திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2ம் அலையின் தொடக்கம்.. கேரளா செய்த தவறு.. மீண்டும் அதிகரிக்கும் கேஸ்கள்.. குழப்பத்தில் மக்கள்!

கேரளாவில் மீண்டும் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்படுவது அம்மாநில மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்படுவது அம்மாநில மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    கொரோனாவின் செகண்ட் வேவ்க்கு தயாராகும் இந்தியா?

    கேரளாவில் கடந்த வாரம் முழுக்க கொரோனா தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று எல்லோரும் பாராட்ட தொடங்கினார்கள். உலக நாடுகள் கூட கேரளாவின் செயல்பாடுகளை பாராட்ட தொடங்கியது.

    அதிலும் கடந்த வாரம் முழுக்க தினமும் ஒன்று அல்லது இரண்டு கேஸ்கள் என்று ஒற்றைப்படையில் மட்டுமே கேரளாவில் கேஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் கேரளா மொத்தமாக கொரோனாவில் இருந்து விடுபட போகிறது என்று கூறப்பட்டது.

    ஆனால் உண்மை நிலை

    ஆனால் உண்மை நிலை

    ஆனால் கேரளாவில் திடீர் என்று நேற்று மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கேரள மக்களை இந்த புதிய கேஸ்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கேரளாவில் நேற்று மட்டும் 19 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. இதனை மூலம் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்துள்ளது. அங்கு ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

    எங்கு எல்லாம் கேஸ்கள்

    எங்கு எல்லாம் கேஸ்கள்

    அதன்படி கேரளாவில் மொத்தம் 36000 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். நேற்று மட்டும் கண்ணூரில் 10 பேருக்கு கொரோனா வந்தது. பாலக்காட்டில் 4 பேருக்கு கொரோனா வந்துள்ளது. காசர்கோட்டில் 3 பேருக்கு கொரோனா வந்துள்ளது. கொல்லம் மற்றும் மலப்புரத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் காசர்கோட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.

    கண்ணூர் அதிகரிக்கிறது

    கண்ணூர் அதிகரிக்கிறது


    கண்ணூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கண்ணூரில் கொரோனா பாதித்தவர்களில் 10 பேரில் 9 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.அதேபோல் காசர்கோட்டில் 3 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.காசர்கோட்டில் கேஸ்கள் குறைந்துள்ள நிலையில்
    கண்ணூரில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு கண்ணூர் புதிய எபிசென்டராக மாற தொடங்கி உள்ளது.

    திடீர் என்று வருகிறது

    திடீர் என்று வருகிறது

    அதேபோல் அங்கு நோயாளிகள் எல்லோரும் வெளிநாட்டில் இருந்து வந்த பின் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 28 நாட்கள் வீட்டில் இருந்த போது அவர்களுக்கு கொரோனா இல்லை. ஆனால் 28 நாட்கள் கழித்து இப்போது கொரோனா அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது கொரோனா உருவாகும் அந்த 28 நாட்கள் அவகாசத்தை தாண்டியும் இப்படி கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது.

    அதிகரிக்கும்

    அதிகரிக்கும்

    இதுதான் கேரள மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 28 நாட்கள் வீட்டில் இருந்த பின் திடீர் என்று இப்படி கொரோனா தாக்குவது எப்படி என்று மக்கள் குழம்ப தொடங்கி உள்ளனர். இதனால் இந்த தனிமைப்படுத்தப்படும் நாட்களை அதிகரிக்க அம்மாநில அரசு யோசனை செய்து வருகிறது. ஏனென்றால் தனிமைப்படுத்தும் காலம் குறைவாக இருந்து அதற்கு பின் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால், அதன் மூலம் மேலும் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    லாக் டவுன் தளர்வு

    லாக் டவுன் தளர்வு

    அதேபோல் கேரள அரசு செய்த ஒரு தவறும் இதற்கு காரணம் என்கிறார்கள். கேரளாவில் கொரோனா தாக்குதல் கொஞ்சம் குறைவானவுடன் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் வெளியே வர தொடங்கினார்கள். மத்திய அரசு இதை எச்சரித்து இருந்தது. இதனாலும் கூட அங்கு கொரோனா கேஸ்கள் பரவ வாய்ப்புள்ளது. மீண்டும் அங்கு கடுமையான லாக் டவுன் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    இரண்டாம் அலை

    இரண்டாம் அலை

    அதேபோல் இதனால் கேரளாவில் கொரோனாவின் செகண்ட் வேவ் உருவாக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.ஒரு வைரஸ் உருவாகி, அது கட்டுப்படுத்தப்பட்டு பின் அந்த வைரஸ் மீண்டும் தோன்றினால் அதுதான் செகண்ட் வேவ். செகண்ட் வேவ் ஏற்பட்டால் பொதுவாக முன்பை விட கொரோனா வைரஸ் அதிக வீரியமாக இருக்கும். இதனால் பலர் முன்பை விட அதிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது, என்கிறார்கள்.

    English summary
    Coronavirus: Kerala getting new patients, maybe the start of the second wave in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X