திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வருடனான மீட்டிங்.. சுரேஷ் ராஜன் ஆப்சென்ட்.. பரபரக்கும் குமரி அரசியல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தென் மாநில கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருவனந்தபுரம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால் அதே வேளையில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் ஆகிய மூவருடனுடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஒரு காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர் சுரேஷ் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

 ராகுலின் பாரத் ஜோடோ யாத்ரா! பட்டு போல் பளபளக்கும் சாலைகள்! குமரியில் குவியும் கதர்ச்சட்டையினர்! ராகுலின் பாரத் ஜோடோ யாத்ரா! பட்டு போல் பளபளக்கும் சாலைகள்! குமரியில் குவியும் கதர்ச்சட்டையினர்!

தென் மாநில கவுன்சில்

தென் மாநில கவுன்சில்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென் மாநில கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றுள்ளார். கோவளம் கடற்கரையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நேற்று தங்கிய முதல்வரை, அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக செயல்பாடு பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் ராஜன்

சுரேஷ் ராஜன்

மேலும், பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசியதுடன் ஜோக் ஒன்றையும் அடித்த முதல்வர் அந்த மூவருடனும் சிரித்துப் பேசியிருக்கிறார். நாகர்கோவில் மேயர் மகேஷ் தற்போது கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பதுடன் ஒரு காலத்தில் ஸ்டாலினுடன் இளைஞரணியில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பில் முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜன் இடம்பெறவில்லை.

மூவருடன் சந்திப்பு

மூவருடன் சந்திப்பு

காரணம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகு சுரேஷ் ராஜனை முதல்வர் ஸ்டாலின் சற்று தள்ளியே வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ராஜன் மகன் திருமணத்திற்கு தேதி கொடுத்துவிட்டு பிறகு அவர் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தது என தொடர்ந்து ஒரு இடைவெளியை கடைபிடித்து வருகிறார் முதல்வர். நேற்று கூட அப்படித்தான் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

 மனம் நொந்து

மனம் நொந்து

இதனால் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் மனம் நொந்து தவிக்கிறாராம். ஒரு காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர் சுரேஷ் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Stalin went to Thiruvananthapuram to attend the meeting of the Southern States Council, did not see ex minister Suresh Rajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X