பிக் பாஸ் 6: புதியதாக களம் இறங்கும் போட்டியாளர் "அந்த நடிகை”.. இனி இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த வைல்ட் கார்டு என்ட்ரி இந்த வாரம் நடைபெற இருக்கிறது.
விஜய் டிவியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவரா அவர் என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

புதியதாக வரும் நபர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 59 நாளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் புதியதாக வைல்டு கார்டு என்ட்ரி ஆக போட்டியாளர் உள்ளே அறிமுகமாக இருக்கிறார். ஏற்கனவே இந்த வாரத்தில் இரண்டு போட்டிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று கமல் கூறி இருந்த நிலையில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். போட்டியாளர்களில் வாக்கு அடிப்படையில் கடைசி இடத்தில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் இருக்கும் நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் ஓட்டு எண்ணிக்கை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு ஒரு போட்டியாளர்கள் உள்ளே களம் இறக்கப்படுகிறார்கள்.

வெளியான நிழல் படம்
இன்று விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக ஒரு புகைப்படத்தின் நிழல் படத்தை வெளியிட்டு இது யார் என்று கெஸ் பண்ணுங்கள் பார்ப்போம் என்று கேள்வி கேட்டிருக்கின்றனர்.அதைக் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பல குவிந்து வருகிறது. அதிகமானோர் அது அஞ்சலியின் புகைப்படம் என்று ஆணித்தரமாக கூறி வருகின்றனர். ஆனால் அஞ்சலி வந்தால் உள்ளே போட்டியளராக இல்லையாம். அவர் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தான் உள்ளே செல்வதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் அதிகமானோர் இதே கருத்தை கூறி வருவதால் இதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற பலரும் கூறி வருகின்றனர்

ஒருவேளை இருக்குமோ
அது மட்டுமல்லாமல் அந்த நிழல் படம் அஞ்சலியின் புகைப்படம் அல்ல. அது சின்னத்திரை நடிகையாக இருந்து வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா உடையது. அவர் கடந்த சீசன்களில் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த நிலையில் இந்த சீசனில் அவர்தான் அதில் கலந்து கொள்ளப் போகிறார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே தர்ஷா குப்தாவுக்கு சீரியலையும், திரைப்படத்தையும் தாண்டி சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். போட்டோ ஷூட் மூலமாக ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய ரசிகர்களிடம் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் கலை கட்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.

யாராக இருக்கும்
இன்னும் ஒரு சில ரசிகர்கள் அசிம் உள்ளே இருப்பது தெரிந்து தைரியமாக வரப்போகும் போட்டியாளர் யாராக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறதே என்று கருத்து கூறி வருகிறார்கள். ஒருவேளை தர்ஷா வந்தால் இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான். அதே நேரத்தில் அஞ்சலி வந்தாலும் கொண்டாட்டம்தான். ஆனால் அஞ்சலி போட்டியாளராக எப்படியும் இருக்க மாட்டார் என்று அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள். இந்த வாரத்தில் புது போட்டியாளரின் வருகையால் நிகழ்ச்சி எந்த மாதிரி சூடு பிடிக்க போகிறதோ தெரியவில்லையே என பலரும் அதற்காக எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications