பிக் பாஸுக்குள் இருக்கும்போது ஆதரவு கொடுத்து வந்த கணவர்... வெளியே வந்ததும் ரச்சிதா கூறிய பதில்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதா முதல் லைவ் வந்துள்ளார்.
ரசிகர்கள் கேள்விகளுக்கு முதல் முறையாக ரச்சிதா பதில் அளித்திருக்கிறார்.
ரச்சிதாவின் பதிலை பார்த்த ரசிகர்கள் அவருடைய கணவரை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எதிர்பாராத வெளியேற்றம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று ரச்சிதா வெளியேற்றபட்டார். இந்த வாரம் இவர் வெளியேற மாட்டார் என்று இவருடைய ரசிகர்கள் அதிகமாக நம்பி இருந்த நேரத்தில் கடைசியில் இவருடைய வெளியேற்றம் வந்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்து இந்த வாரத்தில் மைனா வெளியேறுவார் என்றும் அதை தொடர்ந்து ஷிவின் வெளியேறுவார் என்றும் கூறி வந்த நிலையில் சொற்ப வாக்குகளின் வித்தியாசத்தில் ரச்சிதா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

கணவரின் ஆதரவு
ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவருடைய கணவர் அவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வந்தார். இந்த நிலையில் ரச்சிதா வெளியேற போகிறார் என்ற தகவல்கள் வெளியான நேரத்தில் கூட அவர் ரச்சிதாவோடு சேர்ந்து நடித்த நாச்சியார் புறம் எனும் சீரியலில் டைட்டில் பாடலை தன்னுடைய ஸ்டோரியில் வைத்து ரச்சிதாவிற்கு தன்னுடைய ஆதரவையும், தான் எப்போதும் பிரச்சினைகளுக்கு துணையாக இருப்பேன் என்பதையோ நிரூபித்து வந்தார். அவருடைய கணவருக்கும் சிறு கருத்து வேறுபாடு இருந்தாலும் இவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

நிஜ கேரக்டர் இதுதான்
ஒவ்வொரு முறையும் ரச்சிதா நாமினேஷனில் இருக்கும்போது அவருடைய கணவர் ரச்சிதாவிற்கு தான் தன்னுடைய வாக்கு என்பதை ஸ்கிரீன் ஷாட் மூலமாக நிரூபித்து அனைவரிடமும் வாக்கு சேகரித்து வந்தார். இந்த நிலையில் வெளியே வந்த ரச்சிதா முதல் முறையாக லைவில் ரசிகர்களிடம் பேசி இருக்கிறார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் வீட்டில் எப்படி இருக்கிறனோ அப்படித்தான் இருந்தேன். என்னுடைய நிஜ கேரக்டரில் தான் நான் உள்ளே இருந்து வந்தேன். அதுபோல இதுவரைக்கும் எனக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

யாரையும் ஜட்ஜ் பண்ண கூடாதாம்
இந்த நிலையில் நான் எதிர்பார்க்காத சிலருடைய ஆதரவை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. யாரையும் இப்படித்தான் என்று பார்த்ததும் ஜட்ஜ் பண்ண கூடாது. இதை நான் இப்போதுதான் புரிந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ இவர் தினேஷை பற்றி தான் இந்த வார்த்தை கூறினாரா? அப்படி என்றால் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்களா? என்று கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர். தினேஷ் பற்றி எந்த விரிவான தகவல்களையும் ரச்சிதா குறிப்பிடாமல் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பல்வேறு தகவல்களை பேசி இருக்கிறார். அதிலும் குறிப்பாக அசீம் பற்றி ரச்சிதா பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications