இந்தா..அண்ணாச்சி சொன்ன மாதிரியே பிரச்சனையை தொடங்கிட்டாங்கலா...கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: ஆரம்பிக்கலாமா என்று கமல்ஹாசன் எப்போதோ கேட்ட கேள்வியை இப்போதான் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் செய்திருக்கிறார்கள்
நான் இருக்க பயமேன் என்று அபிஷேக் சக போட்டியாளர்களையும் பின்னுக்கு தள்ளின மாதிரி போட்டிபோட்டு பிரச்சனையை தொடங்கியிருக்கிறார்.
தப்பு எங்கே நடந்தாலும் தட்டி கேட்பேன் என்று இமான் அண்ணாச்சி ஒருபக்கமாக குரலை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.

கச்சேரி தொடங்கியாச்சு
பிக் பாஸ் 5 வது சீசனில் 2 வாரங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரைக்கும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்கிற மாதிரி தான் லா..லா..லா என்று பாடிக் கொண்டும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இந்த வீட்டிற்குள் ரசிகர்களும், போட்டியாளர்களும் எதிர்பார்த்த மாதிரி மூன்றாவது வாரத்தில் மூச்சு பிடிக்க சண்டை தொடங்கி இருக்கிறது. யார் சொல்வது சரி என்று கத்தி பார்க்கிறார்கள். யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்று போட்டி போட்டு கச்சேரியை தொடங்கி இருக்கின்றனர்.

யாரும் சளைத்தவர்கள் அல்ல
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே அண்ணாச்சி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். போக போக தெரியும் எல்லாருடைய குணநலன்களும் என்று...அதுபோல, முதல்வாரத்தில் அன்பாக ஒற்றுமையாக இருந்த போட்டியாளர்கள், இரண்டாவது வாரத்தில் லேசாக கருத்து வேறுபாடு தோன்ற ஆரம்பித்திருந்தது. ஆனால், தற்போது 3-வது வாரத்தில் யார் பெரியவர் என்று போட்டி தூக்கலாக ஆரம்பித்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலகலப்பு மட்டுமல்லாமல் சண்டை சச்சரவுகளும் தான் அதற்கு பிளஸ் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருப்பது போல தற்போது ஐந்தாவது சீசனிலும் நிரூபித்து விட்டனர்.
Recommended Video

அறிவுரை எல்லாம் எடுபடாது போல
நேற்றைய எபிசோடுகள் கூட பாவனி இங்கே சேவ் சூனில் இருக்கும் ஒரு சிலர் குரூப் ஆக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். ப்ரியங்கா, அபிஷேக், அண்ணாச்சி, ராஜு போன்றோர் இருக்கிறார்கள். எங்களிடம் சரியாக பேச மாட்டார்கள் என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் இன்று அதே குரூப்புக்குள் சண்டை தொடங்கி இருக்கிறது. இந்த வார தலைவர் பதவிக்கு டாஸ்க் கொடுத்து இருக்கும் நேரத்தில் தான் செய்வதுதான் சரி என்று ஒருபக்கம் அபிஷேக் கூற அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று அதற்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார் அண்ணாச்சி ஆனால், அதை கேட்க முடியாது என்று கண்ட மேனிக்கு குதித்துக் கொண்டிருக்கிறார் அபிஷேக்.

களைகட்டும் வாக்குவாதம்
சும்மாவே நேற்றைய எலிமினேஷனில் அபிஷேக பெயர் தப்பி விட்டதே என்று பலர் கடுப்பாக இருக்கும் நேரத்தில் இன்றைய இவருடைய ஆட்டத்தை பார்த்ததும் இந்தா....தொடங்கி விட்டார்கள் என்று பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அண்ணாச்சி சொன்னார் எப்படியும் நாளையிலிருந்து எல்லோரும் தங்களுடைய உண்மை கேரக்டரை நிரூபிக்க தொடங்கிவிடுவார்கள் என்று ஆனால் அதை முதற்கட்டமாக அபிஷேக் செய்திருப்பது இந்த சீசனில் திருப்புமுனையாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்படியோ ஒரு வழியா சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வாரத்தில் யார் வெளியே போகிறார் என்று ரசிகர்கள் இப்பவே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications