வெளியே வந்து பலமுறை போன் செய்தும் விக்ரமன் போனை எடுக்கவில்லை.. உண்மைகளை உடைத்த அசீம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு தான் பலமுறை போன் செய்தும் விக்ரமன் என்னுடைய போனை எடுக்கவில்லை என்று அசீம் கூறி இருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் இடம் தான் பலமுறை பேச முயற்சி செய்தாலும் அவர் என்னுடைய போனை எடுக்கவில்லை என்று அசீம் கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நானும் விக்கிரமனும் டாஸ்க்காக மட்டும்தான் சண்டை போட்டுக் கொண்டோம் எங்களுடைய கொள்கையில் வேறுபாடு இல்லை என்று அசீம் கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் எனக்கும் விக்ரமனுக்கும் வருகிறது. அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

மனதிற்கு வருத்தமான செயல்

மனதிற்கு வருத்தமான செயல்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் கழித்து முதல் முறையாக அசீம் லைவில் ரசிகர்களோடு பேசி இருக்கிறார். அப்போது விக்ரமன் மற்றும் அசீம் உடைய ரசிகர்களுக்கு பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். நாங்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் மற்றும் டாஸ்க் விஷயத்தில் தான் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. மற்றபடி எங்களுக்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் வெளியே எங்கள் இருவருக்கும் பகை என்கிற மாதிரி வேற மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. இருவரின் ரசிகர்களும் மாறி மாறி நெகட்டிவ் கருத்துக்களால் பேசிக் கொண்டிருப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

பூமர் கிடையாது

பூமர் கிடையாது

அது மட்டும் இல்லாமல் நான் விக்ரமனுக்கு ஆதரவாக பலர் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் அப்படி எல்லாம் இல்லை விக்ரமனிடமே கேட்டுப் பாருங்கள். நான் பலமுறை விக்ரமனிடம் கூறி இருக்கிறேன் .பிக் பாஸ் வீட்டிற்குள்ளே நம்மளுடைய சண்டை சச்சரவு எல்லாம் முடிந்து விட வேண்டும் வெளியே இந்த மாதிரி போய் விடக்கூடாது என்று நான் கூறியிருக்கிறேன். அதுபோல என்னை புடிச்சவங்க எனக்கு பிடித்தவங்க விக்கிரமனை தாக்கி பேசாதீர்கள் அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. அவரை பூமர் என்று கூறுவது சரியானது அல்ல. அது பிக் பாஸ் வீட்டிற்குள் எங்களுக்கு கொடுத்த டாஸ்க் பெயர் அது அவ்வளவு தான். அதை வெளியே வைத்து பேசாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

போனை எடுக்கவில்லை

போனை எடுக்கவில்லை

அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் அதிகமாக சமூக வலைத்தளத்தில் நெகட்டிவ் கருத்துக்களை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது வேதனையாக இருக்கிறது நான் இதை சரி செய்ய வேண்டும் என்று தான் முதல்முறையாக ராமிடம் ஃபோன் நம்பர் வாங்கி விக்கிரமனுக்கு போன் செய்தேன். ஆனால் விக்ரமன் என்னுடைய போனை எடுக்கவில்லை.
அடுத்த முறை என்னருகில் ஏடிகே, ராம் என அனைவரும் இருக்கும்போது மீண்டும் நான் முயற்சி செய்தேன். அப்போதும் ஃபுல் ரிங் அடித்தது ஆனால் விக்ரமன் எடுக்கவில்லை. அது தவறு என்று சொல்ல முடியாது காரணம் நிறைய போன் வந்துகிட்டே இருக்கும் அதில் நான் என்று அவர் தெரியாமல் எடுக்காமல் கூட விட்டிருக்கலாம் என்று கூறி இருக்கிறார்.

கருத்து வேறுபாடு கிடையாது

கருத்து வேறுபாடு கிடையாது

அதுமட்டுமல்லாமல் நான் ரசிகர்களின் முன்பு விக்ரமிடம் பேசி தெளிவுபடுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறேன் என்று லைவில் விக்ரமனுக்கு மீண்டும் போன் முயற்சி செய்து பார்க்கையில் அவருடைய போன் எடுக்கப்படாததால் அசீம் இதில் சில நேரங்களில் அவர் பிஸியாக இருக்கலாம். அதனால் வேறு ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார். தொடர்ந்து எனக்கும் விக்ரமனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நாங்கள் இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள் தான் டாஸ்க் மட்டும்தான் நாங்கள் சண்டையிட்டுக் கொண்டோம். மத்தபடி எங்களுக்குள் ஒன்றும் இல்லை என்று கூறி முடித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+