Watermelon Star: திவாகருக்கு விஜய் டிவி வைத்த 'செக்'! இந்த அசிங்கம் தேவையா? இப்படி கேவலபடுத்தீட்டாங்களே
சென்னை: சமூக வலைதள பக்கங்களில் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் என்பதோடு, பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று சமீபத்தில் வெளியேறியவர் தான் திவாகர். அவரை தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அது இது எது' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்
அடிப்படையில் மருத்துவரான திவாகர், சமூக வலைதளத்தில் ரீல்ஸ் செய்வதன் மூலம் பிரபலமானார். எவ்வளவுதான் கிண்டல்கள், விமர்சனங்கள் வந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் அவர் ரீல்ஸ் செய்தார்.

திவாகர் பிரபலமாகக் காரணமே, 'கஜினி' திரைப்படத்தில் நடிகர் சூர்யா அசினிக்குத் தெரியாமல் தர்பூசணி சாப்பிட்டபடியே தனது ஊழியர்களைப் போக சொல்லும் காட்சியை திரும்பி பார்த்து ரீல்ஸாக செய்ததுதான். இந்த ரீல்ஸ் கடும் கேலிக்குள்ளானாலும், திவாகர் பெரியளவில் பிரபலமானார். இதன் மூலம் அவர் 'வாட்டர் மெலன் ஸ்டார்' என்று அழைக்கப்பட்டார்.
பேச்சும் சர்ச்சையும்
திவாகர் நடிகர் சூரி போன்றவர்களைக் குறித்துப் பல சர்ச்சைக் கருத்துகளைப் பேசி வந்தார். மேலும், தான் நடிப்பு அரக்கன் என்றும், நடிகர் சிவாஜிக்குச் சமமானவராக நடிப்பதாகவும் தெரிவித்து வந்தார். இதனால், திவாகரைப் பலரும் விமர்சித்தனர். திவாகர் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார்.
விமர்சனம்
அவர் தன் உடன் இருந்த போட்டியாளரான கானா வினோத்தை தகுதி, தராதரம் இல்லை எனப் பல்வேறு வகையில் விமர்சித்தார். மேலும், கரிச்சட்டி வாயன் போன்ற வார்த்தைகளாலும் காயப்படுத்தினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளத்தில் கடும் கேலிக்குள்ளானது.
பிக்பாஸ் வீட்டிற்குள் சரியாக டாஸ்கை விளையாடாத திவாகர், ரீல்ஸ் செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டி வந்தார். இதையடுத்து சமூக வலைதளப் பயனாளர்கள் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார்.
விஜய் டிவியின் கலாய்ப்பு அரங்கம்
இந்நிலையில் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர், விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'அது இது எது' நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் அவரை அறிமுகப்படுத்தும்போது தொகுப்பாளர் "தர்பூஸின் நட்சத்திரம், விஜய் டிவி கண்டுபிடித்த விசித்திரம், தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன்" என்று சொல்கிறார். இதற்குப் பதிலளித்த நடிகை நிஷா, "ஐயா அவன் நடிப்பு அரக்கன் இல்லையா நடிப்பு கிறுக்கன்யா" என்று சொல்கிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதளப் பயனாளர்கள், 'வாட்டர் மெலன் ஸ்டாரை' விஜய் டிவி வச்சு செய்வதாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸில் நடந்த விமர்சனங்களுக்குப் பிறகு, விஜய் டிவி நிகழ்ச்சியிலேயே அவரை இப்படி கலாய்த்தது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் திவாகருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று பலர் சொல்லி வந்த நிலையில் அவரை ரெட் கார்டு கொடுக்காமல் வெளியே அனுப்ப இது தான் காரணமா? என்று கலாய்த்து வருகின்றனர்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications