் பதில் தேடும் இந்த தொடரின் இரண்டாவது சீசன், நம்மை அதிகம் சிந்திக்க வைக்கிறது.
தி லாஸ்ட் ஆஃப் அஸ் சீசன் 2 ஒரு ஆழமான, மற்றும் மனதை தொட்டுவைக்கும் தொடராக உருவெடுத்துள்ளது. இது ஒரு சாதாரண survival drama அல்ல. இது மனித உறவுகளின் நுட்பங்களையும், பழிவாங்கும் மனித உள்ளத்தின் இருண்ட பக்கங்களையும் வெளிச்சமிடுகிறது. எதிர்பார்ப்பு மிகுந்தது, இது தவறவிடக்கூடாத ஒரு எமோஷனல் ரைடு. ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.
- குரு கிருஷ்ணன்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications