உள்ளாடைகளை அகற்றுங்க! கேரளாவை உலுக்கிய நீட் தேர்வு சர்ச்சை! தேர்வு மைய பணியாளர்கள் அதிரடியாக கைது!
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரித்ததால் மாணவியின் உள்ளாடைகளை கழற்ற வேண்டும் என தேர்வு மைய அதிகாரிகள் வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள போலீசார் கூறியுள்ளனர்.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஜூலை 17ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
இதேபோல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது மகள் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளா மாநிலம் மருத்துவ இன்ஸ்டியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார்.

உள்ளாடை சர்ச்சை
அங்கு தேர்வு மைய அதிகாரிகள் மாணவ மாணவிகளை தனித்தனியே பரிசோதித்துள்ளனர். அப்போது மாணவியின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் மாணவியின் உள்ளாடையில் உலோக கொக்கி இருந்ததால் மெட்டல் டிடெக்டர் எச்சரிக்கை செய்துள்ளது. அப்போது மகளின் மேல் உள்ளாடைகளை கழற்ற சொல்லி வற்புறுத்தியதாக கொட்டாரக்கரா காவல் நிலையத்தில் புகார் தந்தை அளித்தார்.

தேசிய தேர்வு முகமை
தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், ஒவ்வொரு மாணவ மாணவியரையும் தனித்தனியே மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்த போது மாணவிகளின் உள்ளாடைகளில் காணப்படும் கொக்கி கண்டறியப்பட்டதாக தனது மகளிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்த நிலையில், மேலும் தன் மகளை போலவே பிற மாணவிகளையும் நிர்பந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கண்டனம்
இந்த சம்பவத்திற்கு கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து கண்டனம் தெரிவித்ததோடு, மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேசிய தேர்வு முகமை, குறிப்பிட்ட இந்த தேர்வு மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என தெரிவித்துள்ளது.

5 பேர் கைது
குறிப்பாக இந்த புகார் கற்பனையானது என்றும் தவறான நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டது என்று கொல்லத்தில் உள்ள நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் தேசிய தேர்வு முகமையிடம் தெரிவித்திருந்த நிலையில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு உள்ளாடைகளை கழற்றச் சொன்னதாகக் கூறப்பட்டவர்கள் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், கழற்றச் சொன்னதாக 5 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications