விண்வெளிக்கு பறக்கும் 4 இந்திய வீரர்கள்.. அது என்னங்க ”ககன்யான்” திட்டம்? கட்டாயம் தெரிஞ்சுக்குங்க!
திருவனந்தபுரம்: விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய சரித்திரம் படைக்க இருக்கிறது. ககன்யான் திட்டத்தின் கீழ் இந்திய வீரர்கள் 4 பேர் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு பயணமாகின்றனர். விண்வெளிக்கு பயணமாகும் 4 வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
விண்வெளித் துறையில் நமது தேசம் தொடர்ந்து வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதன் அடுத்த கட்டம்தான் ககன்யான். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பக் கூடிய ககன்யான் திட்டம் குறித்த அடிப்படையான சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ககன்யான் என்பது என்ன?
ககன்யான் என்பது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பக் கூடிய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் திட்டமாகும்.
ககன்யான் என்றால் என்ன பொருள்?
ககன் - சமஸ்கிருதத்தில் வானம். வானை நோக்கி செல்லக் கூடிய பொருள் என்பதால் ககன்யான் என பெயரிடப்பட்டது.
ககன்யான் எப்போது சாத்தியம்?
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அடுத்த ஆண்டு 4 இந்திய வீரர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
விண்வெளியில் என்ன செய்வர் இந்திய வீரர்கள்?
ராக்கெட்டுகளை ஏவக் கூடிய LVM-3 ல் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள், 400 கிமீ சுற்றுப் பாதையில் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்வர்.
விண்வெளியில் இருந்து இந்திய வீரர்கள் எப்படி திரும்புவர்?
விண்வெளியில் 3 நாட்கள் ஆய்வு மேற்கு கொள்ளும் இந்திய வீரர்கள் குழு பூமியை நோக்கி தரை இறக்கப்பட்டு கடலில் விழச் செய்யப்படுவர். கடலில் இருந்து இந்திய விண்வெளி வீரர்கள் மீட்கப்படுவர்.
ககன்யான் பரிசோதனைகள் நடைபெற்றனவா?
ககன்யான் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு கட்ட சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமான முன்னோட்ட சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவசர கால பாதுகாப்பு அம்சங்கள், விண்வெளியின் சூழலை எதிர்கொள்வது, கதிர்வீச்சு அபாயங்களை எதிர்கொள்வது ஆகியவை ஒவ்வொரு கட்ட சோதனையின் அம்சங்கள்.
ககன்யான் திட்டம் மூலம் நிகழ்த்தப்படும் சாதனை என்ன?
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தரை இறங்கி உள்ளன. 4-வது நாடாக இந்தியாவும் இந்த சாதனை வரிசையில் இடம் பிடிக்கும்.
ககன்யான் திட்டத்தில் இதுவரை:
2006: ககன்யான் தொடக்க நிலை ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன
2008: மத்திய அரசின் ஒப்புதலுக்காக ககன்யான் திட்டம் வழங்கப்பட்டது
2009: ககன்யான் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது
2013: ககன்யான் சோதனை ஓட்டத்துக்கு திட்டமிடப்பட்டு 2016-க்கு மாறப்பட்டது.
2019: இந்தியாவின் இஸ்ரோ, ரஷ்யாவின் கிளாவ்கோஸ்மாஸ் இடையே ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பும் வீரர்களுக்கான பயிற்சி வழங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது
2021: இந்திய விண்வெளி வீரர்களுக்கான ரஷ்யாவின் பயிற்சி நிறைவடைந்தது.
2023: ககன்யான் திட்டத்துக்கான மாதிரி விண்கல சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
2024: ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 இந்திய வீரர்களை திருவனந்தபுரத்தில் இன்று அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி. கேப்டன் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கட் பிரதாப், சுபன்ஷு சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு செல்லும் 4 இந்திய வீரர்களாவர். இந்திய தேசத்தின் பெருமை மிகு அந்த தருணத்துக்காக பாரத தாயின் புதல்வர்கள் காத்திருப்போம்!
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications