எதிர்நீச்சல் ஜனனியின் இன்னொரு முகம்..! இதுதான் அவருடைய நிஜமான கேரக்டராம்... லீக்கான புகைப்படங்கள்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி யாக நடிக்கும் மதுமிதாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.
சீரியலில் நடிப்பதெல்லாம் இவர் நடிப்பு மட்டும் தானாம், ஆனால் நிஜ கேரக்டரே வேறு மாதிரி என்று கூறியிருக்கிறார்.
அப்பா பேச்சே வேத வாக்கு என்று வாழ்ந்து வருபவர் ஜனனி ஆனால் அதற்கு அப்படியே எதிர்மறையாக இருப்பவராம் மதுமிதா.

பெங்களூரு பொண்ணு
சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி, அதில் நடிகர்கள் நடிக்கும் கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறார்கள் அதுபோல தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதாவும் ரசிகர்களின் மனதில் இருந்து வருகிறார். இவர் பெங்களூருவை சேர்ந்த வராம் .அங்கே தான் கன்னட நடிகையாக நான்கு வருடங்கள் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் இவர் தமிழில் சீரியலில் நடிக்க வேண்டும் என்று அதிகமாக ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தாராம்.

வெளியான புகைப்படம்
தமிழில் இவருக்கு முதல் முதலாக சன் டிவியில் அதுவும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் தன்னுடைய திறமையை காட்டி தற்போது தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார். எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி யாக நடித்த ரசிகர்கள் இவரை அதே கேரக்டராகவே நிலை நிறுத்திக் கொண்டனர். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இவர் கையில் விளக்குகளை வைத்துக்கொண்டு நெற்றி முழுக்க திருநீறை அணிந்து பக்தி பழமாக காட்சி அளிக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது ஜனனியா என்று ஆச்சரியத்தோடு கேட்டு வருகிறார்கள்.

மதுமிதா வேற மாதிரி
அதற்கு ஜனனி வேறு, மதுமிதா வேறு இது மதுமிதா. சீரியலில் பார்க்கும் ஜனனி நான் கொஞ்சம் கூட கிடையாது. அந்த சீரியலில் ஜனனி தன்னுடைய அப்பா பேச்சே வேத வாக்கு என்று அப்படியே அதற்காக வேலைகளை செய்து வருவார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய குடும்பத்திற்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் சிங்க பெண்ணாக இருந்து வருகிறார். தற்போது தான் தனக்கு எதிராக இருக்கும் குடும்பத்தை விட்டு அவர் பிரிந்து வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் மதுமிதா நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் கூட அப்படி கிடையாது. தான் அப்பா சொன்னால் கேட்பேன். ஆனால் முழுதும் அப்படியே கேட்டு நடக்க மாட்டேன். நான் என் மனதில் தோன்றுவதை நான் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

வைராக்கியம் அதிகம் தான்
அதோடு மதுமிதாவிற்கு தலைமுடியை கட்டையாக வெட்டிக்கொண்டு பெரிய பைக்குகளில் ஜாலியாக சுற்றுவது ரொம்பவே பிடிக்குமாம். அதுமட்டுமல்லாமல் யாராவது இவரிடம் இது உன்னால் பண்ண முடியாது என்று சொன்னால் அவர் அதை மனதில் அப்படியே நிறுத்தி விடுவாரா? உங்கள் முன்பு நான் அதை செய்தே விடுவேன் என்று இவர் விடாப்பிடியாக அதை செய்து முடித்தால்தான் திருப்தி அடைவாராம். அந்த அளவுக்கு வீம்பு பிடித்தவராம். அதுமட்டுமில்லாமல் இவர் நிஜ வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடித்தவர் தானாம். ஏனென்றால் இவர் இதற்கு முன்பு நடித்த ஒரு சீரியலில் இவர் நடிப்பு சரியாக இல்லை என்று ஒரு டைரக்டர் அடிக்கடி குறை கூறிக்கொண்டு இருந்தாராம். அதனால் அந்த சீரியலில் இருந்து மதுமிதா விலகி விட்டாராம். தன்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொண்ட மதுமிதா தற்போது நடித்து வரும் சீரியலின் ப்ரோமோவை பார்த்து அதே டைரக்டர் இவருக்கு உன்னுடைய நடிப்பு அழகாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருந்தாராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications