அப்படி போய் இப்படி மாறிய டி.டி.. கேள்விகளால் ரசிகர்களை குழம்ப விட்டு விட்டாரே
சென்னை: தொகுப்பாளராக கலக்கி வரும் டிடி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் திவ்யதர்ஷினி கேட்ட கேள்விகளால் ரசிகர்கள் குழம்பி போய் இருக்கிறார்களாம்.
Recommended Video
இன்ஸ்டாகிராமில் டிடி போட்ட ஒற்றை ரீல்ஸ் வீடியோவை ரசிகர்கள் பலர் திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.
வழக்கம்போல சில நெட்டிசன்கள் இந்த வயசிலும் இந்த வீடியோ தேவையா என்று நக்கலாக கமெண்ட் போடுவது மட்டும் தவறவே இல்லை.

சின்னத்திரை தொகுப்பாளர்
சினிமா துறையில் ஜொலிக்கும் நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி சினிமா நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் படைபட்டாளத்தோடு வலம் வந்து கொண்டிருக்கும் தொகுப்பாளர் டிடி சமூக வலைத்தளத்தையும் விட்டு வைக்கவில்லை. இவர் எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் அனைவருக்கும் கொடுத்து வருகிறார் என்று அவருடைய தீவிரமான ரசிகர்கள் டி.டியை புகழ்ந்து வருகிறார்கள். பல பெண்கள் ரசிகர்களுக்கு இவர் முன் உதாரணமாகவும் விருந்து வருகிறார். எந்த சூழ்நிலைகளிலும் மனம் தளராமல் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து தன்னுடைய திறமையை அனைவருக்கும் காட்ட வேண்டும் என்பது டிடியின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது என்று அவருடைய ரசிகர்கள் புகழ்ச்சி மழையை பொழிய விடுகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த செயல்
ஒரு பக்கம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் என்றால் இன்னொரு பக்கம் எப்போதும் போல நெட்டிசன்கள் நெகட்டிவ் கமாண்டுகளை போர் கொடிகளாக தூக்குவதற்கு தயங்குவதே இல்லை. டி டி, அன்புடன் டிடி என்றும் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பல பிரபலங்களை பேட்டி எடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து அமர்ந்து விட்டார்.இவருடைய படபட பேச்சு பலருக்கும் பிடித்த விஷயமாகத்தான் இருந்து வருகிறது. தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவர் விஜய் டிவியில் தன்னுடைய கலைப் பயணத்தை தொடங்கி இருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

டி டி வெளியிட்ட வீடியோ
தன்னுடைய திருமண வாழ்க்கை தனக்கு பிடித்த மாதிரி இல்லை என்பதால் அதிலிருந்து வெளியே வந்து தனக்கான பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் டிடி, அடிக்கடி ரசிகர்கள் பலருக்கும் அறிவுரைகளை கூறி வருவார். ஒரு சில நாட்கள் இவர் சமூக வலைத்தள பக்கங்களில் தலைகாட்டாமல் இருந்தாலே இவருடைய ரசிகர்கள் இவரை தேடத் தொடங்கி விடுகிறார்கள். தன்னுடைய தீவிரமான ரசிகர்களின் பாசத்தை புரிந்து கொண்ட டிடியும் அவ்வப்போது செல்லும் இடமெல்லாம் வீடியோக்களையும், போட்டோக்களையும் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதில் தவறுவதில்லை. அந்த மாதிரி தான் தற்போது விதவிதமாக உடைய அணிந்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை தட்டி விட்டிருக்கிறார்.

டிடியின் கேள்வி
அக்கடான்னு நாங்க உடை போட்டா... துக்கடான்னு நீங்க தடைபோட்டா தடா..எனும் பாடலுக்கு இவர் வெளியிட்ட வீடியோ தான் தற்போது ரசிகர்களாலும் நெட்டிசன்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் இவர் விதவிதமான ஆடையோடு உரிய ஸ்டைலான ஸ்டெப்பில் எது உங்களுக்கு பிடித்தது என்று டிடி கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் இதில் எதைச் சொல்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்களாம். ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை என்று ரசிகர்கள் பலர் கமெண்ட்களில் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் வீடியோவை பார்த்து வாய் அடைத்து போய் "வாவ்" சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications