ஏத்திக் கட்டிய வேட்டியுடன்.. கும்முன்னு ஒரு ஆட்டம்.. கேக் வெட்டி கலக்கிய கேர்ள்ஸ்!
சென்னை: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ரசிகர்கள் வாயில் விரல் வைக்கும் அளவிற்கு தற்போது நான்கு கேர்ள்ஸ் சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாள் கொண்டாட்டம் தான் இன்ஸ்டாகிராம் அலற விட்டு வருகிறது.
அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேஸ்டி சட்டையை கட்டிக்கொண்டு மலையாள பாட்டுக்கு ஆடிய ஆட்டம் வேற லெவலில் இருக்கிறது. வேட்டியை ஏத்திக் கட்டிய ஸ்டைல்தான் ஹைலைட்டே.
யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலாவாக நடித்து வரும் நட்சத்திராவின் பிறந்த நாளை அவரது பிரண்ட்ஸ்களான சைத்ரா ரெட்டி, ரேஷ்மா, சபானா மூன்று பேரும் கலக்கல் ஆட்டம் போட்டு அவரை மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள்.

கலக்கல் பேபீஸ்
சும்மாவே இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து அப்பப்ப இன்ஸ்டாகிராமில் வீடியோக்களாக போட்டு கலக்கி வருவார்கள். அதிலும் ஒருவர் பிறந்த நாள் என்றால் அவர்கள் செமையாக மாற்றி மாற்றி கலாய்த்துக் கொண்டு இன்னும் குழந்தைகள் போலவே என்ஜாய் பண்ணி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு செல்லமாக ரவுடி பேபீஸ் என்றும் ஒரு செல்லப் பெயரை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இணை பிரியா தோழிகள்
சீரியல்களில் இவர்கள் கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்துக் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் திக் ப்ரண்ட்ஸ். லேடி புள்ளிங்கோ மாதிரி தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் . எந்த கவலையும் இல்லாமல் இவர்கள் அடிக்கும் லூட்டி இவர்களது ரசிகர்களுக்கு பெரும் என்டர்டைன்மென்ட்டாக இருக்கிறது. நல்லா வாழறீங்கப்பா என்று பலரும் கலாய்க்கும் அளவுக்கு செம ஜாலி கேர்ள்ஸ் இவங்க.

நல்லா சேட்டை
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வந்து ரசிகர்களுடன் பேசிகொண்டிருக்கும் இவர்கள் செய்யும் சேட்டைக்கு நாளுக்கு நாள் அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அம்புட்டு சேட்டைக்காரப் பொண்ணுங்க. இவர்கள் நாலு பேருமே ஜீ தமிழில் செல்லப் பிள்ளைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நட்பு அப்படி ஒரு அற்புதமான விஷயமாகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது.

நட்சத்திராவும், சைத்ராவும்
அதிலும் ஒரே சீரியலில் கதாநாயகியாக, வில்லியாக ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பெற்றிருக்கும் நட்சத்திரா - சைத்ரா ரெட்டி இருவருக்கும் இருவேறு விதமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். நட்சத்திராவின் அமைதி பொறுமையை ரசிக்கும் ரசிகர்கள் சைத்ரா ரெட்டியை சூப்பர் டூப்பர் வில்லியாக பார்க்கிறார்கள். இருவருக்குமே தனித் தனி ரசிகர் கூட்டம் இருப்பதும் ஆச்சரியமானதுதான்.

சபானாதான் வாலு
இன்னொருவர் சபானா. ஜீ தமிழ் சீரியலில் முழு முதல் இடத்தில் இருக்கும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியான சபானா அந்த சீரியலில் அமைதின் சொரூபமாக பொறுப்பான குடும்பத் தலைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார் . இந்த குரூப்பில் இவரும் சேர்ந்து விட்டால் செம வாலுத்தனம்தானாம். இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

சேர்ந்தா திருவிழாதான்
இவர்கள் அனைவரையும் கலாய்த்து தள்ளும் பெரியவாலு சபானாதானாம். அது போதாதென்று செய்த சேட்டை எல்லாம் செய்து கொண்டு இந்த குரூப்பில் ஒன்னும் தெரியாத பச்ச புள்ள போல முகத்தை அப்பாவியாக வைக்கும் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் இவர் இன்னும் குழந்தை போல இந்த குரூப்பில் ஆடி பாடி வருகிறார். ஒவ்வொருவரின் பிறந்தநாளுக்கும் புதுப்புது சர்ப்ரைஸ் கொடுத்து என்ஜாய் பண்ணி கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

வேட்டி சட்டையுடன்
தற்போது நட்சத்திராவின் பிறந்தநாளுக்கு வேற லெவலில் கலக்கி இருக்கிறார்கள் .அந்த வீடியோஸ் இன்ஸ்டாகிராமில் பெரும் வைரலாக பரவி வருகிறது. நட்சத்திராவின் கண்களை மூடி ஒருவர் அழைத்து வருகிறார். பின்னர் அவரது கண்களை கட்டியிருந்த துணியை அவிழ்த்ததும் அவரால் நம்ப முடியாத கெட்டப்பில் ரேஷ்மா, சைத்ரா ரெட்டி , சபானா 3 பேரும் நிற்கிறார்கள். அதைப் பார்த்து அவர் மட்டுமல்ல அவருடைய ரசிகர்களும் ஷாக் ஆகிறார்கள்.

ஏத்திக் கட்டிய வேட்டி
காரணம் அவர்கள் போட்டுள்ள கெட்டப்தான். ஆம்பளை சட்டை போட்டு, வேட்டியுடன் சும்மா ஜிவ்வுன்னு நிற்கிறார்கள் 3 பேரும். அதுவும் வேட்டியை ஏத்திக் கட்டி முட்டி தெரியும் வகையில் ஜில்லிப்பாகவும் காணப்படுகிறார்கள். சட்டை மேலே துண்டையும் போட்டு முட்டிக்கு மேல வேட்டியை மடிச்சு கட்டி வேற லெவல் மாஸ் கட்டி இருக்கிறார்கள். நட்சத்திராவின் தாய் மொழியான மலையாள பாடலைப் பாடி வரவேற்று அவர்கள் ஆடிய ஆட்டம் சூப்பர்மா!

கண்ணீரில் நட்சத்திரா
அவர்களின் ஆட்டத்தையும், பாடிய பாட்டையும் பார்த்து நட்சத்திரா கண்ணீர் விட்டு அழுது விட்டார் . அந்த அளவிற்கு நட்சத்திராவின் இதயத்தை டச் செய்து விட்டனர் மூன்று தோழிகளும். அவரால் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இவர்கள் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்கள். ஆட்டத்திற்கு பிறகு நான்கு பேரும் மாற்றி மாற்றி கட்டி பிடித்து முத்த மழை பொழிந்து கொள்கின்ளனர். அடேங்கப்பா எம்புட்டு முத்தம்டா!

முத்த மழை
நட்சத்திரா பிறந்த நாள் அன்று அழுவதை பார்த்து அவரது ரசிகர்கள் கூட ரொம்பவே பீல் பண்ணி இருக்கிறார்கள். டான்ஸ் ஆடி முடித்ததும் கேக்கையும் பிறந்தநாள் பாட்டு பாடி வெட்டி செமையாக என்ஜாய் பண்ணி இருக்கிறார்கள் .இந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இவங்க நாலு பேரோட ஃபேன்ஸ்களும் நட்சத்திராவிற்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.

வெண்ணிலா
சிலர் யாரடி நீ மோகினி சீரியலில் நீங்கள் இருவரும் கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து எங்களை ஏமாற்றி கொண்டு நீங்கள் இவ்வளவு பிரண்டாக இருக்கிறீர்களா என்றும் கமெண்ட் போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலில் முத்தரசு வெண்ணிலா எங்கே வெண்ணிலா எங்கே என்று தேடிக்கொண்டே இருக்கிறார் . ஆனால் அந்த வெண்ணிலா இந்த ராத்திரி நேரத்துல கேக் வெட்டி அதே ஸ்வேதாவுடன் கொண்டாடிவிட்டு இருக்கிறார் என்றும் கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.

செம ஜாலிதான்
என்ன பிரச்சனை நடந்தாலும் இவர்கள் நாலு பேரும் இருக்குமிடம் களேபரமாக ஜாலியாக ஒரே கலாயாகத்தான் இருக்குமாம். அந்த அளவிற்கு இவர்கள் நான்கு பேரும் சந்தோஷமாக தங்களது தோழமையை அனுபவித்து வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஷபானாவின் பிறந்த நாளிலும் வேற லெவலில் கலக்கி இருந்தார்கள். தற்போது நட்சத்திரத்தின் பிறந்தநாளை தெறிக்க விட்டிருக்கிறார்கள். இன்னும் என்னெவெல்லாம் செய்யப் போகுதோ இந்த நட்சத்திரப் பட்டாளம்.. பொறுத்திருந்து என்ஜாய் செய்வோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications