கட்ஸ் இருந்தா இதை கேளுங்க? அந்த வார்த்தையை சொல்லலாமா? கடுப்பாகி பேசிய மைனா நந்தினியின் கணவர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
மைனா நந்தினியை பார்த்து ரசிகர்கள் பலரும் அவர் விஜய் டிவி ப்ராடக்ட் அதனால் தான் உள்ளே இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். அதற்கு அவருடைய கணவர் பதில் கூறியிருக்கிறார்.
மைனா நந்தினிக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் அவருடைய கணவர் பேசிய வார்த்தை பலருடைய பாராட்டையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது.

இறுதி கட்டம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இப்ப வரைக்கும் ஐந்து போட்டியாளர்கள் இருக்கின்றனர். கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் பணப்பெட்டியை அமுதவாணன் தூக்கிக்கொண்டு வெளியேற இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் போக விக்ரமன்,அசீம், ஷிவீன், மைனா என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே கடைசி இருக்கின்றனர். இந்த வரிசையில் இன்று இந்த சீசனுக்கு கடைசி வாக்குப்பதிவு நாள். இந்த நிலையில் இந்த சீசனில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு சமூக வலைத்தளத்தில் அதிகமாக எழுப்பப்பட்டு வருகிறது.

கணவருடைய கேள்வி
இதே நேரத்தில் மைனா நந்தினியை பற்றி ரசிகர்கள் பலரும் எழுப்பும் கேள்விக்கு முதல் முறையாக அவருடைய கணவர் பதில் கொடுத்திருக்கிறார். அதில் மைனா பிக் பாஸ் வீட்டிற்குள் நிலைத்திருப்பது அவர் விஜய் டிவி ப்ராடக்ட் என்பதால் தான் அவர் இத்தனை நாட்கள் உள்ளே இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். இதை கேட்கும் போது எனக்கு கடுப்பாக இருக்கிறது. இதற்கு முன்பு இந்தே வீட்டிற்குள் எத்தனையோ பேர் விஜய் டிவியை சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் நல்ல பெயரோடு வெளியே சென்றிருக்கிறார்கள். அப்படி விஜய் டிவி ப்ராடக்ட் உள்ளவர்களை மட்டும் விஜய் டிவி காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்றால் அனைத்து போட்டியாளர்களையும் காப்பாற்ற வேண்டியது தான் இருக்கும் ஆனால் அப்படியா செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வேதனையாக இருக்கிறது
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேறிய ரச்சிதாவிற்கு இல்லாத ரசிகர்களா? மைனாவுக்கு இருக்கிறார்கள். அவர் விஜய் டிவியை சார்ந்தவர்தான். அவருக்கு பிக் பாஸ் என்ன சிறப்பு சலுகையா கொடுத்தது. பிக் பாஸ் எல்லோருக்கும் சம சலுகை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் வேண்டுமென்றே ஒருவருடைய வளர்ச்சியை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக இது சமூக வலைதளத்தில் நடப்பது தான் ஆனால் தொடர்ந்து ஒரே வார்த்தையை கூறிக் கொண்டிருப்பது தான் வேதனையாக இருக்கிறது. மைனா ஒவ்வொரு இடத்திலும் அவருடைய குரலை பதிவு செய்து அவருடைய விளையாட்டையும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று கூறியிருக்கிறார்.

அங்க போய் கேட்கணும்
அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் மீதமிருக்கும் நபர்களில் அமுதவாணனும் விஜய் டிவியை சார்ந்தவர் தான். விக்ரமன சீரியலில் தான் ஆரம்பத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அசீம் சீரியல் நடிகர் தான். இந்த வரிசையில் மைனாவிற்கும் ரசிகர்கள் ஓட்டு போடாமல் பிக் பாஸுக்கு மைனாவை வைத்து என்ன பிரயோஜனம் இருக்கப்போகிறது. ரசிகர்களிடம் ஒரு வரவேற்பு இருந்தால் தானே பிக் பாஸ் அவரை உள்ளே வைத்திருக்க நினைப்பார்கள் இல்லை என்றால் தான் வெளியேற்றி விடுவார்களே இதில் கஷ்டப்பட்டு விளையாடினாலும் அதை பாராட்டுவதில்லை. ஆனால் இது அப்படித்தான் இப்படித்தான் என்று வதந்தி மட்டும் பரப்புகிறார்கள் என்று தன்னுடைய வேதனையை கொட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்படி பேசுறவர்களுக்கு உண்மையில் கட்ஸ் இருந்தால் EVPல தான் செட் இருக்கிறது. அங்கே போய் கேளுங்கள் எதற்காக மைனாவை சேவ் செய்கிறீர்கள் என்று என கூறி இருக்கிறார். இதைக் குறித்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications