விஜய் டிவி ராமர் வீட்டில் குவியும் பிரபலங்கள்.. கனவு நிறைவேறிய மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவி ராமர் தற்போது சொந்தமாக தான் கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் எளிமையாக வைத்திருக்கிறார். இதற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
நடிகராகவும் அரசு அதிகாரியாகவும் இருக்கும் ராமர் இத்தனை வருடங்களாக கழித்து முதல் முறையாக சொந்த வீடு கட்டி இருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்களிடமிருந்தும் திரை பிரபலங்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பாப்புலர் ஆக்கிய டயலாக்
விஜய் டிவியில் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? "என ஒரே டயலாக் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்த ராமரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் இவருடைய ஒரிஜினல் கெட்டப்பை விடவும் பெண் வேடமிட்டு ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடுகிறார். இதனாலேயே இப்போது இவர் இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவர் இடம் பிடித்து விடுகிறார். விஜய் டிவியில் ஒரு சில பிரபலங்கள் தொடர்ந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் இடம் பிடித்து விடுவது வாடிக்கை தான் அந்த வரிசையில் ராமரும் ஒருவராக இருக்கிறார்.

வெள்ளி திரையிலும் பிசி
ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, கிங் காங் காமெடி போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் இவர் அறிமுகமாகி இப்போது சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சொந்தமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி இருக்கும் இவர் வீட்டிற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருகின்றனர். அதில் ரோபோ சங்கர், சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமடைந்த ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரபலங்கள் வெளியிட்ட போட்டோ வெளியான பிறகு தான் ரசிகர்களுக்கே தெரிந்திருக்கிறது. இதனால் சில ரசிகர்கள் உரிமையாக கோபப்பட்டு வருகிறார்கள்.

எம்பி வெளியிட்ட புகைப்படம்
விஜய் டிவியில் தொலைக்காட்சியின் மூலமாக பல காமெடியங்கள் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை பலர் விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரையில் ஜொலித்து வருகின்றனர். இந்த வரிசையில் விஜய் டிவியில் காமெடியானாக அறிமுகமாகி தற்போது பல திரைப்படங்களிலும் ராமர் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார். ஆனால் இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு அரசு அதிகாரியும் என்று சமீபத்தில் தான் பலருக்கும் தெரிந்தது. மதுரை எம்பி வெங்கடேசன் ராமனோடு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

விஏஓ மற்றும் காமெடி நடிகர்
அதோடு கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக 18 விஏஓ பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய் டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன் என்று குறிப்பிட்டு இருந்திருக்கிறார். இதை பார்த்த பிறகு தான் பலருக்கும் ராமர் ஒரு அரசு அதிகாரி என்பது தெரியும். இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக சொந்த வீடு கட்டி இருக்கும் ராமருக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications