Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு / திருமண பொருத்தம்

Thirumana Porutham in Tamil | திருமண பொருத்தம் முழு விளக்கம்

Time Updated: Friday, April 03, 2026 10:06 AM [IST]
Read more
மணப்பெண் நட்சத்திரம்
மணமகன் நட்சத்திரம்
Choose the rasi and nakshatram of the boy and girl to proceed

திருமண பொருத்தம் (Thirumana Porutham) பார்க்க மணமகள் மற்றும் மணமகனின் நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் 10 முக்கிய ஜாதகப் பொருத்தங்களை எளிதாக அறியலாம். திருமண வாழ்க்கையில் அன்பு, புரிதல், மனஒற்றுமை எப்படி இருக்கும் என்பதும் தெரியவரும். துல்லியமான ஜோதிட கணக்கீடுகள் மூலம் சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.


திருமண பொருத்தம் என்றால் என்ன?

திருமண பொருத்தம் என்பது, பெண் மற்றும் ஆண் ஜாதகங்களில் உள்ள நட்சத்திரங்களின் தொடர்பை ஆய்வு செய்து, அவர்களுக்கிடையேயான இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்பதை கணிக்கும் முறையாகும்.

ஒரு ஜாதகத்தில் நல்ல பலன்கள் இருந்தாலும், இருவருக்கும் இடையே பொருத்தம் இல்லையெனில் திருமண வாழ்க்கையில் மனக்கசப்பு, உடல்நலம் குறைவு, பொருளாதார சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அதனால் தான் ஜாதக பொருத்தம் பார்ப்பது ஒரு வழிகாட்டியாக கருதப்படுகிறது – கட்டாய விதியாக அல்ல.

10 முக்கிய திருமண பொருத்தங்கள் (Thirumana Porutham List)

இந்தப் பக்கத்தில் காணப்படும் 10 பொருத்தங்களும் ஒவ்வொன்றாக தனித்தனி முக்கியத்துவம் கொண்டவை. திருமண வாழ்க்கையின் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நிலைத்தன்மையை இவை தீர்மானிக்க உதவுகின்றன. அனைத்து பொருத்தங்களையும் சேர்த்து பார்க்கும்போது முழுமையான திருமண பலன் தெளிவாக கிடைக்கும்.

1. தினப் பொருத்தம் (Dina Porutham) :

சுருக்கமான விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு கணவன்–மனைவியின் தினசரி வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை கணிப்பதே இந்தப் பொருத்தமாகும்.

தினப் பொருத்தம் என்ற பெயரிலேயே அதன் நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. தம்பதியினருக்கிடையே தினந்தோறும் தேவையற்ற சண்டைகள், மனக்கசப்புகள் இல்லாமல், அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை அமையுமா என்பதை உறுதி செய்ய இந்தப் பொருத்தம் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. .

தினப் பொருத்தத்தின் அடிப்படை: மணப்பெண் பிறந்த தினத்தில் அமைந்த ஜன்ம நட்சத்திரத்தை முதல் எண்ணாக கொண்டு, மணமகனின் ஜன்ம நட்சத்திரம் வரை விரல் விட்டு எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணும்போது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆகிய இடங்களில் மணமகனின் நட்சத்திரம் வந்தால், அது சிறந்த தினப் பொருத்தமாக கருதப்படுகிறது.

அதேபோல், பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 ஆகிய இடங்களில் வந்தால், தினப் பொருத்தம் இல்லை எனக் கொள்ளப்படுகிறது.

பெண் மற்றும் ஆணின் ஜன்ம நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவதால், தினப் பொருத்தத்திற்கு நட்சத்திர பொருத்தம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் (Gana Porutham):

சுருக்கமான விளக்கம்: மணப்பெண் மற்றும் மணமகனின் குணநலன்களை அடிப்படையாகக் கொண்டு, திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்தும், புரிதலோடும் வாழ்வார்களா என்பதை கணிப்பதே இந்தப் பொருத்தமாகும்.

கணப் பொருத்தம் மூன்று முக்கிய கணங்களை கொண்டுள்ளது. அவை:

• தேவ கணம்
• மனித (மானுஷ்ய) கணம்
• ராட்சச கணம்

இந்த மூன்று கணங்களுக்கும் தனித்தனியான குணாதிசயங்கள் உள்ளன. அவற்றின் சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவ கணம்:தேவ கணத்தைச் சேர்ந்தவர்கள் உயர்ந்த சிந்தனைகள், நல்ல லட்சியங்கள் மற்றும் சிறந்த எண்ணங்களுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள். தேவ கணம் அடங்கிய 9 நட்சத்திரங்கள்: அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.

மனித (மானுஷ்ய) கணம்: மனித கணம் உடையவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் இயல்புடையவர்கள். பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் மனித கணத்தைச் சேர்ந்தவை.

ராட்சச கணம்: ராட்சச கணம் உள்ளவர்கள் தங்கள் சொந்த சிந்தனைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள்; பிறருக்கு அடங்காத தன்மையுடன் இருப்பார்கள். கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் ராட்சச கணமாகக் கருதப்படுகின்றன.

3. மகேந்திரப் பொருத்தம் (Mahendra Porutham)

சுருக்கமான விளக்கம்: குழந்தை பாக்கியம் இருப்பதா என்பதை ஜோதிட ரீதியாக கணிப்பதே இந்த மகேந்திரப் பொருத்தம் ஆகும்.

திருமணத்திற்குப் பிறகு கணவன்–மனைவியின் வாழ்க்கை முழுமை பெறுவதும், வம்சம் விருத்தியடைவதும் குழந்தை பிறப்பின் மூலம் தான் நிகழ்கிறது. அத்தகைய குழந்தை வரம் மணமக்களுக்கு உண்டா, ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை இந்த மகேந்திரப் பொருத்தத்தின் மூலம் அறியலாம்.

பலருக்கு "மகேந்திரப் பொருத்தம் இல்லை என்றால் குழந்தை பாக்கியம் கிடைக்காதா?” அல்லது “அப்படி இருந்தால் திருமணம் செய்யக் கூடாதா?” போன்ற சந்தேகங்கள் ஏற்படலாம். மகேந்திரப் பொருத்தம் இல்லாதபோதிலும் திருமணம் செய்யலாம். ஏனெனில், முன் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஐந்து பொருத்தங்கள் சரியாக இருந்தால் அது போதுமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக, தினப் பொருத்தமும்

கணப் பொருத்தமும் நன்றாக அமைந்திருந்தால், குழந்தை பாக்கியம் உறுதியாக கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது.

மணப்பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்தை முதல் எண்ணாக கொண்டு கணிக்கும் போது, மணமகனின் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆகிய இடங்களில் வந்தால், மகேந்திரப் பொருத்தம் உள்ளதாக கருதப்படுகிறது.

4. ஸ்திரீ தீர்க்கப் (Stree Deergam Porutham)

சுருக்கமான விளக்கம்: மணமகள் நீண்ட ஆயுளுடன், மணமகனுடன் எந்த பெரிய பிரச்சினைகளும் இல்லாமல் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை நடத்துவார்களா என்பதை கணிப்பதே இந்தப் பொருத்தமாகும்.

திருமணத்தின் போது ஆன்றோர்கள், சான்றோர்கள் மணமகளை “தீர்க்க சுமங்கலி பவா” என்று ஆசீர்வதிப்பார்கள். இதன் பொருள், மனைவி கணவனுடன் நீண்ட காலம் இணைந்து வாழ்ந்து ஐந்து மாங்கல்யம் பெற வேண்டும் என்பதாகும். (ஐந்து மாங்கல்யம் என்பது – திருமண நாளில் ஒன்று, அதன் பின் 60, 70, 80 மற்றும் 96 வயதில் பெறப்படும் மாங்கல்யங்கள் ஆகும்.)

இவ்வாறு மணப்பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்களா என்பதை தெளிவாக கூறும் பொருத்தமே இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் ஆகும்.

பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்தை முதல் எண்ணாக கொண்டு எண்ணும் போது, மணமகனின் நட்சத்திரம் 13-க்கு மேல் வந்தால் ஸ்திரீ தீர்க்கம் உண்டு என்று கூறப்படுகிறது. மேலும் சிலர், அது 7-க்கு மேல் இருந்தால்கூட நடுத்தரமான ஸ்திரீ தீர்க்கம் உள்ளது என கருதுகின்றனர். இந்தப் பொருத்தம் இல்லையெனில், ஸ்திரீக்கு (மணப்பெண்ணுக்கு) தீர்க்காயுள் இருக்காது என்றும், கண்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் ஜோதிடம் குறிப்பிடுகிறது.

5. யோனி பொருத்தம் (Yoni Porutham)

சுருக்கமான விளக்கம்: கணவன்–மனைவியின் தாம்பத்ய உறவு, அன்யோனியம் மற்றும் உடல்–மன ஒற்றுமை எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பதே இந்த யோனி பொருத்தம் ஆகும்.

திருமணப் பொருத்தங்களில் மகேந்திரப் பொருத்தம் இல்லாவிட்டாலும், யோனி பொருத்தம் சரியாக அமைந்திருந்தால் அந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் நிச்சயமாக கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது.

ஜாதகத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியான விலங்கு (யோனி) குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:


நட்சத்திரம் யோனி (விலங்கு)
அஸ்வினிஆண் குதிரை
பரணிஆண் யானை
கார்த்திகைபெண் ஆடு
ரோகிணிஆண் நாகம்
மிருகசீரிஷம்பெண் சாரை
திருவாதிரைஆண் நாய்
புனர்பூசம்பெண் பூனை
பூசம்ஆண் ஆடு
ஆயில்யம்ஆண் பூனை
மகம்ஆண் எலி
பூரம்பெண் எலி
உத்திரம்எருது
ஹஸ்தம்பெண் எருமை
சித்திரைஆண் எலி
சுவாதிஆண் எருமை
விசாகம்பெண் புலி
அனுஷம்பெண் மான்
கேட்டைசுலை மான்
மூலம்பெண் நாய்
பூராடம்ஆண் குரங்கு
உத்திராடம்பசு
திருவோணம்பெண் குரங்கு
அவிட்டம்பெண் சிங்கம்
சதயம்பெண் குதிரை
பூரட்டாதிஆண் சிங்கம்
உத்திரட்டாதிபசு
ரேவதிபெண் யானை

கணவன்–மனைவியின் நட்சத்திரங்கள் ஒரே யோனியைச் சேர்ந்ததாக இருந்தால் அது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. இதனால் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமையும்; சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

யோனி விரோதம் இருந்தால் பொருத்தம் இல்லை எனக் கருதப்படுகிறது. அதிக விரோதம் உள்ள யோனி ஜோடிகள் பின்வருமாறு:

பின்வரும் யோனி ஜோடிகள் ஒன்றுக்கொன்று அதிக விரோதம் கொண்டவையாக கருதப்படுகின்றன:

  1. 1. பசு – புலி
  2. 2. யானை – சிங்கம்
  3. 3. குதிரை – எருமை
  4. 4. நாய் – மான்
  5. 5. கீரி – பாம்பு
  6. 6. குரங்கு – ஆடு
  7. 7. பூனை – எலி

மேற்கண்ட யோனிகள் ஆண்–பெண் அல்லது பெண்–ஆண் நட்சத்திரங்களில் அமைந்திருந்தால், அந்த விலங்குகளுக்குள் இருக்கும் விரோதம் போல தம்பதியினரிடையும் ஒற்றுமை குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆகவே, யோனி பொருத்தத்தை நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே திருமணம் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது.

6. ராசி பொருத்தம் (Rasi Porutham)

சுருக்கமான விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு கணவன்–மனைவி நல்ல புரிதலுடன், நீண்ட காலம் மனக்கசப்புகள் இல்லாமல் இணைந்து வாழ்வார்களா என்பதை கணிப்பதே இந்தப் பொருத்தமாகும்.

மணமக்களின் ராசிகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கப்படுவது தான் ராசி பொருத்தம். திருமணப் பொருத்தங்களில் முக்கியமாகக் கருதப்படும் ஐந்து பொருத்தங்களில் இதுவும் ஒன்றாகும்.

மணமகள் ராசியை மையமாகக் கொண்டு கணிக்கும் போது, மணமகன் ராசி 2-ஆம் இடத்தில் வந்தால் ஆயுள் தொடர்பான தோஷம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஆகவே அத்தகைய நிலையில் திருமணம் செய்வது உகந்ததல்ல.

மணமகன் ராசி 6-ஆம் இடத்தில் இருந்தால் புத்திர நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும், கணவன் அல்லது மனைவி உடல் நலக் குறைவு அடைவதற்கான சாத்தியமும் உண்டு. 9-ஆம் ராசியாக வந்தால் தீர்க்காயுள் மற்றும் சௌமாங்கல்யம் கிடைக்கும். 10-ஆம் ராசியாக அமைந்தால் திரவிய லாபம் ஏற்படும். 11-ஆம் ராசியாக இருந்தால் சந்தோஷமும், சுகமும் நிறைந்த வாழ்க்கை அமையும் என ஜோதிடம் குறிப்பிடுகிறது.

7. ராசி அதிபதி பொருத்தம் (Rasi Athipathi Porutham)

சுருக்கமான விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு கணவன்–மனைவி ஒருவருடன் ஒருவர் நட்புணர்வுடன் இருப்பார்களா, சமமான மனநிலையுடன் பழகுவார்களா, அல்லது பகைமை உணர்வுடன் நடப்பார்களா என்பதை மதிப்பீடு செய்வதே இந்தப் பொருத்தமாகும்.

ராசி அதிபதி பொருத்தம் மூன்று நிலைகளில் கணிக்கப்படுகிறது. அவை நட்பு, சமம், பகை என்பன. இதில் நட்பு அல்லது சமம் என்ற நிலை வந்தால் ராசி அதிபதிப் பொருத்தம் உள்ளது எனக் கருதப்படுகிறது. ஆனால் பகை நிலை மட்டும் வருவது விரும்பத்தகாததாகும்.

மணமகள் ராசி அதிபதியும் மணமகன் ராசி அதிபதியும் ஒன்றுக்கொன்று நட்பாகவோ அல்லது சமமான நிலையிலோ இருந்தால் இந்தப் பொருத்தம் உண்டு. அதேவேளை, இரண்டும் பகை நிலையில் இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் இல்லை எனக் கொள்ளப்படுகிறது.


ராசி அதிபதி
மேஷ ராசிக்கு அதிபதிஅங்காரகன் (செவ்வாய்)
ரிஷப ராசிக்கு அதிபதிசுக்கிரன்
மிதுன ராசிக்கு அதிபதிபுதன்
கடகம் ராசிக்கு அதிபதிசந்திரன்
சிம்மம் ராசிக்கு அதிபதிசூரியன்
கன்னி ராசிக்கு அதிபதிபுதன்
துலாம் ராசிக்கு அதிபதிசுக்கிரன்
விருச்சிகம் ராசிக்கு அதிபதிஅங்காரகன் (செவ்வாய்)
தனுசு ராசிக்கு அதிபதிகுரு
மகரம் ராசிக்கு அதிபதிசனி
கும்பம் ராசிக்கு அதிபதிசனி
மீனம் ராசிக்கு அதிபதிகுரு

8. வசிய பொருத்தம் (Vasiya Porutham)

சுருக்கமான விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு கணவன்–மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நேசத்துடனும், வசீகரமான ஈர்ப்புடனும், எப்போதும் பிரியமாக வாழ்வார்களா என்பதை கணிப்பதே இந்த வசிய பொருத்தம் ஆகும்.

திருமண வாழ்க்கை நீண்ட காலம் அன்பும் அனுசரிப்பும், பரஸ்பர புரிதலும் கொண்டதாக அமைய வசியப் பொருத்தம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தப் பொருத்தம் அமைந்தால், இருவருக்கும் ஒருவர்மேல் உள்ள பாசம் குறையாமல் இருக்கும்; பிறர் மீது நாட்டம் ஏற்படாமல் மனஒற்றுமை நிலைத்திருக்கும்.

மணமகளின் ராசி, மணமகனின் ராசிக்கு வசியமாக இருந்தால், வசியப் பொருத்தம் உள்ளதாக கொள்ளப்படுகிறது.

