
பாக்கியலட்சுமி கோபியின் வாழ்க்கையில் இத்தனை பெரிய துயரமா? இதை மறைத்து தான் இப்படி நடிக்கிறாரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகனாக கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷின் ஆரம்பகால வாழ்க்கையில் குறித்து அவர் பேசிய வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்
சீரியலில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நான் அப்பா அம்மா இல்லாத குழந்தைகளை பார்த்தாலே பதறிப் போய் விடுவேன் என்பதை குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி.

பாக்கியலட்சுமி கோபி
சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி என்ன மாதிரி கேரக்டரில் ஒருவர் நடிக்கிறார்களோ அதே கேரக்டரை அவர்களுடைய நிஜ வாழ்க்கையிலும் ஒப்பிட்டு பார்ப்பது தான் ரசிகர்களுடைய இயல்பாக இருந்து வருகிறது. தங்களுடைய நடிப்பை பலரும் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு சில நடிகர்கள் கேரக்டராகவே மாறிவிடுகின்றனர். அந்த வகையில் அதிகமாக சின்னத்திரையில் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகராக பாக்கியலட்சுமி சீரியல் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் இருந்து வருகிறார். இவர் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து கழுவி கழுவி ஊத்தப்பட்டு வருகிறார். ஆனாலும் அது தனக்கு கிடைத்த நடிப்பின் பாராட்டு என்று அவர் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்.

இரண்டு பொண்டாட்டிகாரர் நிலைமை
பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படும்போது அடிக்கடி இவர் லைவ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவார். இரண்டு பொண்டாட்டியை திருமணம் செய்து கொண்டால் ஒரு ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வரும் என்பதை இவர் தத்ரூபமாக நடித்துக் காட்டி வருகிறார். முதல் மனைவி தனக்கு பிடிக்காத மனைவியாக இருந்தாலும், குழந்தைகள் மீது தனக்கு இருக்கும் பாசத்தையும் தன்னுடைய காதலியின் மீது தனக்கு இருந்த காதலால் பல போராட்டங்களுக்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கையிலும் அவர் படும் வேதனையை இவருடையதார்த்தமான நடிப்பில் அனைவருடைய திட்டல்களை மட்டுமல்லாமல் பல நேரங்களில் பலரையும் சிரிக்க வைக்கும் வருகிறார்.

அப்பா முக்கியமா அம்மா முக்கியமா
சமீபத்தில் கூட வீடியோ ஒன்றை வெளியிட்டு எனக்கு இந்த சீரியலில் மனைவியை தான் பிடிக்கவில்லை ஆனால் என்னுடைய குழந்தைகளை பிடித்திருக்கிறது .என் குழந்தை இடம் அப்பா பெருகியதா? அம்மா பெரியதா என்று நான் கேட்டிருந்தேன். ஆனால் அது எனக்கே மனதை நெருடும் விதமாக இருக்கிறது. அதனால் வாழ்க்கையில் அம்மா முக்கியமா அல்லது அப்பா ஒரு குழந்தைக்கு முக்கியமா என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்டிருந்தார். இதை குறித்து பலரும் பதிலை அளித்துக் கொண்டிருந்தனர்.

பெற்றோர்களை இழந்த கோபி
இந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் இவர் குழந்தையாக இருக்கும்போதே இவருடைய பெற்றோரை இழந்து விட்டாராம். அதற்குப் பிறகு பல போராட்டங்களுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் ஒவ்வொரு இடங்களிலும் கஷ்டங்களை அனுபவித்து தான் தன்னுடைய திறமையை வெளிக்காட்டிக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே நடிப்பின் மீது இருந்த ஆசையால் இவர் நடிப்பிற்கு வந்தாலும் ஆரம்பத்தில் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தான் இருந்திருக்கிறது. இதனாலே இவருக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளை பார்க்கும்போது இவரை அறியாமலே அவர்கள் மீது பாசம் ஏற்பட்டு விடுமாம். அந்த குழந்தைகளுக்காக அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்று இவர் உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து இவருக்குள் இப்படி ஒரு மனதா என்று பாராட்டி வருகிறார்கள்.