சிஎம் டிராபி 2026 விழாவில் ஒலித்த பாடல்.. கடைசியில் முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற சிஎம் டிராபி 2026 ஆசியன் கேம்ஸ் பாராட்டு விழா இப்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை கௌரவிப்பதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் விஜய்க்கு அளிக்கப்பட்ட வரவேற்பும், அதில் நடந்த சில சுவாரஸ்யமான தருணங்களும்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மேடையில் கலைஞர்கள் நடனமாடிக்கொண்டிருந்தபோது "ஒரு பேரே வரலாறு" என்ற பாடல் ஒலித்தது. அந்தப் பாடல் வரிகளைக் கேட்ட முதல்வர் விஜய் சிரித்தபடியே ரசித்த தருணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வரவேற்பே வேற லெவல்
நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே அரங்கம் முழுக்க உற்சாகமான சூழல் இருந்தது. பாரம்பரிய நடனத்தையும், மாடர்ன் டான்ஸ் செய்யும் இணைத்து கலைஞர்கள் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர். அதில் விஜய் நடித்த படங்களின் பாடல்களும் ஒன்றன்பின் ஒன்றாக இடம் பெற்றது. கில்லி படத்தின் பாடல் ஒலிக்க, அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. அதன்பிறகு விஜய்யின் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல பாடல்களுக்கும் கலைஞர்கள் நடனமாடினர். அந்த நிகழ்ச்சியை முதல்வர் விஜய் தொடர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்.

ஒரு பேரே வரலாறு பாட்டு
நிகழ்ச்சியின் முக்கியமான தருணம், "ஒரு பேரே வரலாறு" பாடல் ஒலித்தபோதுதான் வந்தது. அந்த வரிகள் அரங்கம் முழுக்க ஒலிக்க, மேடையில் இருந்த கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். அந்த நேரத்தில் முதல்வர் விஜய் சிரித்தபடியே அந்த நிகழ்ச்சியை ரசித்தார். அந்த புன்னகை வீடியோவாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் அந்த காட்சியை தொடர்ந்து பகிர்ந்து, பலரும் தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

கடைசியில் தம்ஸ் அப்
நடன நிகழ்ச்சியின் இறுதியில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த சில வசனங்களும் பாடல்களாகவே சொல்லப்பட்டது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருந்தனர். அந்த நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் விஜய் மேடையை நோக்கி தம்ஸ் அப் காட்டி "சூப்பர்" என்ற விதத்தில் பாராட்டனார். கலைஞர்களின் முயற்சியை அவர் உடனடியாக பாராட்டிய அந்த தருணம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வீரர்களுக்கு பாராட்டு
இந்த விழாவின் முக்கிய நோக்கம், ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை கௌரவிப்பதுதான். பதக்கம் வென்ற பலருக்கு ஊக்கத்தொகையும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கிடையே நடந்த சின்னச் சின்ன தருணங்கள்தான் இப்போது இணையத்தில் அதிகம் பேசப்படுகிறது. "ஒரு பேரே வரலாறு" பாடலுக்கு விஜய் புன்னகைத்தது, கில்லி பட பாடலுக்கு அரங்கத்தின் உற்சாகம், கடைசியில் கலைஞர்களுக்கு தம்ஸ் அப் காட்டி பாராட்டியது என அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications
