"ஆதிக்கத்தில் உச்சம்” பாக்கியலட்சுமி சீரியல்... யோசிக்கவே மாட்டீங்களா? கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களத்தை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.

தொடர்ந்து பாக்கியாவை தியாகியாக காட்டுவதற்காக கதையில் செய்யப்படும் ட்விஸ்ட்டுகள் பார்ப்பதற்கு வெறுப்பாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

லாஜிக்கே இல்லாமல் இந்த சீரியலில் தான் எல்லாமே நடக்கிறது. பாக்யாவை குறை கூறுவது மட்டும் தான் அவருடைய மாமியாரின் வேலையா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

தீராத தியாகங்கள்

தீராத தியாகங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலின் கதை ஒரு வீட்டின் குடும்ப பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடும் விதமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலின் கதை சமுதாயத்தை தவறான பாதையில் கொண்டு செல்வதாக இருக்கிறது. பெண்கள் என்றால் தியாகம் செம்மலாக தான் இருக்க வேண்டும் என்று இந்த சீரியல் சொல்லாமல் சொல்கிறதா? ஆண் என்றால் அவர் எவ்வளவு திமிர் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். ஆனால் பெண் எப்போதும் வீட்டில் அனைத்திற்கும் கெஞ்சி கொண்டு எல்லா சுமைகளையும் தலையில் தூக்கிக் கொண்டு இருக்க வேண்டுமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

குறை கூறும் மாமியார்

குறை கூறும் மாமியார்

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் கணவரான கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். தனக்கு பிடிக்காத பாக்யாவை தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று மூன்று குழந்தைகள் பிறந்து குழந்தைகளுக்கு திருமணம் செய்த பிறகு கோபி துணிச்சலாக முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் கோபி இப்படி முடிவெடுப்பதற்கு காரணம் பாக்கியா தான் என கோபியின் அம்மாவும் பாக்யாவின் மாமியாருமான ஈஸ்வரி அடிக்கடி குத்தி காட்டிக்கொண்டே இருக்கிறார். அக்கம் பக்கத்தினர் கோபி இல்லாததால் இனி பாக்கியாவால் வாழவே முடியாது வீட்டு பொறுப்புகளை எப்படி கவனித்துக் கொள்வார் என்று கேள்வி கேட்க அதையெல்லாம் நான் சமாளித்துக் கொள்வேன் என்று பாக்யாவும் ஒவ்வொரு முறையும் போராடிக் கொண்டிருக்க ஆனால் வீட்டில் இருக்கும் மாமியார் பாக்யாவை குறை மட்டும் தான் கூறிக் கொண்டிருக்கிறார்.

வெறுப்பாக இருக்கிறதாம்

வெறுப்பாக இருக்கிறதாம்

ஏற்கனவே கணவர் தான் பாக்யாவுக்கு சரியில்லை என்றால் அவருடைய மூத்த மகன் பாக்யாவின் வீட்டில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருப்பாராம். ஆனால் வீட்டில் செலவுக்கு பணம் கொடுக்க மாட்டாராம். தற்போது கோபி இந்த வீட்டை நான் விற்க போகிறேன் என்று சொன்னதற்கு எழில் நான் பணத்தை ரெடி பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்கும் செழியன் நான் பணம் தரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். ஆனால் எழில் திருமண விஷயத்தில் மட்டும் மூக்கை நுழைப்பதற்கு தனக்கு உரிமை இருக்கிறது என்று விதண்டா விதம் செய்து கொண்டிருக்கிறார். இது பார்ப்பதற்கு வெறுப்பாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

அடுத்தவங்க மேல பழியை போடுறது

அடுத்தவங்க மேல பழியை போடுறது

ஏற்கனவே கோபிக்கு பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து வைத்து தான் தற்போது அனைவரும் பாடாய் பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் எழிலுக்கும் அதே தப்பை செய்வதற்கு ரிட்டையர்டு ஹெட் மாஸ்டர் அதாவது கோபியின் அப்பா முடிவெடுத்திருக்கிறார். ஈஸ்வரி தான் இந்த வீட்டின் நாட்டாமையாக செயல்படுகிறார். பாக்யாவை எப்போதும் அடிமைப்படுத்தி வைத்துக்கொள்ள அவர் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். இதை பார்க்க வீட்டில் இருக்கும் மாமியார்களும் தன்னுடைய மருமகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தானே வரும். ஏற்கனவே சமூகத்தில் பல வீட்டில் இந்த பிரச்சனை தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாமியார் மிரட்டிக் கொண்டும் தன்னுடைய மகனுடைய வாழ்க்கையிலும் அவருக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வைக்காததால் பாக்கியாவின் வாழ்க்கை தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு தனக்கு சம்பந்தமே இல்லாதது என்கிற மாதிரி மொத்தம் பிரச்சனையும் பாக்யாவின் தலையில் வைப்பதை பார்க்கும்போது இதேதான் சில வீட்டிலும் நடக்கிறது என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் விமர்சனம்

ரசிகர்களின் விமர்சனம்

இந்த நிலையில் தன்னுடைய சுய கவுரவத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் அனைத்து சுமைகளையும் தன்னுடைய தலையில் தனியாக சுமக்க வேண்டும். தான் செய்யாத தவறுக்கும் தான் பொறுப்பாக வேண்டும். அப்படி இருந்தால் தான் கதாநாயகி என்கிற மாதிரி இந்த சீரியல் சமூகத்தில் பிரதிபலிப்பதாக சீரியலின் கதையை விமர்சித்து பல்வேறு ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+