இப்போது எந்த ராசிக்கு எந்த ராசி வசியம் என்பதைப் பார்ப்போம்:


ராசி வசிய ராசிகள்
மேஷம் இராசிக்குசிம்மம், விருச்சிகம் வசியம்
ரிஷபம் இராசிக்குகடகம், துலாம் வசியம்
மிதுனம் இராசிக்குகன்னி வசியம்
கடகம் இராசிக்குவிருச்சிகம், தனுசு வசியம்
சிம்மம் இராசிக்குமகரம் வசியம்
கன்னி இராசிக்குரிஷபம், மீனம் வசியம்
துலாம் இராசிக்குமகரம் வசியம்
விருச்சிகம் இராசிக்குகடகம், கன்னி வசியம்
தனுசு இராசிக்குமீனம் வசியம்
மகரம் இராசிக்குகும்பம் வசியம்
கும்பம் இராசிக்குமீனம் வசியம்
மீனம் இராசிக்குமகரம் வசியம்

9. ரஜ்ஜு பொருத்தம் (Rajju Porutham)

சுருக்கமான விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு கணவனின் உயிர், உடல் நலம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான முக்கியமான கணிப்புகளை வழங்கும் மிக முக்கியமான பொருத்தமே இந்த ரஜ்ஜு பொருத்தம் ஆகும்.

திருமணத்திற்கு பார்க்கப்படும் பத்து பொருத்தங்களில், மிகவும் முக்கியத்துவம் பெறுவது ரஜ்ஜு பொருத்தம் தான். பத்து பொருத்தங்களில் ஒன்பது பொருத்தங்கள் பொருந்தினாலும், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக் கூடாது என்று ஜோதிடம் வலியுறுத்துகிறது. அந்த அளவிற்கு இந்தப் பொருத்தம் அவசியமானதாக கருதப்படுகிறது.

ரஜ்ஜு பொருத்தத்தின் வகைகள்:

ரஜ்ஜு பொருத்தத்தில் மொத்தம் ஐந்து வகையான ரஜ்ஜுகள் உள்ளன. அவை:

  • சிரசு ரஜ்ஜு
  • கண்ட ரஜ்ஜு
  • உதர ரஜ்ஜு
  • பாத ரஜ்ஜு
  • ஊரு (தொடை) ரஜ்ஜு

இந்த ரஜ்ஜு பொருத்தம் இல்லாதபோது ஏற்படும் விளைவுகள் குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

சிரசு ரஜ்ஜு – சிரசு என்பதற்கு தலை என்று பொருள்.
பாதிப்பு: குடும்பத் தலைவரான கணவனுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.

கண்ட ரஜ்ஜு – கண்டம் என்பது கழுத்தை குறிக்கிறது.
பாதிப்பு: மாங்கல்யம் அணியும் மணமகளின் கழுத்தை குறிக்கும் காரணத்தால், மணப்பெண்ணுக்கு பெரும் துன்பம் ஏற்படும்.

உதர ரஜ்ஜு – உதரம் என்பது வயிற்றை குறிக்கும்.
பாதிப்பு: தம்பதியினரின் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் அல்லது குழந்தைகளின் ஆயுள் குறைய வாய்ப்பு உள்ளது.

பாத ரஜ்ஜு
பாதிப்பு: தம்பதியினர் உறவு நீடிக்காமல் பிரிந்து வாழ வேண்டிய நிலை உருவாகும்.

ஊரு (தொடை) ரஜ்ஜு
பாதிப்பு: செல்வம் நிலைக்காது, வறுமை ஏற்படும், பெற்ற செல்வங்கள் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை உருவாகலாம்.


ரஜ்ஜு கிரகம் கிரகம்
சிரசுசெவ்வாய்செவ்வாய்
கண்டம்சந்திரன்இராகு
உதரம்சூரியன்குரு
தொடைசுக்கிரன்சனி
பாதம்கேதுபுதன்

மணமகனின் ரஜ்ஜூவும் மணப்பெண்ணின் ரஜ்ஜூவும் ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் இருந்தால் இருவரும் நலமோடு வாழ்வார்கள்.

10. வேதை பொருத்தம் (Vethai Porutham)

சுருக்கமான விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு கணவன்–மனைவி கவலைகள் இல்லாமல், எப்போதும் சந்தோஷமாகவும் மனத் திருப்தியுடனும் வாழ்வார்களா என்பதை கணிப்பதே இந்த வேதைப் பொருத்தம் ஆகும்.

தம்பதியினருக்கு துன்பமும் வேதனையும் இல்லாத சாந்தமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவே வேதைப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. இந்தப் பொருத்தம் சரியாக அமைந்திருந்தால், மணமக்கள் பலவிதமான தோஷங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, வேதனைகள் இல்லாமல் வாழ்க்கை நடத்துவார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.

வேதை என்ற சொல்லின் பொருள் ஒன்றுக்கொன்று தாக்கம் அல்லது எதிர்ப்பு ஏற்படுவது என்பதாகும். இரு நட்சத்திரங்களுக்கு இடையில் வேதை இருப்பதாகக் கருதப்பட்டால், அந்த இணை பொருத்தமற்றதாக கருதப்படுகிறது.


நட்சத்திரம் வேதை நட்சத்திரம்
அசுபதிகேட்டை
பரணிஅனுசம்
கார்த்திகைவிசாகம்
ரோகிணிசுவாதி
திருவாதிரைதிருவோணம்
புனர்பூசம்உத்திராடம்
பூசம்பூராடம்
ஆயில்யம்மூலம்
மகம்ரேவதி
பூரம்உத்திரட்டாதி
உத்திரம்பூரட்டாதி
ஹஸ்தம்சதயம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று வேதையாகும். மீதமுள்ள மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று வேதை நட்சத்திரம் ஆகும்.

11. நாடிப் பொருத்தம் (Nadi Porutham)

சுருக்கமான விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு கணவன்–மனைவி இருவரும் நோய் நொடி இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வார்களா என்பதை கணிப்பதே இந்த நாடிப் பொருத்தம் ஆகும்.

சில பகுதிகளில் மட்டுமே இந்த நாடிப் பொருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முன்பு நட்சத்திரப் பொருத்தம் பற்றி கூறிய விதிமுறைகள் போலவே,

நாடிப் பொருத்தத்துக்கும் அதே அடிப்படை நடைமுறைகள் பொருந்தும். நாடிப் பொருத்தத்தில் மொத்தம் மூன்று வகையான நாடிகள் உள்ளன.

நாடிகளின் வகைகள்:

  • வாத நாடி
  • பித்த நாடி
  • சிலேத்துமம் (நீர்ம) நாடி

வாத நாடி சேர்ந்த நட்சத்திரங்கள்: அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், ஹஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

பித்த நாடி சேர்ந்த நட்சத்திரங்கள்: பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி

சிலேத்துமம் (நீர்ம) நாடி சேர்ந்த நட்சத்திரங்கள்: கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

மணமகள் மற்றும் மணமகன் நட்சத்திரங்கள் இரண்டும் வெவ்வேறு நாடிகளில் அமைந்திருந்தால் நாடிப் பொருத்தம் உள்ளது எனக் கருதப்படுகிறது. அதேவேளை, இருவரின் நட்சத்திரங்களும் ஒரே நாடியில் வந்தால் நாடிப் பொருத்தம் இல்லை என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது.

12. விருட்சப் பொருத்தம் (Mara Porutham)

சுருக்கமான விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு தம்பதியினரின் வம்சம் விருத்தியடைந்து, குடும்ப வளர்ச்சி முழுமை பெறுமா என்பதை கணிப்பதே இந்த விருட்ச பொருத்தம் ஆகும்.

விருட்சம் என்பது மரத்தை குறிக்கும் சொல். ஒரு வம்சம் ஆலமரத்தைப் போல வளர்ந்து விரிவடையுமா என்பதை அறிய உதவுவது தான் இந்த விருட்சப் பொருத்தம்.

விருட்சம் என்பது மரத்தை குறிக்கும் சொல். ஒரு வம்சம் ஆலமரத்தைப் போல வளர்ந்து விரிவடையுமா என்பதை அறிய உதவுவது தான் இந்த விருட்சப் பொருத்தம். ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட மரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மணமக்களின் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் போது கிடைக்கும் மரம் பால் மரமாக இருந்தால், விருட்சப் பொருத்தம் உள்ளது எனக் கருதப்படுகிறது. இந்தப் பொருத்தத்தை மரப் பொருத்தம் என்றும் அழைப்பார்கள்.

Astrology

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+