சத்தம் இல்லாமல் எங்கேஜ்மென்ட் செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் மகேஷ் எளிமையாக எங்கேஜ்மென்ட் முடித்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலிலும் நடிகர் மகேஷ் நடித்து வருகிறார்.
நிஜத்தில் மட்டுமல்லாமல் சீரியலிலும் தற்போது தான் இவருக்கு திருமணம் முடிந்திருக்கிறது.

எளிமையான எங்கேஜ்மென்ட்
மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்ததும் திருமண கொண்டாட்டங்கள் கலை கட்ட தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை பிரபலங்களும் ஒரு சிலர் திடீர் திருமணங்களும், எங்கேஜ்மென்டுகளும் செய்து வருகின்றனர். அப்படி ஒரு நபர்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் மகேஷும் திடீர் என்கேஜ்மென்ட் செய்து சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மகேஷ் இப்போதுதான் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இவருக்கு பதில் இவர்
ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கு பதில் இவர் என்கிற மாதிரி பல கேரக்டர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றனர். இந்த சீரியல் தொடர்ந்து பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக தற்போது சில நாட்களுக்கு முன்புதான் ஆயிரம் எபிசோடு கொண்டாட்டங்களை கொண்டாடி இருந்தனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்த பல நடிகர்கள் இந்த சீரியலில் இல்லை .முக்கியமான கதாபாத்திரங்களில் கூட பல மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. அதில் துணை கதாபாத்திரங்களில் சொல்லவே வேண்டாம் பலர் இந்த மாதங்கள் நடித்து அடுத்த மாதங்கள் விலகி இருக்கிறார்கள்.

திடீர் அறிமுகம்
அந்த மாதிரி தான் திடீரென பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகமான மகேஷும் இவர் ஏற்கனவே முத்தழகு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் இவருடைய வருகையின் பிறகுதான் இந்த சீரியலில் பல்வேறு பிரச்சனைகளும் வந்தது. சமீபத்தில் தான் இவருக்கு இந்த சீரியலில் திருமண காட்சிகள் நடந்தது மீனாவின் தங்கையை திருமணம் செய்திருக்கும் நபராக இந்த சீரியலில் மகேஷ் நடித்து வருகிறார்.

வருங்கால மனைவி
ஏற்கனவே ஐஸ்வர்யாவை காதலிக்கும் போது ஒரு நடிகர் அதே கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது அவர் விலகிய பிறகு அந்த கேரக்டரில் மகேஷ் நடித்து வருகிறார் .இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் எளிமையாக எங்கேஜ்மென்ட் முடிந்து இருக்கிறது. இவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .இவருடைய வருங்கால மனைவியின் பெயர் பிரேமலதாவாம். இவர் மீடியா துறையை சார்ந்தவர் இல்லை என்பது மட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் அவரைப் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications