எதிர்நீச்சல் கதாநாயகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அட எதிர்பார்க்கலையே இவருக்குத்தான் அதிகமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியலான எதிர்நீச்சல் சீரியலின் நடிகர்களின் ஒரு நாள் சம்பள விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த சீரியலில் அண்ணன் தம்பியாக நான்கு நடிகர்கள் நடித்தாலும் அவர்களில் யார் அதிகமாக சம்பளம் வாங்குவார்கள் என்ற தகவல்கள் வெளியானதன் அடிப்படையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நடந்து இருக்கிறது.

ஆதி குணசேகரன்

ஆதி குணசேகரன்

ஒரு கதையின் வெற்றிக்கு அந்த சீரியலின் வில்லன் சிறப்பாக அமைந்தாலே அது வெற்றி பெற்று விடும் என்று நிரூபிக்கும் வகையில் தான் எதிர்நீச்சல் சீரியலின் வில்லனாக குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து மிரட்டி கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவர் வில்லனா? நல்லவரா? கெட்டவரா? என்று யூகிக்க முடியாத வகையில் பல்வேறு கேரக்டரை அடிக்கடி காட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு இயக்குனராகவும் திரைப்பட நடிகராகவும் இருந்த மாரிமுத்து முதல் முறையாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலுக்காக 20,000 ரூபாய் சம்பளம் பெற்று வருகிறாராம்.

ஞானம்

ஞானம்

எதிர்நீச்சல் குடும்பத்தில் இரண்டாவது அண்ணனாக இருக்கும் ஞானம் இவர் எப்போது எப்படி இருப்பார் என்றே புரிந்து கொள்ள முடியாது. இந்த வீட்டில் அமைதியின் சொரூபமாக இருந்தாலும் சில நேரங்களில் இவர் பேசும் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும் பல நேரங்களில் இவரும் என்னுடைய அண்ணனுக்கு சலித்தவர் அல்ல என்று நிரூபித்து வருகிறார். இதுவரைக்கும் பல சீரியல்களில் நடித்து இருந்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்திருக்கிறாராம். சீரியலில் மட்டுமல்லாமல் ஈவண்ட் ஆர்கனைசிங் பண்ணும் வேலையும் பார்த்து வருகிறார். இவர் இந்த சீரியலில் ஒரு நாளைக்கு சம்பளமாக 13 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை பெற்று வருகிறாராம்.

கதிர்வேல்

கதிர்வேல்

சிலரை பார்த்தாலே அடிக்கணும் என்றும் தோன்றும் திட்டனும் என்று தோணும் அந்த மாதிரி தான் ஒரு முரட்டுத்தனமான கேரக்டராக இருக்கும் கதிர் கேரக்டரில் நடிக்கும் நடிகரின் பெயர் விபுராமன். இவருடைய உண்மையான பெயர் ஜெகதீஷ் தானாம். ஆனால் பலரும் இவரை விபு என்றுதான் அழைப்பாராம். இவர் இந்த சீரியலில் வருவதற்கு முன்பு அநாகரிகம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவிற்கு நுழைந்து இருக்கிறார். அதற்குப் பிறகு அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் எதிர்பார்த்தது கிடைக்காததால் முதல் முறையாக எதிர்நீச்சல் சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த சீரியலுக்கு இவர் சுமார் 12,000 ஒரு நாளைக்கு சம்பளமாக பெற்று வருகிறார்.

சக்தி

சக்தி

எதிர்நீச்சல் சீரியலில் அம்பியாகவும், அந்நியன் ஆகவும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் சக்தி கேரக்டரில் நடிப்பவரின் பெயர் சபரி பிரசாத். இவர் இதற்கு முன்பு தறி என்ற சீரியலில் மூலமாக சின்னத்திரைக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஒரு பிசினஸ்மேனாக இருந்த இவர் காலேஜ் படிக்கும் போது ஒரு சில ஷார்ட் பிலிம் களில் நடித்தும், இயக்கியும் இருக்கிறாராம். ஒரு இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வரும் இவர் எதிர்நீச்சல் சீரியலில் சக்தி கேரக்டரில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பை புரிந்து கொள்ள முடியாமல் ரசிகர்கள் தவித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலுக்காக இவர் ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+