எனக்கு 40 முறை தாலி கட்டிய ராபர்ட்! Ex -வுடன் நடிப்பது வலி! போற போக்கில் நயன்தாராவை வம்பிழுத்த வனிதா
சென்னை: "ராபர்ட் எனக்கு 40 முறை தாலி கட்டினார்" என நடிகை வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராபர்ட் மாஸ்டர் மீது தனக்கு 'பொசசிவ்னஸ்' (possessiveness) அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்ச்சை நாயகி வனிதாவின் இந்தப் பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 106 நாட்கள் வீட்டில் இருந்தார். அவருக்கு வாரத்திற்கு ₹2 லட்சம் ஊதியமாகப் பேசப்பட்ட நிலையில், 15 வாரங்களுக்கு ₹30 லட்சம் ஊதியம் கிடைத்திருக்கலாம்.

அந்தப் பணத்தைக்கொண்டு ஜோவிகா "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் துபாய் மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. இதில் நடிகை கிரண், 9 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். அவர் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தின் "சிவராத்திரி" பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ராபர்ட் மாஸ்டர், வனிதா விஜயகுமார், ஷகிலா, ஆர்த்தி, பவர்ஸ்டார் சீனிவாசன், அம்பிகா, ஸ்ரீமன், கணேஷ்கர், பாத்திமா பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் திரைப்படம் ஜூலை 11, 2025 அன்று திரைக்கு வருகிறது.
ராபர்ட் மாஸ்டருடனான உறவு குறித்து வனிதா தகவல்
"மிஸ்ஸஸ் & மிஸ்டர்" படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் நடித்த அனுபவம் குறித்து அண்மையில் வனிதா விஜயகுமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
"இந்தப் படத்தில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. எங்களுக்கு இந்த கோயிலில்தான் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். ஆனால், இதே கோயிலில் படப்பிடிப்பு நடந்தபோது கஷ்டமாக இருந்தது. தாலி கட்டும் காட்சி மட்டும் 40 தடவை எடுத்தோம். இதைப்போல் யாரும் செய்துவிடாதீர்கள். 'எக்ஸ்' (முன்னாள் காதலருடன்) நடிப்பது மிகவும் வலியையும் வேதனையையும் தருகிறது. நயன்தாரா - சிம்புவுக்குப் பிறகு நானும் ராபர்ட்டும் இதுபோன்று நடித்திருக்கிறோம். ராபர்ட் மீது எனக்கு 'போசசிவ்னஸ்' இருக்கிறது."
வனிதா விஜயகுமார் - ஒரு பார்வை
நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் மகளான வனிதா விஜயகுமார், 1995 ஆம் ஆண்டு நடிகர் விஜயுடன் இணைந்து வெளியான 'சந்திரலேகா' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர், பின்னர் திருமணம் செய்துகொண்டு திரையுலகில் இருந்து விலகினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அவருக்குப் பல பட வாய்ப்புகள் கிடைத்தன. சமீபத்தில் வெளியான பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்து அசத்தினார்.
வனிதா விஜயகுமார் தனிப்பட்ட வாழ்க்கை
வனிதா விஜயகுமார் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு சர்ச்சைகள் மூலமும் ஊடகங்களின் பேசுபொருளாக இருந்துள்ளார். இவருக்கு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. இவருக்கு விஜய் ஸ்ரீஹரி, ஜோவிகா, ஜெயந்திகா என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரின் மகள் ஜோவிகா விஜயகுமாரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
விளம்பரத்தில் தீவிரம்
தற்போது வனிதா விஜயகுமார் இயக்குநராகவும் களமிறங்கியுள்ளார். 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்ற திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 11, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் வனிதா விஜயகுமார் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்.
இந்தப் படத்தின் ஒரு விழாவிற்கு ஜோவிகா இடுப்பு தெரியும் அளவுக்குத் தாவணி அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தேவயானி மகள் எப்படி அடக்க ஒடுக்கமாக இருக்கிறார் என வனிதா மகளுடன் ஒப்பீடுகளும் நடந்தன. இதற்கு வனிதாவும் ஜோவிகாவும் கொந்தளித்து பதிலளித்தனர்.












Click it and Unblock the Notifications