செப்.2ல் களமிறங்கும் ஐஎன்எஸ் விக்ராந்த் - கடலை ஆதிக்கம் செய்ய உள்ள கப்பலின் சிறப்பம்சங்கள்
திருவனந்தபுரம்: சீனாவின் உளவு கப்பல் இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் நிலை நிறுத்தப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம்தாங்கி போர்க்கப்பல் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் சீனாவின் அச்சுறுத்தலுக்கு சரியான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஐஎன்எஸ் விக்ராந்த்' என பெயரிடப்பட்ட இந்த கப்பல் செப்டம்பர் 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.

அச்சுறுத்தல்
சமீபத்தில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பல் 'யுவான் வாங் 5' நிலைநிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு இலங்கையில் சீன கப்பல் நிலை நிறுத்தப்படுவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி சீன கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்தது. இதன் காரணமாக இந்திய பெருங்கடலில் பெரும் பதற்றம் நிலவியது. இது ஆயு்வு கப்பல் என சொல்லப்பட்டாலும், தென்னிந்தியா வரை உளவு பார்ப்பதற்கான அனைத்து அம்சங்களையும் இக்கப்பல் கொண்டுள்ளதால் இது உளவு கப்பல் என்றே அழைக்கப்பட்டது.

பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் புதிய போர்க்கப்பல் ஒன்று இந்திய கடற்படையில் செப்.2ம் தேதி இணைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஐஎன்எஸ் விக்ராந்த்' என பெயரிடப்பட்ட இந்த கப்பல் சுமார் 45,000 டன் எடை கொண்டதாகும். இதை இந்திய கடற்படையுடன் இணைக்கும் நிகழச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தற்போது, ரஷ்யாவின் தளத்தில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் மட்டுமே இந்தியாவிடம் உள்ளது.

முதன் முறையாக
இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள இரண்டு முக்கிய கடற்படை முனைகளுக்கு, தலா ஒன்று என்றும் மேலும் கூடுதலாக ஒன்றும் என 3 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இந்திய கடற்படைக்கு தேவைப்படுகிறன. சுமார் ரூ.20,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பலை கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம், விமானம் தாங்கி கப்பலை தாங்களே உருவாக்கிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

வசதிகள்
இந்த கப்பலில் சுமார் 1,700 வீரர்கள் பயணிக்க முடியும். இதில் MiG-29K போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட 30 விமானங்களை நிலை நிறுத்தி வைத்திருக்க முடியும். 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் பெண் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கான சிறப்பு அறைகள் உட்பட, சுமார் 2,200 அறைகள் உள்ளன. மட்டுமல்லாது, பல ஆய்வகங்கள், CT ஸ்கேனர், எக்ஸ்ரே இயந்திரங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு என நவீன மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications