7 வருஷமாகிடுச்சு.. இனி என் ஆசை நிறைவேறுமான்னு தெரியல, கலங்கிய மணிமேகலை.. பீல் பண்ண வைத்த வார்த்தை
சென்னை: விஜே மணிமேகலை டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பலநாள் ஆசை மற்றும் கனவு குறித்து கண்கலங்க பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக கமெண்ட்டுகளை பெற்று வருகிறது. பல ரசிகர்கள் மணிமேகலைக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
கல்லூரி படிக்கும் போது தொகுபாளினியாக மாறிய விஜே மணிமேகலை 90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவர் இப்போது உள்ள 2k கிட்ஸ்களுக்கும் பரிச்சயம் ஆனவர். ஆரம்பத்தில் ஸ்டார் மியூசிக்கில் தொகுப்பாளினியாக வேலைக்கு சேர்ந்தார். கல்லூரி படிக்கும்போது இவருக்கு கிடைத்த வாய்ப்பால் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு
ஏழு வருடங்களாக அந்த சேனலிலேயே அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் நடன மாஸ்டர் ஆன ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹுசைனை காதலிக்கும் விஷயத்தை முதல்முறையாக தன்னுடைய தந்தையிடம் தான் மணிமேகலை கூறியிருக்கிறார். அதற்கு ஹுசைன் பெயரை கேட்டதும் அவருடைய தந்தை அதிர்ச்சி அடைந்து திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
காதல் திருமணம்
பல பெற்றோர்களைப் போல மணிமேகலையின் பெற்றோரும் மதத்தை காரணம் காட்டி திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் மணிமேகலை நான் ஹுசைனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விடாப்பிடியாக இருந்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து இருக்கிறார்.
வாழ்க்கையில் முன்னேற்றம்
நண்பர்கள் முன்னிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மணிமேகலை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன புதியதில் அதிகமான கஷ்டங்கள் பட்டிருந்தாலும் இப்போது மணிமேகலை வாழ்க்கையில் நல்ல ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். அவருடைய சொந்த ஊரில் பெரிய பண்ணை வீடு ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறார். சென்னையில் வீடு வாங்கி இருக்கிறார். கார் பைக் என்று ஆடம்பரமாக மணிமேகலையின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எமோஷனல் வீடியோ
ஆனாலும் மணிமேகலையில் குடும்பத்தினர் இதுவரைக்கும் பேசவில்லை. சமீபத்தில் தான் அவருடைய தம்பி மற்றும் அம்மா பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய அப்பா இன்னமும் பேசவில்லை. இதுகுறித்து பல இடங்களில் மணிமேகலை பீல் பண்ணி பேசி இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பக்தி ரவுண்டு நடைபெற்று இருக்கிறது. அதில் மணிமேகலை தன்னுடைய நீண்ட நாள் கனவு குறித்து கண்கலங்க பேசி இருக்கிறார்.
ஏழு வருட வருத்தம்
அதாவது அந்த நிகழ்ச்சியில் மனதில் எதையாவது நினைத்துக் கொண்டு காணிக்கையை போட சொல்லி மணிமேகலையோடு தொகுப்பாளராக இருக்கும் விஜய் சொல்ல, மணிமேகலை எமோஷனல் ஆகி இருக்கிறார். அப்போது நான் இந்த விஷயத்தை வெளியே சொல்லவா வேண்டாமா என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஒருவேளை நான் இந்த இடத்தில் என்னுடைய மனதில் இருக்கும் கஷ்டம், கவலையையும் சொன்னால் இதை போய் இந்த இடத்துல பேசணும்னு நினைப்பாங்க.
மணிமேகலை எமோஷனல்
அதனால நான் என்னுடைய கஷ்டத்தை வெளியே சொல்லாமலேயே காணிக்கையை போடுகிறேன் என்று அந்த குடத்திற்குள் காணிக்கையை போட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து விஜய் பேசும்போது மணிமேகலை எவ்வளவு ஜாலியாக இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை பேசும்போது மட்டும் உடைந்து போய்விடுவார். எல்லா பெற்றோர்களும் தங்களுடைய மகள் நல்லா இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
மணிமேகலையின் ஆசை
அது போல மணிமேகலையின் பெற்றோரும் ஆசைப்பட்டு இருக்கிறார்கள். அவருடைய ஆசைப்படி இப்போது மணிமேகலை நல்லா தான் இருக்கிறார். அதனால் மணிமேகலை ஆசைப்பட்ட மாதிரி அவருடைய அப்பா சீக்கிரமாக இந்த நிகழ்ச்சியில் வருவார் என்று பேசி இருக்கிறார். அதற்கு மணிமேகலை அதற்கு வாய்ப்பில்லை ஏழு வருஷம் ஆகிடுச்சு. அப்பா இன்னும் அவருடைய முடிவிலிருந்து மாறவில்லை.
ரசிகர்கள் ஆறுதல்
இனிமேல் வருவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மணிமேகலையின் ஆசை சீக்கிரமாக நிறைவேறும், அவருடைய அப்பா விரைவில் மணிமேகலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications