எதிர்நீச்சல் சீரியல் சக்தியின் நிஜ மனைவி இவர்தானாம் .. மனைவியோடு மகிழ்ச்சியாக வெளியிட்ட பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் சக்தி கேரக்டரில் நடக்கும் சபரியின் மனைவியின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
புதியதாக திருமணம் முடிந்திருக்கும் சபரி தன்னோடு மனைவியோடு மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டதும் ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்து வருகிறதாம்.

முடிவு எடுக்க தெரியாத சக்தி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்து வருகின்றனர் .அதில் சக்தி கேரக்டர் பலரும் திட்டி தீர்க்கும் ஒரு கேரக்டராக இருந்து வருகிறது. பலமுறை சொந்தமாக முடிவு எடுக்க முடியாமல் திணறிவரும் சக்தி பலமுறை அந்நியனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அண்ணன் பேச்சை கேட்டு ஜனனியோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருந்தாலும் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் ஜனனியிடம் இவர் மீது வைத்திருக்கும் பாசத்தை புரிய வைத்து விடுவார். ஆனால் தற்போது இவர் அண்ணனின் முழு தம்பியாக மாறி ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.

சக்தியின் தலை தீபாவளி
ஜனனியின் வெளியேற்றத்திற்கு காரணம் சக்தி தான் என்று ரசிகர்கள் பலரும் சக்தியின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் சீரியலில் நடிப்புக்காக தான் இவர் இப்படி நடித்து வருகிறார் என்பதை அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறார். எதிர்நீச்சல் சக்தியின் நிஜ பெயர் சபரிதானாம். இவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருக்கிறது. தற்போது தலை தீபாவளியை கொண்டாடி முடித்திருந்த சபரி அப்போது எடுத்த ஒரு சில தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மகிழ்ச்சியான பதிவுகள்
சீரியலில் ஜனனியோடு தல தீபாவளியை கொண்டாடாமல் இருந்த சக்தி நிஜ வாழ்க்கையில் அவருடைய உண்மையான மனைவியோடு தல தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்தான் உண்மையில் இவருடைய மனைவியா? என்று ஆச்சரியத்தோடு கேட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் சக்தியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலர் திட்டி தீர்த்து வந்தாலும் அது எல்லாம் தன்னுடைய நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சபரி கூறி வருகிறார்.

பல வருட ஒற்றுமை
சபரியின் திருமணம் காதல் திருமணம் தானாம். இரு விட்டாரும் ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்பாதிக்காத நிலையில், இவர்களுக்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகு ,இரு வீட்டினரும் இவர்களைப் புரிந்து கொண்டு உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது என்று கூறி இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சபரி சத்தியாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் அதிகமான வெற்றிகள் பெற வேண்டும் என்று அவருடைய மனைவி கூறி இருக்கிறார்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications