சாலையில் ஏற்பட்ட பள்ளம்; தேங்கிய மழை நீரில் குளித்து யோகா செய்த இளைஞர்.. கண்கள் சிவந்த எம்எல்ஏ
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வலியுறுத்தி இளைஞர் ஒருவர் மேற்கொண்ட போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹம்ஸா பொரளி எனும் நபர் சாலையில் ஏற்பட்டுள்ள குழியில் அமர்ந்து யோகா செய்து, குளித்து, துணிகளையும் துவைத்து போராட்டம் நடத்தியிருக்கிறார்.
இந்த போராட்டம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி 52 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கீழே விழுந்த நிலையில் அவர் மீது லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையின் பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் திடீரென ஒருவர் அமர்ந்து குளிக்கத்தொடங்கினார். சாலையில் பயணித்த அனைவரும் அவரை மனநிலை சரியில்லாதவர் என நினைத்து கடந்து சென்றனர். அவர் அந்த சிறிய குட்டை நீரில் குளித்து துணிதுவைத்து அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார். அவரிடம் ஒரு பக்கெட், ஒரு துண்டு, ஜக் ஒன்று அதேபோல் சோப்பு ஒன்றையும் இருந்துள்ளது. நீர் முற்றிலும் அழுக்காக பழுப்பு நிறத்தில் இருந்த நிலையில் அதிலேயே இவை எல்லவற்றையும் அவர் செய்துள்ளார். ஹம்ஸா பொரளி எனும் அந்த நபரின் செயல்பாடுகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுக்கத்தொடங்கினர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவரை பார்த்தவாறு சாலையில் அனைவரும் சென்று கொண்டிருக்க அந்த வழியாக வந்த முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ லத்தீஃப் காரிலிருந்து இறங்கி வந்து விஷயம் என்னவென்று விசாரிக்க, அப்போதுதான் தெரிந்திருக்கிறது, ஹம்ஸா பொரளி எனும் நபர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார் என்று. எம்எல்ஏவை பார்த்தவுடன் ஹம்ஸா திடீரென யோகசனம் செய்ய, அதிர்ந்துபோன எம்எல்ஏ "என்னப்பா விஷயம்" என விசாரித்தார். பின்னர் ஹம்ஸா சாலையில் உள்ள பள்ளத்தை சுட்டிக்காட்டி, மழை நீர் தேங்கியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்ஸா இந்த போராட்டம் நடத்தியதில் பின்னணி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பசேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 52 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை பள்ளத்தில் விட்டுள்ளார். இதன் காரணமாக நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அப்போது பின்னாள் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து பள்ளங்களையும் உடனடியாக மூடுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) உத்தரவிட்டிருந்தது. அதேபோல மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர்கள் என்ற முறையில், ரோட்டில் பள்ளம் ஏற்பட்டால், அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து, பொறியாளர், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பொறுப்பாக இருக்கும் இதர நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அடங்கிய தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications