Vanakkam Thamizha: எப்பவோ முடிஞ்ச நமீதா கல்யாணத்தை 3 நாளா பார்க்கறோம் மச்சான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் ஆஹா கல்யாணம் என்று ஒரு பகுதி. இதில் பிரபலங்கள், சாமானிய பட்டவர்கள் திருமணத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். அண்மையில் நடைபெற்ற ஸ்ரித்திகா ஸ்ரீ கல்யாணத்தை கூட ஒளிபரப்பினார்கள்.

கடந்த மூன்று நாட்களாக நடிகை நமீதாவின் கல்யாண நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுவும் மறு ஒளிபரப்பு. இதைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி அஞ்சனா கூட புதிய யுகம் சானலுக்கு போயி வருஷக் கணக்கில் ஆகிப் போச்சு.

ரிப்பீட் போட வேண்டியதுதான்... அதுக்குன்னு இப்படியா மனசாட்சியே இல்லாமல்? நமீதாவுக்கு குழந்தை பிறந்து இருந்தால் கூட இந்நேரம் அதுக்கு ஒரு வயசுக்கு மேல இருந்திருக்கும்.எந்த நிகழ்ச்சியை ரிப்பீட் போட வேண்டும், போடக் கூடாது என்று கூடவா சன் டிவிக்குத் தெரியாது?

களைக்கட்டும் வணக்கம் தமிழா

களைக்கட்டும் வணக்கம் தமிழா

சன் டிவியில் காலம் கார்த்தாலே அவரவர் ஆஃபீசுக்கு கிளம்பிக்கொண்டே பார்க்க ஆரம்பித்து அப்படி களைக்கட்டத் துவங்கிய நிகழ்ச்சி வணக்கம் தமிழா. நிகழ்ச்சி வடிவத்தை சன் டிவி அடிக்கடி மாற்றி அமைத்துக்கொண்டுதான் வருகிறது. என்றாலும் நிகழ்ச்சி என்னவோ பார்க்கும்படி நன்றாகத்தான் இருந்து வருகிறது. இதில் ஒளிபரப்பப்படும் ஒரு பகுதிதான் ஆஹா கல்யாணம். இதில் காலங்கார்த்தால சாமான்யர் வீட்டு கோலாகல கல்யாணம்.. அடுத்து எப்போதாவது பிரபலங்கள் கல்யாணம் என்று ஒளிபரப்பி வருகிறார்கள்.

நடிகை நமீதா கல்யாணம்

நடிகை நமீதா கல்யாணம்

இதில் கடந்த மூன்று நாட்களாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த நமீதாவின் கல்யாணத்தை மறு ஒளிபரப்பு செய்கிறார்கள். இதன் தொடர்ச்சி நாளையும் இருக்கிறது என்று வேறு சொல்கிறார்கள். எத்தனை நாளைக்குங்க மக்கள் நமீதா கல்யாணத்தையே பார்ப்பாங்க? இன்னும் பிரசன்னா சிநேகா, சூர்யா ஜோதிகா கல்யாண வீடியோ கொடுத்தல் கூட நீங்க மனசாட்சியே இல்லாமல் ஒளிபடப்பி வருவீர்கள். உங்களுக்கு சாத்தியமா மனசாட்சி இல்லைன்னுதான் சொல்றாங்க.

டாடி ஆறுமுகம் சமையல்

டாடி ஆறுமுகம் சமையல்

டாடி ஆறுமுகம் சமைக்கிறார்.. அந்த வீடியோவை வாங்கி நீங்க ஒளிபரப்பி வர்றீங்க. இதையும் மறு ஒளிபரப்பு என்று வரிசையா போட்டதையே போட்டுக்கிட்டு வர்றீங்க. காலையில் காஃபி, பூரி, இட்லி சப்பாத்தின்னு ஒருவித மூடில்தான் பிரேக் ஃ பாஸ்ட் எடுப்பாங்க. அப்போ டாடி சமையல் ஃபுல் அண்ட் ஃபுல் நான்வெஜ்... சும்மா கரடு முரடா...அது கூட ஓகே..விடுங்க. இதைக் கூட புதுசு புதுசா போடக் கூடாதா?

வேற மாத்துங்க

வேற மாத்துங்க

இதை கன்டினியூ பண்ண முடியலேன்னா வேற நிகழ்ச்சியா மாத்துங்க. இல்லை வேற யாராவது சமைக்கறதை காட்டுங்க. உங்களுக்கு செலவு சிக்கனம்னுஎல்லாத்தையும் மக்கள் தலையில் கட்டினா எப்படி? நீங்க எது காண்பிச்சாலும் பார்ப்பாங்க என்கிற மிதப்பு..? பல பேர் சானலை மாத்தித்தான் பார்க்கறாங்க. ஆஃபீசில் இதை பத்தி பேசினா. அது வேஸ்ட் மச்சான்..அந்த நேரத்துல சானலை மாத்தி நீ இதை பாருன்னு பேசிக்கறாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+