பிரபல நடிகையுடன் அட்ஜெஸ்ட்மென்ட்? யாரந்த "கிராமிய மணம்" நடிகர்.. ஒல்லிக்குச்சி பெண்ணா? இது நிஜமா?
சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை என்று சொல்ல முடியாது. எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவிலும் உள்ளது என்றாலும், எல்லாருமே அப்படி கிடையாது. இப்போது நடிக்க வருவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

"அட்ஜஸ்ட்மென்ட் செய்வதால் வாய்ப்புகளை பெறுவது நடக்கிறது.. சினிமா என்றில்லை, எல்லா துறைகளிலும் இப்படியான குடைச்சல்கள், அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கத்தான் செய்கின்றன.. உலகத்திலேயே இது தவிர்க்க முடியாதது.. மற்ற துறைகளில் இப்படி நடந்தாலும் சினிமா அனைவருக்கும் தெரியக்கூடியது என்பதால், அது உடனே வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது.
ஹீரோயின்: சினிமா துறையிலும் அட்ஜெட்ஸ்ட்மென்ட் உள்ளது என்றாலும், எல்லாருமே அப்படி கிடையாது. இப்போது நடிக்க வருபவர்கள் மிகத்தெளிவாகவே இருக்கிறார்கள்.. அன்றைய காலகட்டத்தில் இப்படியிருந்த நடிகர்கள் சிலர், இப்போது ரிடையர் ஆகிவிட்டார்கள்.. இவர்களில் 2 பேர் பீக்கில் இருந்தபோது, அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஒப்புக் கொள்ளும் நடிகைகளை, தங்களுக்குள் பரிமாறி கொள்வார்கள்..
இதனால் ஹீரோயின் வாய்ப்பு அந்த நடிகைகளுக்கு தொடர்ந்து கிடைக்கும். நான் சொல்லும் இந்த இருவரில் ஒருவர், தற்சமயம் நடிப்பது கிடையாது. இன்னொருவர் தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்..
சின்ன நடிகர்கள்: சின்ன நடிகர்கள்கூட, நடிகைக்கு வாய்ப்பு வாங்கி தரும்போது இப்படி அட்ஜெஸ்ட்மென்ட் கேட்பார்கள்.. சில ஹீரோவுக்கு கதை சொல்லும்போதே, ஹீரோவின் ரசனை என்ன? எந்த நடிகையுடன் நடிப்பது பிடிக்கும்? என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு செல்வார்கள். இந்த பலவீனத்தை பயன்படுத்தி கதை சொல்லி, கால்ஷீட் வாங்கிவிடுவார்கள். அந்தவகையில், ஹீரோயினை முடிவெடுப்பதே சில ஹீரோக்களாக இருந்தார்கள்.
அதேபோல, சில பிரபலங்களுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் சில ஹீரோக்கள் ஆசைப்படலாம். இப்படித்தான், தமிழன் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க போவதாக விஜய்யிடம் ஜீவி சொன்னார். இதற்கான கால்ஷீட்டையும் விஜய் தந்தார். ஆனால், விஜய்யுடன் நடிக்கும்போது, தான் வயது மூத்தவளாக தெரியும் என்பதால், அவருடன் நடிக்க ஐஸ்வர்யா ராய் சம்மதிக்கவில்லை. இதனால், வேறு ஒரு உலக அழகி வைத்து, அந்த படத்தை முடித்தார்கள்
கிராமிய மணம்: சில நடிகைகளுக்கு நடிப்பே வரவில்லையானாலும், தொடர்ந்து படங்களில் வாய்ப்பு கிடைக்கும். இப்படித்தான் அன்று ஒரு ஹீரோ கிராமிய மணத்துடன் நடிக்கக்கூடியவர்.. எலும்பு கடித்தே புகழ்பெற்றவர்.. இப்போது அவர் தாத்தா, அப்பாவாக நடித்து வருகிறார். இவர் அன்று தன்னுடைய படத்துக்காக, ஹீரோயினை ஒருவரை தேர்ந்தெடுத்தார். ஆனால், அந்த ஹீரோயின் வேண்டாம் என்று டைரக்டர் சொல்லியும், ஹீரோ கேட்கவில்லை. அந்த நடிகைதான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிவாதம் பிடித்தார்.. கடைசியில் அந்த படம் சரியாகவே போகவில்லை.
அதேபோல, இன்னொரு ஹீரோ, தான் நடித்த படங்களால் கிராமங்களில் அதிகமாக பேசப்பட்டவர்.. தன்னுடைய ஹிட் பாடல்களாலும் பேசப்பட்டவர்.. தன்னுடைய படத்தில் ஒல்லிக்குச்சி ஹீரோயினை நடிக்க வைக்க பிடிவாதம் பிடித்தார். கடைசியில் அந்த ஒல்லிக்குச்சி நடிகையாலேயே படம் தோல்வியை தழுவியது.
உஷார்தன்மை: ஆனால், இதெல்லாம் அந்த காலம்.. இப்போது நிலைமை மாறிவிட்டது.. இப்போதெல்லாம் நடிகர், நடிகைகள் தெளிவாகவே இருக்கிறார்கள்.. உஷாராகவே இருக்கிறார்கள்.. கதை உட்பட அனைத்துக்கும் சரியான நடிகைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். நடிகர்கள், நடிகைகள் யாராக இருந்தாலும் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள்" என்றெல்லாம் அந்த பேட்டியில் சொல்லி உள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications