திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆ.. பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து.. பாறைக்குழியில் மாப்ளே.. 150 அடி உயரம்.. சினிமாவை மிஞ்சிடுச்சு

150 அடி உயரத்தில் இருந்து கல்குவாரியில் விழுந்து மனைவியை காப்பாற்றி உள்ளார் மாப்பிள்ளை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: 150 அடி உயரத்தில் இருந்து பாறைக்குழிக்குள் குதித்துள்ளார் நீச்சல் தெரியாத ஒரு இளைஞர்.. அத்துடன் ஒரு உயிரையும் காப்பாற்றி உள்ளார்.. கேரளாவில் நடந்த சம்பவம் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. என்ன நடந்தது?

நாளுக்கு நாள் செல்பி மோகம் அதிகரித்துவிட்டது.. எந்த அளவுக்கு மோகம் இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் இளைஞர்கள் உணருவதில்லை.. வித்தியாசமாக செல்பி எடுப்பதாக சொல்லி, பெரும்பாலும் அவை துயரங்களிலேயே முடிந்தும் விடுகிறது..

பெரும்பாலும் இந்த கொடுமை புதுமண தம்பதிகளுக்குதான் நடக்கும். கடந்த வருடம் கேரள மாநிலத்திலும் இப்படி ஒரு துயரம் நடந்தது..

சினிமாவை மிஞ்சும் பதற்றம்.. தாக்கிய பாஜகவினர் - எங்க எம்எல்ஏவை காணோம்! பகீர் கிளப்பிய ராகுல் காந்தி சினிமாவை மிஞ்சும் பதற்றம்.. தாக்கிய பாஜகவினர் - எங்க எம்எல்ஏவை காணோம்! பகீர் கிளப்பிய ராகுல் காந்தி

 ஆர்வக்கோளாறு

ஆர்வக்கோளாறு

கோழிக்கோடு அருகே குற்றியாடி ஆற்றின் கரையோர பகுதியில் புதுமண தம்பதியினர் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.. அந்த நேரம் பார்த்து, மணமக்கள் இருவருமே அந்த ஆற்றில் தவறி விழுந்துவிட்டனர்.. இருவருக்குமே நீச்சல் தெரியாது.. இருவரும் நின்ற பகுதி ஆபத்து அதிகம் நிறைந்த இடமாகும்... ஏற்கனவே, இதே இடத்தில் எத்தனையோ பேர் தவறி ஆற்றில் விழுந்து இறந்துள்ளனர்.. இவர்களுக்கு இந்த விவரம் தெரியாது என்பதால் ஆர்வத்தில் போட்டோ எடுக்க வந்துள்ளனர்.. மணமகன் ஆற்றோடு அடித்து கொண்டு போய்விட்டார்..

 பாறைக்குழிக்குள்

பாறைக்குழிக்குள்

இதோ இன்னொரு அதிர்ச்சி இதே கேரளா மாநிலத்தில், இன்னொரு புதுமண தம்பதிகளுக்கு நடந்துள்ளது.. கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன்.. 25 வயதாகிறது.. இவருக்கும், கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திரா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. சாந்திராவுக்கு 19 வயதாகிறது.. நேற்றுதான் இவர்களுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.. திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மணமக்கள் இருவரும் காலையில் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்...

கல்குவாரி

கல்குவாரி

பிறகு, 11 மணியளவில் பாரிப்பள்ளி வேளமானூர் காட்டுப்புரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். அந்த குவாரியில் 150 அடி உயரத்தின் கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளித்தது... அந்த இடத்தை பார்த்ததுமே மணமக்களுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.. அதனால், அங்கிருந்து செல்பி எடுக்க ஆசைப்பட்டனர்.. 2 பேருமே குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்தனர்.. பாறை மேல் நின்றிருந்ததால், திடீரென்று சாந்தி்ரா, கால் வழுக்கி 150 அடி உயரத்தில் இருந்து குவாரியில் தேங்கிநின்ற தண்ணீருக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்தார்...

 ரப்பர் தொழிலாளர்கள்

ரப்பர் தொழிலாளர்கள்

இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட வினு கிருஷ்ணன், உடனடியாக குவாரியில் இருந்த தண்ணீருக்குள் குதித்தார்... பிறகு தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்த, சாந்திராவை காப்பாற்ற முயன்றார். அவரால் முடியவில்லை..அதனால், சாந்திராவின் டிரஸ்ஸை பிடித்து இழுத்து, ஒரு பாறை பகுதிக்கு கொண்டு வந்தார்... அந்த ஒரு பாறையை 2 பேருமே பிடித்து தொங்கிக்கொண்டு, காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று அலறியுள்ளனர்.. இவர்களின் அலறல் சத்தம், அந்த பகுதியில் ரப்பர் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு கேட்டுள்ளது..

 ஹெல்ப் ப்ளீஸ்

ஹெல்ப் ப்ளீஸ்


இதனால், அங்கிருந்து பாறை பகுதிக்கு வந்துள்ளனர்.. ஒரு பெரிய கயிறை தூக்கி போட்டு, அதை பிடித்துகொள்ளுமாறு சொல்லி உள்ளார்கள்.. மேலும், குழாய் மூலம் கட்டப்பட்ட சிறு தோணியில், தொழிலாளர்கள் சிலர் இறங்கி, மணமக்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர்.. அதற்குள் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு வந்துவிட்டனர்.. அனைவருமே சேர்ந்து, நீண்ட நேரமாக மணமக்களை மீட்க போராடினார்கள்.. இறுதியில் அவர்களை மீட்டு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை தந்தனர்.. உடனடியாக ஆம்புலன்ஸில் தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தனர்..

 ஷூட்டிங்

ஷூட்டிங்

இதனால், நேற்றைய திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.. மாப்பிள்ளை, துபாயில் வேலை பார்க்கிறாராம்.. இந்த கல்யாணத்துக்காகத்தான், 2 வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. இரு உயிர்களும் காப்பாற்றப்பட்டு விட்டாலும், நேற்றைய தினம், ரப்பர் வெட்டும் தொழிலாளர்கள் அந்த பகுதியில் இல்லாமல் போயிருந்தால், இவர்கள் அந்த பாறையில் இருந்து வழுக்கி மீண்டும், குவாரி ஆற்றிலேயே விழுந்திருப்பார்களாம்.. 150 அடி உயரத்தில் இருந்து நீச்சல் தெரியாத இளைஞர் குதித்து, பாறைக்குழிக்குள் இருந்து, வருங்கால மனைவியை காப்பாற்றியது, சினிமாவை மிஞ்சும் சம்பவமாக பேசப்பட்டு வருகிறது.

English summary
150 Feet cliff and The groom saved his wife, What happened in Kerala Kollam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X