பிரபல நடிகரின் கொச்சி அப்பார்ட்மெண்ட்டில் பகீர்.. நடிகை அதுல்யா சந்திரா கைது.. ரூ.6 கோடி ஹனிட்ராப்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் டாக்டர் ஒருவரைத் திட்டமிட்டு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து, பல மணி நேரம் அடைத்து வைத்து தாக்கியதாக நடிகை அதுல்யா சந்திரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது கேரளாவில்?

கொச்சி திருப்பூணித்துறை ஹில்பேலஸ் பகுதியில் வசித்து வருபவர் அதுல்யா சந்திரா (32). மும்பையில் வளர்ந்த இவர், நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பு சட்டத்துறையிலும் பணியாற்றியுள்ளார். கொச்சியைச் சேர்ந்த பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக இருந்த அனுபவம் இவருக்கு உண்டு.

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் சந்தானம் நடித்த "குலு குலு", "ட்ரிப்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actress Athulya Chandra

50 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

இந்நிலையில், அதுல்யாவின் நெருங்கிய பெண் உறவினர் (50) ஒருவருக்கும், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குரீக்காடு பகுதியைச் சேர்ந்த 41 வயதான அந்த டாக்டர், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்தப் பெண் அதுல்யாவிடம் சொல்லி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்த நடிகை அதுல்யா, போலீசுக்கு சென்று டாக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, டாக்டரை நேரடியாகவே தாக்க முடிவு செய்தார்.. இதற்கு முதலில் டாக்டரை தன்னுடைய வலையில் விழ வைக்க வேண்டும் என்று திட்டமிட்ட அதுல்யா, நண்பர்கள் சிலரையும் தன்னுடைய திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

அப்பார்ட்மெண்ட் ஷாக்

கடந்த திங்கள்கிழமை மாலை அதுல்யா டாக்டருக்கு போன் செய்துள்ளார்.. தன்னுடைய சொந்தக்காரருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதாகவும், உடனடியாக வந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய டாக்டரும், பொன்னுருன்னி ஜூனியர் ஜனதா சாலையில் உள்ள எஸ்ஸன் ஸ்பிரிங் டேல் அப்பார்ட்மென்ட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த அப்பார்ட்மெண்ட், பிரபல மலையாள இளம் நடிகர் ஒருவருக்கு சொந்தமானது.. தனது தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தங்குவதற்காகவே இந்த அப்பார்ட்மெண்ட்டை அந்த நடிகர் எடுத்து வைத்திருக்கிறாராம்.. அங்குதான் டாக்டரை வரவழைத்துள்ளார் நடிகை அதுல்யா.

டாக்டர் அங்கு சென்றதுமே, நோயாளி யாரும் அங்கு இல்லை என்பதால் விழித்துள்ளார்.. அடுத்த சில நிமிடங்களில், அங்கு மறைந்திருந்தவர்கள் திடீரென வெளியே வந்து டாக்டரை சுற்றி வளைத்துள்ளனர். அவரைக் கடுமையாகத் தாக்கியதுடன், வெளியே செல்ல முடியாதபடி அடைத்தும் வைத்துள்ளனர்.

நடிகை அதுல்யா தாக்குதல்

அப்போது, பெண் உறவினருக்கு ஏன் பாலியல் தொல்லை தந்தாய்? என்று கேட்டு மீண்டும் தாக்கியிருக்கிறார்கள்.. இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருக்க ரூ.6 கோடி கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.. இதனால் வசமாக மாட்டிக்கொண்ட டாக்டரும், பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

முதற்கட்டமாக ரூ.25 லட்சத்தை மறுநாளே தந்துள்ளார்.. இதையடுத்து, அப்போதே அவரை அந்தக் கும்பல் விடுவித்துள்ளது... ஆனாலும் டாக்டரிடமிருந்த 2 காஸ்ட்லி செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், இயர்பாட்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் அபகரித்து சென்றுள்ளது அந்த கும்பல்.. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் எனக் கூறப்படுகிறது.

3 பேர் கைது

தாக்குதலில் படுகாயமடைந்த டாக்டர் களமசேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கடவந்தறா போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கில் நடிகை அதுல்யா சந்திரா, நடிகரும் தயாரிப்பு நிர்வாகியுமான பி. பிபின் பெரும்பள்ளி (42), கே.பி. விஷ்ணு (31) ஆகிய 3 பேரைக் கைது செய்துள்ளனர். சுமார் 20 படங்களில் நடித்துள்ள பிபின், திரைப்படத் தயாரிப்பு நிர்வாகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் 9 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

மருத்துவர் மீதும் வழக்கு

இதனிடையே, அதுல்யாவின் பெண் உறவினர் டாக்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். கடந்த மாதம் ஒரு ஹோட்டல் அறையில் டாக்டர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 50 வயதைக் கடந்த அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் டாக்டர் மீதும் போலீசார் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒருபுறம் டாக்டர் அளித்த தாக்குதல் மற்றும் பணம் பறிப்பு புகார், மறுபுறம் பெண் அளித்த பாலியல் புகார் என இரு தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், டாக்டரை திட்டமிட்டு அழைத்து வந்து தாக்கியது பணம் பறிக்கும் நோக்கத்தில்தானா, இதற்குப் பின்னால் ஹனிட்ராப் சதித்திட்டம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+