Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவியை விட்டே போவதாக தகவல் வந்ததே.. இப்போ விஜே பிரியங்கா.. இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல வாரங்களாக உலவி வந்த ஊகங்களுக்கும், சமூக ஊடக வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் "ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6"-ஐ தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இந்த சீசனில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சில எபிசோட்களில் பிரியங்கா இல்லாதது ரசிகர்களிடையே குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக அவர் தனது இரண்டாவது திருமணத்தின் போது, டிவி சேனலுக்கு வராமல் விடுமுறை எடுத்திருந்தார். இதற்கு இடையே அவர் விஜய் டிவியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தன.

Priyanka Deshpande Vijay TV

அவர் கலர்ஸ் டிவிக்கு செல்வார் என்றும் கூறப்பட்டது. இப்படி வெளியான தகவல்கள் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அவர் சூப்பர் சிங்கரில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதோடு இந்த வதந்திகள் குறித்து அவர் எதுவும் பேசாததால் சர்ச்சை எழுந்தது. இதனால் ரசிகர்கள் அவர் தொலைக்காட்சியில் இருந்து விலகுகிறாரா என்று கேள்விகளை எழுப்பினர்.

பிரியங்காவின் வருகை

விஜய் டிவி "ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6"-க்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோவை வெளியிட்டபோது, இந்த அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதில் பிரியங்கா தனது வழக்கமான உற்சாகத்துடனும், அழகிய தோற்றத்துடனும் மீண்டும் ப்ரோமோவில் இடம் பிடித்துள்ளார்.

இந்த ப்ரோமோ மூலம் அவர் திரும்பி வந்ததை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், பிரியங்கா வேறு சேனல்கள் எதற்கும் போகவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரியங்கா மீண்டும் வந்ததை அறிந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் வெளிப்படுத்தி உள்ளனர்

"பிரியங்கா இல்லாமல் விஜய் டிவி முன்பு போல் இல்லை!" என்று ஒரு சிலர் பதிவிட்டு உள்ளனர்

மற்றொரு பயனர், "அவர் இல்லாமல் ஸ்டார்ட் மியூசிக் முழுமையடையாதது போல் இருந்திருக்கும். அவர் திரும்பி வந்தது மகிழ்ச்சி" என்று கருத்து தெரிவித்தனர்.

பிரியங்கா நீண்ட காலமாக சேனலின் மிகவும் விரும்பப்பட்ட முகங்களில் ஒருவராக இருந்து வருகிறார். சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளில் அவரது நகைச்சுவை உணர்வு, இயல்பான பேச்சு மற்றும் பார்வையாளர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பது போன்ற காரணங்களால் அவர் அனைவராலும் விரும்பப்படுகிறார்.

வதந்திகள் குறித்து மௌனம்

இந்த ப்ரோமோ பிரியங்கா மீண்டும் தொலைக்காட்சிக்கு வருவதை உறுதி செய்தாலும், அவர் தனது தற்காலிக இடைவெளிக்கான காரணம் அல்லது வெளியேறும் வதந்திகள் குறித்து இன்னும் பதிலளிக்கவில்லை. அவரது இரண்டாவது திருமணம் குறித்தும் அவர் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இரண்டாவது திருமணம் பற்றி புகைப்படங்களை வெளியிட்டாலும் அதை பற்றி பெரிதாக பேசாமல் மௌனம் காத்து இருக்கிறார் இது ரசிகர்களிடையே ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தனிப்பட்ட விருப்பமா அல்லது வதந்திகளைப் புறக்கணிக்கும் முயற்சியாக இருக்குமோ, எதுவாக இருந்தாலும் பிரியங்கா மீண்டும் வந்தது ரசிகர்கள் பலரும் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் விஜய் டிவியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆனால் சிலர் பிரியங்கா அதே ஸ்டைலில் கத்தி கத்தி பேசுவார். அவருக்கு பதில் வேறு ஒருவர் வரலாம். ஏஞ்சலின் போன்றவர்கள் சிறப்பாக வித்தியாசமாக செய்கிறார்கள்.அப்படிப்பட்டவர்கள் தொடரலாம் என்றும் கருத்துக்களை வைத்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+