"ஆண்ட்டி"லவ்.. 35 வயது பெண்ணுக்கு 27 வயது இளைஞர் மீது வந்த காதல்.. பிறகு திடீர் விபரீதம்..
திருவனந்தபுரம்: கேரளாவில் 35 வயதான பெண் ஒருவர், இளைஞர் முகத்தில் ஆசிட் வீசி ஒரு கண்ணை குருடாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை. இதுகுறித்து அடுத்தடுத்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அருண்.. 27 வயதாகிறது.. இவருக்கு ஷீபா என்ற பெண் ஃபேஸ்புக் மூலம் பழக்கமானார்.. ஷீபாவுக்கு 35 வயதாகிறது.. திருவனந்தபுரத்தில் ஹோம் நர்சாக வேலை பார்த்து வருபவர்.
தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி அருணுடன் பழகி வந்துள்ளார் ஷீபா.. அதுமட்டுமல்ல, தன்னுடைய உண்மையான வயதையும் ஷீபா அருணிடம் மறைத்து விட்டார்.. இவர்களின் நட்பு ஃபேஸ்புக்கிலேயே தொடர்ந்தது.. நாளடைவில் அது காதலானது.
ஓ.பி.எஸ். மகனுக்கு பரிவட்டம்; கையில் ஈட்டி; புதுசா தினுசா; பின்னணி என்ன?

காதல்
இந்த நிலையில், ஒருநாள் அருணை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஷீபா ஆசைப்பட்டுள்ளார்.. இதை அருணிடம் சொல்லவும், அவரும் அதற்கு ஓகே சொல்லி உள்ளார்.. அதன்படியே இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.. அப்போதுதான் அருணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஷீபாவுக்கு 37 வயது ஆகிறது என்றும், ஏற்கெனவே கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும் அருணுக்கு தெரியவந்தது... இதனால் அதிர்ந்துபோன அருண், ஷீபாவிடம் பேசுவதை குறைத்து கொண்டுள்ளார்.

வற்புறுத்தல்
ஆனாலும், ஷீபா விடவில்லை.. தன்னை கல்யாணம் செய்யும்படி அருணை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது... ஒருகட்டத்தில், திருமணம் செய்ய முடியாது என்று அருண் உறுதியாக சொல்லிவிடவும், ஷீபா 2 லட்சம் ரூபாய் கேட்டு அருணை மிரட்டியிருக்கிறார்... இதனால் பயந்துபோன அருண், 2 லட்சம் தருவதற்கு சம்மதம் சொல்லி உள்ளார்.. பணத்தை எடுத்து கொண்டு, புனித அந்தோணியார் தேவாலயம் அருகே உள்ள இரும்புபாலம் அருகே வரும்படி அருணை அழைத்திருக்கிறார் ஷீபா.

ஹேண்ட்பேக்
அதன்படி, கடந்த 16-ம் தேதி தன்னுடைய நண்பரை அழைத்து கொண்டு, கையில் கிடைத்த 14,000 ரூபாய் மட்டும் எடுத்துகொண்டு, அந்த சர்ச் அருகே சென்றார் அருண்.. ஆனால், அருணை நேரில் பார்த்ததும் மீண்டும் ஷீபாவுக்கு சபலம் வந்துள்ளது.. உன்னை என்னால் விட முடியாது.. மறுபடியும் நட்பிலேயே இருக்க வேண்டும் என்று அருணை கட்டாயப்படுத்தி உள்ளார்.. இதனால், மேலும் பயந்துபோன அருண், ஷீபாவிடமிருந்து சற்றுத்தள்ளி வந்து நின்றிருக்கிறார்.. இதை பார்த்து எரிச்சல் அடைந்த ஷீபா, ஹேண்ட்பேக்கில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருணின் முகத்தில் வீசினார்.. இதில் அருண் வலியால் அலறி துடித்துள்ளார்..

மருத்துவமனை
அவர் முகத்தில் ஆசிட்டை ஊற்றியபோது, அது ஷீபாவின் உடலிலும் லேசாக தெறித்து விழுந்துள்ளது. ஆனால் அந்த ஆசிட்டை கையால் துடைத்தெறிந்துவிட்டு ஷீபா அங்கிருந்து கிளம்பி சென்று கொண்டே இருந்தார். இதையெல்லாம் பார்த்து அருணின் நண்பர் கதறி துடித்தார்.. உடனடியாக அருணை மீட்டு அடிமாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.. பிறகு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார்.. அங்கு தீவிர சிகிச்சை நடந்துள்ளது.. ஆனாலும் அருணுக்கு ஒரு கண்பார்வை பறிபோய்விட்டது.. இப்போதுவரை இந்த விஷயத்தை அருண் வெளியே சொல்லவில்லை..

ஷீபா
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள்தான், சோஷியல் மீடியாவில் பரவி அதன்மூலம்தான் விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது... பிறகு போலீஸ் வரை தகவல் சென்றதும் அவர்கள் விசாரணையை துவக்கி உள்ளனர்.. சிகிச்சையில் உள்ள அருணிடம் போலீஸார் புகாரை பெற்றனர்.. பிறகு ஷீபா வீட்டிற்கு போலீசார் சென்றனர்.. கணவருடன் அந்த வீட்டில்தான் இருந்துள்ளார் ஷீபா.. அங்கேயே அவரை கைது செய்துள்ளனர்.. போலீசாரின் கைதுக்கு பிறகுதான் அந்த கணவருக்கே நடந்த விஷயம் தெரியுமாம்.

ஆசிட்
ரப்பர் ஷீட்டை உறைய வைக்க பயன்படுத்தும் ஆசிட்டை ஷீபா ஹேண்ட் பேக்கில் போட்டு எடுத்து வந்தாராம்.. அந்த ஆசிட் எப்படி அவருக்கு கிடைத்தது என்று தெரியவில்லை.. ஷீபாவின் கைகளிலும் ஆசிட் ஊற்றிய தழும்பு, காயங்கள் இருந்துள்ளது.. அதை பற்றி கணவர் கேட்டதற்கு, சாதம் வடிக்கும்போது அந்த தண்ணீர் பட்டுவிட்டதாக சொன்னாராம்.. இப்போது ஷீபாவிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் நடந்து 2 நாள் ஆகியும் கேரள மக்கள் இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளனர்.