திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலையில் 144 தடை உத்தரவு.. ஐயனை இந்த முறையாவது பெண்கள் தரிசிப்பரா?

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலையில் நடை திறக்கப்படவுள்ள நிலையில் 144 தடை உத்தரவு- வீடியோ

    சபரிமலை: சபரிமலையில் வரும் திங்கள்கிழமை நடை திறக்கப்படவுள்ள நிலையில் 3 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஐப்பசி மாதம் நடை திறக்கப்பட்டது.

    இந்நிலையில் பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடும் என்பதால் அங்கு இந்து அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அப்போது பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர்.

    போராட்டம்

    போராட்டம்

    அவர்களை போராட்டக்காரர்கள் செல்லவிடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீஸார் பாதுகாப்புடன் பெண்களை அழைத்து சென்றனர். சன்னிதானத்தை அடைய சில மீட்டர் தூரம் இருந்த நிலையில் அவர்களை பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மீண்டும் நடை

    மீண்டும் நடை

    இதையடுத்து பெண்களுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. பின்னர் பெண்கள் செய்வதறியாது திரும்பி சென்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    இதனால் பெண்கள் வருகையை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள் செல்ல வாய்ப்பு

    பெண்கள் செல்ல வாய்ப்பு

    மேலும் அப்பகுதிகளில் யாரும் கூடாத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்து அமைப்புகள் கூடுவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண்கள் சன்னிதானத்துக்கு செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    144 restriction imposed in Sabarimala as the temple is going to open on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X