ஏழ்மையிலும் மகிழ்ச்சி, இதுதான் என் குடும்பம்... முதல் முறையாக வெளிகாட்டிய சுந்தரி சீரியல் கேப்ரில்லா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரெல்லா தன்னுடைய சகோதரிகளின் புகைப்படங்களை முதல்முறையாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு அவர்கள் மீது தனக்கு இருக்கும் பாசத்தை பகிர்ந்து இருக்கிறார்.
கிராமத்து வாழ்க்கையில் ஒன்று போயிருக்கும் சுந்தரியின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் பலர் இன்ப அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

கனவுக்காக வீட்டை விட்டு ஓட்டம்
தற்போது சன் டிவியில் சுந்தரியாக ரசிகர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் வாழ்ந்து வரும் கேப்ரெல்லா திருச்சியில் தான் பிறந்து இருக்கிறாராம். ஸ்கூல் படிப்பில் இவருக்கு அந்த அளவிற்கு படிப்பு ஏறவில்லையாம். அதனாலே அப்போது இருந்தே இவர் நடிப்பில்தான் நாம் போக வேண்டும் என்று நினைத்திருந்தாராம். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு தான் அடுத்து என்ன செய்யலாம் என்று இவருக்கு இவரே கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாராம். அப்போதுதான் படிப்பை முடித்ததும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாராம் வீட்டில் யாரிடமும் தன்னுடைய முடிவை பற்றி சொல்லாததால் வீட்டை விட்டு ஓடி வரும் போது இவருடைய கழுத்தில் இருந்த ஒரு செயினை அடகு வைத்து அந்த பணத்தில் தான் இவர் சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.

ஆறுதல் கொடுத்த பெற்றோர்
இவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது மனதில் அடுத்து என்ன செய்கிறாய் போகிறோம் என்ற வைராக்கியம், இருந்தாலும் குடும்பத்தையும் ஊரையும் நினைத்து அதிகமாக பயப்பட்டு இருக்கிறார். ஏனென்றால் இவருடைய ஊர் கிராமமாம், ஒரு வீட்டில் ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் ஊருக்கே தெரிந்துவிடுமாம் .இவர் இவருடைய கனவு ஜெயிக்க வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் இவரைப் பற்றி ஊருக்குள் தவறாக பேச தொடங்கிவிட்டாராம். இவர் ஓடிப் போய்விட்டார் என்று இவரோட குடும்பத்தினரிடம் பேசி அக்கம் பக்கத்தினர் வந்து வேதனையை ஏற்படுத்தி இருந்தார்களாம்.

வாழ்வில் கிடைத்த சிறந்த உறவு
ஆனால் அந்த நேரத்தில் இவருக்கு ஆறுதலாக இருந்தது இவருடைய அம்மாவும் அப்பாவும் தானாம். நாங்கள் இருக்கிறோம் நீ கவலைப்படாதே என்று சொன்ன வார்த்தையை நம்பி, மீண்டும் இவர் சென்னைக்கு வந்து தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக பல இடங்களில் வாய்ப்புக்காக அழைத்து இருக்கிறார்.

சுந்தரியின் சகோதரிகள்
தவமின்றி கிடைத்த வரங்கள் எனது தங்கைகள் என கேப்ரெல்லா வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேப்ரெல்லா அப்படியே கிராமத்து பெண்ணாக தன்னுடைய கேரக்டரைகாட்டி இருக்கிறார். எளிமையான புடவையில் என்னை தேய்த்து முழுக்கிய தலையோடு இவருடைய கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் பலர் இது நிஜ சகோதரிகளே அல்லது சூட்டிங் எடுக்கிறீர்களா? என்று குழப்பத்தோடு கேட்டு வருகின்றனர். அதுவும் கேப்ரெல்லா தனது சகோதரிகளோடு "சின்ன சின்ன ஆசை" என்ற பாடலை ரீல்ஸ் ஆக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications