ஷபானாவின் திடீர் திருமணத்திற்கு காரணம் இதுதானா??
சென்னை: ஷபானா ஆரியனை அவசரமாக திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருமணம் முடிந்து ஒரு மாதங்களுக்குள் கருத்து வேறுபாடு என்ற செய்தியைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றனர்.
அவசரமாக திருமணத்தை செய்து அவசரமாக பிரிய போகிறார்களா??என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

வைரலாகி வரும் செய்திகள்
செம்பருத்தி சீரியல் மூலமாக பல வீட்டின் செல்ல மருமகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷபானா, அவருடைய காதல் கணவரின் வீட்டில் மருமகளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற செய்தி அவருடைய ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் ஷபானாவைப் பற்றி வெளியாகி வரும் செய்திகளைக் கேட்டதும் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். வாழ்த்துக்கள் கூறி முடிப்பதற்குள் இப்படி ஒரு செய்தியா??என்று பலர் பீல் பண்ணி வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் வெளியான ரகசியம்
செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஆரியனை காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரின் காதல் ரகசியம் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. இவர்களின் காதல் செய்தியை கேட்டு ஆரம்பத்தில் நம்பாத ரசிகர்கள் கூட பின்பு அதிர்ச்சியோடு வாழ்த்துக்களை கூறிவந்தனர். எப்படியும் இவர்கள் திருமணத்திற்கு ஒரு சில வருடங்கள் ஆகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை இந்த காதல் ஜோடி கொடுத்துவிட்டது.

இதுதான் காரணமா
ஷபானாவின் நெருங்கிய தோழியான ரேஷ்மா அவரது காதலருடன் அடிக்கடி போட்டோசூட் எடுத்துக் கொண்டிருப்பது போல ஷபானா எளிமையாக எங்கேஜிமெண்ட் முடித்து போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தனர். திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுக்கொண்டதற்கு ஷபானா மற்றும் ஆரியன் இருவருமே பொறுத்திருந்து சொல்கிறோம் என்று கூறி இருந்தனர். இருவரும் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு திருமணம் இருக்காது என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஆரியனில் வீட்டில் ஷபானா வேற்றுமதத்தவர் என்ற காரணத்தால் வேற பெண் பார்க்க தொடங்கி விட்டார்களாம்.

காரணம் இவர் தானா
ஷபானா காதலை ஆரியன் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் ஷபானாவின் தோழியான ரேஷ்மா தான் இரு வீட்டிலும் பேசி அவர்கள் மனதை மாற்றி திடீரென்ற அவசர கல்யாணத்திற்கு ரெடி பண்ணி உள்ளார். தன்னுடைய திருமணத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஷபானாவின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று இவர் அவசர அவசரமாக வேலைகளை செய்து உள்ளார். இதனால் ஆரியனில் பெற்றோர் ரேஷ்மாவின் வீட்டில் சென்று சண்டை போட்டுள்ளார்களாம். இருந்தாலும் ஆரியன் உறுதியாக ஷபானாவை திருமணம் செய்வதில் இருந்ததால், வேறு வழியின்றி திருமணத்திற்கு மட்டும் ஆரியனின் பெற்றோர் கலந்து கொண்டுள்ளனர் என்ற செய்திகள் தற்போது பரவி வருகிறது. ஷபானா வின் நெருங்கிய தோழியால் தான் தற்போது ஷபானா அவசரமாக திருமணத்தை முடித்து உள்ளார் என்ற செய்தியைக் கேட்டு ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரின் கருத்து வேறுபாடுகளை சரி செய்வதற்காக நட்பு வட்டாரங்கள் முயற்சித்து வருவதாகவும், இருவரும் சமாதானமாகி விடுவார்கள் என்றும் தெரிவித்து வருகிறார்களாம்
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications