ஷாக்! பிரியாணி சாப்பிட்டு பலியானதாக கூறப்பட்ட மாணவி.. ஆனால் போஸ்ட்மார்ட்டமில் ட்விஸ்ட்.. என்ன இது?
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரியாணி சாப்பிட்டு இறந்ததாக கூறப்பட்ட மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அதில், பிரியாணி சாப்பிட்டதால் மாணவி உயிரிழக்கவில்லை என்றும், எலி பேஸ்ட் தின்று அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியாணி சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 'தற்கொலை' எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

பிரியாணி சாப்பிட்ட மாணவி
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி காசர்கோட்டில் உள்ள 'ரோமன்சியா' என்ற உணவகத்தில் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். குழிமந்தி என அழைக்கப்படும் அந்த பிரியாணியை சாப்பிட்ட அவருக்கு, சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். பிரியாணி சாப்பிட்டதால்தான் அவர் உயிரிழந்ததாக மாணவியின் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் பரவிய அச்சம்
இதன் தொடர்ச்சியாக, பிரியாணி சாப்பிட்டதால் இளம்பெண் மரணம் அடைந்ததாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதனால் கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பிரியாணி மீது ஒருவித அச்சம் பரவத் தொடங்கியது. இதனிடையே, இளம்பெண் பிரியாணி வாங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் இருவை போலீஸார் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், கேரளா முழுவதும் உள்ள ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

பரபர 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்
இந்நிலையில்தான், அஞ்சு பார்வதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்று காலை வெளியானது. அதில், பிரியாணியில் உள்ள மூலப்பொருட்களாலும், இறைச்சியாலும் அஞ்சு பார்வதி உயிரிழக்கவில்லை என்றும், அந்த பிரியாணியில் கலந்திருந்த எலி பேஸ்ட் தான் அவரது மரணத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலி பேஸ்ட்டின் விஷம் அவரது கல்லீரலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்?
மேலும், அஞ்சு பார்வதியின் லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த சர்ச ஹிஸ்டரியை (search history) போலீஸார் ஆய்வு செய்த போது, அதில் எலி பேஸ்ட் குறித்து அஞ்சு பார்வதி தேடிப் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் பிரியாணி சாப்பிட்டு மரணம் அடையவில்லை என்பது இப்போதைக்கு தெளிவாகியுள்ளது. இந்நிலையில், அஞ்சு பார்வதி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications