சித்தி.. சிம்புவுக்கு ஜோடி யாருன்னே தெரியலயே.. சுகர் பேபி திரிஷா கமலுடன் குளோஸா இருக்காரே: Thug Life
சென்னை: இயக்குநர் மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் கமலுடன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.. அத்துடன், சிம்புவுக்கு இந்த படத்தில் யார் ஜோடி என்பது குறித்தும் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிளான "ஜிங்குச்சா" பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.. அதேபோல, நேற்று முன்தினம், சுகர் பேபி என்ற பெயரில் த்ரிஷாவுக்காக பாடலின் ப்ரொமோ வெளியானது.. டிரெய்லரை போலவே, சுகர் பேபி பாடலிலும், த்ரிஷாவுடன் கமல்ஹாசன் கொஞ்சுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன..

யார் யார் ஜோடி
இந்நிலையில், Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "தக் லைஃப் படம், 5ம் தேதி வெளியாக உள்ளது.. பெரிய பரபரப்பாக உள்ளது.. ஷூகர் பேபி என்று திரிஷாவை சொல்லி வருகிறார்கள்.. இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்? யாருக்கு யார் ஜோடி? என்ற ஆர்வம் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடம் எழுந்தது..
அபிராமி - கமல்
கமல்ஹாசனுக்கு அபிராமியும், சிம்புவுக்கு திரிஷாவும் ஜோடி என்று சொல்லப்பட்டது. பிறகு படத்தின் டிரெயிலர் வெளியானது.. அதில், அபிராமியுடனும் கமல் ஜோடியாக இருக்கிறார், திரிஷாவுடனும் ஜோடியாக இருக்கிறார்.. அப்படியானால் சிம்புவுக்கு ஜோடி இல்லையா? பேச்சுலரா? அவருக்கு யார்தான் ஜோடி? என்று தெரியவில்லை. கமலும், மணிரத்னமும் இதில் எங்காவது சஸ்பென்ஸ் வைத்திருப்பார்கள் என்று ரசிகர்கள் நம்புவதால் எதிர்பார்ப்பு கூடி வருகிறது.
அதேபோல சுகர் பேபி என்ற வார்த்தையை ஏன் சொல்ல வேண்டும்? ஹாலிவுட்டில் சுகர் பேபி, சுகர் டாடி என்றெல்லாம் படங்களும், வெப்சீரீஸ்களும் வெளியாவதுண்டு.. அதாவது வயதான ஆண்களுக்கு தகாத உறவில் உள்ள பெண்களைதான், அந்த நாடுகளில் சுகர் பேபி என்று சொல்வார்களாம். அப்படியானால், சிம்புவுக்கு திரிஷா ஜோடியாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்..
பெரிய சஸ்பென்ஸ்
இது மணிரத்னம் படம் என்பதால், வெறும் டிரைலரை பார்த்து மட்டுமே படத்தை முடிவு செய்ய முடியாது என்பதால், அந்த சஸ்பென்ஸ் என்னவென்று ஜூன் 5ம் தேதி முதல் ஷோவில் தெரிந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் புரமோஷன்கள் அபாரமாக நடந்து வருகின்றன.. புரமோஷன் விஷயத்தில் தேர்ந்தவர் கமல்ஹாசன்.. விக்ரம் பட ஹிட்டுக்கு காரணமே அந்த படத்தின் புரமோஷன்தான்.. ஜுன் 1-ல் துபாயில் மிக பிரம்மாண்டமாக தக்லைஃப் பட புரமோஷன் நடக்க போகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் தாதாவான கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளதாக சொல்கிறார்கள்.. அப்படியானால் திரிஷா சிம்புவுக்கு சித்தியா? என்றும் ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications