வி.ஜே சித்ரா மறைந்த பிறகும் சீரியல் தயாரிப்பாளர் செய்த நெகிழ்ச்சியான செயல்... பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஆரம்ப காலகட்டத்தில் முல்லையாக நடித்த வி.ஜே சித்ராவின் பிறந்தநாளுக்கு அந்த சீரியலின் தயாரிப்பாளர் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் சீரியல்களின் தயாரிப்பாளர் சிவசேகர் வெளியிட்ட பதிவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

மனதில் நின்ற கதாபாத்திரம்
ஒரு விஜேவாக அறிமுகமான வி.ஜே சித்ரா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வந்தார். அது மட்டும் அல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக முல்லை கேரக்டரில் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் தான். இதற்கு முன்பு அவர் எத்தனையோ சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருந்தாலும் அதையெல்லாம் கிடைக்காத பெயரையும் புகழையும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பெற்றிருந்தார். இப்ப வரைக்கும் இந்த சீரியலில் 3 முல்லைகள் வந்திருக்கின்றனர். ஆனாலும் ரசிகர்கள் பலருக்கும் முல்லை என்ற பெயரை சொன்னதும் விஜே சித்ராவின் பெயர் தான் நினைவிற்கு வரும்.

எதிர்பார்க்காத மரணம்
எப்போதுமே துரு துருவென இருந்த வி ஜே சித்ரா சமூக வலைத்தளத்திலும் அதிகமாக ஆக்டிவாக இருந்தார். ஷூட்டிங்கில் இல்லாத நேரங்களில் போட்டோ சூட்டில் போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு, சமூக வலைத்தளத்தில் அவரிடம் பேசும் ரசிகர்களிடம் நேரடியாகவே பேசி வந்தார். அது மட்டுமல்லாமல் இவருடைய பெயரில் பேன்ஸ் பேஜ்களை தொடங்கும் ரசிகர்களுக்கு அவர் பிறந்தநாளுக்கு எல்லாம் நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்து வந்தார். ஆனால் திடீரென யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார். அவருடைய மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற விவாதம் இப்ப வரைக்கும் நடந்து தான் வருகிறது. அவருடைய வழக்கு இன்னும் சரியான தீர்ப்பு வழங்கப்படாமல் தான் இருக்கிறது.

நினைவுகளை பகிரும் ரசிகர்கள்
வி ஜே சித்ரா மறைவிற்குப் பிறகு அவருடைய ரசிகர்கள் அதிகமாக பீல் பண்ணி வந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் நண்பர்கள் என பலரும் அவருடைய பிரிவை நினைத்து அவ்வப்போது வருந்தி கொண்டு தான் இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அவர் இருக்கும்போது அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் வெகு விமர்சனமாக கொண்டாடி வருவார்கள். அதுவும் பிறந்தநாள் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இன்னும் 30 நாள் இருக்கிறது என்ற கவுண்டவுன் ஸ்டார்ட் பண்ணி விடுவார்கள். பிறந்தநாளில் ரசிகர்களோடு இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார் . அந்த நினைவுகளை இப்போதும் இன்று அவருடைய பிறந்த நாளில் ரசிகர்கள் பலரும் உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

முல்லையின் பிறந்தநாள்
இந்த வகையில் சன் டிவி ,ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி , அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் மற்றும் வித்யா நம்பர் 1 போன்ற சீரியல்களில் தயாரிப்பாளராக இருக்கும் சிவசேகர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "ஆம் இன்று முல்லையின் பிறந்தநாள். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நான் இயக்கிய முல்லையின் பிறந்தநாள். ஒரு கதையின் வரும் கதாபாத்திரத்தின் பிறந்த நாள் இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவது திரை உலகில் புதுமை. அது கதையில் சிறப்பாக முல்லையாக வாழ்ந்து கதைக்கு உருவம் கொடுத்த சித்துவுக்கு பெருமை! ரசிகர்களின் ரசனை மிகவும் அருமை! எனது தொடர்காக சித்ரா முல்லையாக மாற்றிய தருணம் 2018 ஜூன் மாதத்தில் ஒரு நாள். அன்றைய தினம் முல்லைக்கு திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என இரு விதமான ஒப்பனை செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை முல்லையில் நினைவுகளோடு தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சித்து எனக்கு அறிமுகமானதும் அன்றைய தினமே இந்நாளில் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். முல்லைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.
-
நடிகர் யோகி பாபு சொன்ன ஒரு வார்த்தை.. டென்ஷன் ஆகி கன்னத்தில் அறைந்த சிவகுமார்! பின்னணி சம்பவம் -
காதல் தோல்வி.. வலியை உருக்கமாக பகிர்ந்த அர்ஜுன் தாஸ்.. மிரட்டிய வில்லன் நிலைமை இதுவா? குவியும் கமெண்ட்ஸ் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications