புது கார் வாங்கிய சந்தோஷத்தை விடவும், இதுதான் முக்கியம்.. மகாலட்சுமி வெளியிட்ட மகிழ்ச்சியான பதிவு
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் புது கார் வாங்கிய மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது அதைவிட எனக்கு இதுதான் முக்கியம் என்று வெளியிட்ட பதிவு ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வரும் மகாலட்சுமி ரவீந்தர் தற்போது வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.

எளிமையான இரண்டாம் திருமணம்
சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் பலர் காண்டாகி இருக்கின்றனர். சமீபத்தில் தான் மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்திருந்தது. இவருடைய இரண்டாவது திருமணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்து வருகிறது. மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். முதல் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்ட நிலையில் ஒரு சில ஆண்டுகள் தன்னுடைய ஒரே மகனோடு தனியாகத்தான் மகாலட்சுமி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் ரவீந்தரரை எளிமையான முறையில் திருமணம் செய்திருந்தார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவான ஜோடி
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இப்போது வரைக்கும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் மட்டும் குறைந்த பாடு இல்லை. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமணத்திற்கு பிறகும் சற்றும் ஓய்வு எடுக்காமல் பிஸியாகவே இருந்து வருகிறார்கள். அடிக்கடி இவர்கள் எடுக்கும் போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு மேலும் வெறுப்பேற்றி வருகிறார்கள். 90ஸ் கிட்ஸ்கள் பலர் ரவீந்தரை பார்த்து பொறாமைப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

நெகட்டிவ்வர்களை கண்டு கொள்வதே கிடையாது
தயாரிப்பாளர் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து வருவதால் அவர் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர்தான். ஆரம்பம் முதலே அவரைப் பற்றி அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்குமாம். அது எல்லாம் அவர் கண்டு கொண்டதே கிடையாது. தற்போது கூட இவர் உடலளவில் தனக்கு சம்பந்தம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்று பலரும் காண்டாகி கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அதை எல்லாம் ஒரு துளி அளவு கூட இவரை பாதிக்கவில்லை என்று இவர் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் நீங்கள் கலாய்ப்பவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதை கண்டு கொள்ளாமல் எங்களுடைய பணியில் நாங்கள் சிறப்பாக இருப்போம் என்பதை இவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

இதுதான் முக்கியமாம்
இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு தனது காதல் மனைவிக்காக ரவீந்தர் கார் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார். கார் வாங்கிய பிறகு காரில் ஜோடியாக வலம் வரும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி காருக்குள் எடுத்த செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதற்கு நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல உங்கள் அருகில் யார் இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல கலாய்த்து கொண்டு இருந்தாலும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications