திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாற்று சிறப்புமிக்க முடிவு.. கேரளாவில் தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் தலித் எம்எல்ஏ.. முதல்முறை!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் இந்து கோவில்கள் மற்றும் கோவில் சொத்துக்களை கட்டுப்படுத்தும் தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவையின் புதிய அமைச்சராக கே ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. கேரளாவில் எல்டிஎப் கூட்டணியில் மொத்தம் 21 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 12 அமைச்சர்கள் இதில் சிபிஎம் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ கட்சியில் இருந்து 4 அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது போக கேரளா காங்கிரஸ் (மணி), ஜனதா தளம் (மதசார்பற்ற), தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒரு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்பு- 21 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்பு- 21 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்

எப்படி

எப்படி

இதில் சிபிஎம் அமைச்சரவை தேர்வு பெரிய அளவில் வித்தியாசமாக அமைந்துள்ளது. முழுக்க முழுக்க இளைஞர்கள், புதிய எம்எல்ஏக்கள், துடிப்பான களப்பணியாளர்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான புதிய எல்டிஎப் அரசில் சைலஜாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

 வீணா

வீணா

இவருக்கு பதிலாக வீணா ஜார்ஜ் புதிய சுகாதாரத்துறை அமைச்சராகிறார். கேரளாவில் இந்து கோவில்கள் மற்றும் கோவில் சொத்துக்களை கட்டுப்படுத்தும் தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவையின் புதிய அமைச்சராக கே ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்த மூத்த சிபிஎம் எம்எல்ஏ ஆவார்.

முதல் முறை

முதல் முறை

தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவைக்கு முதல்முறையாக இப்படி தலித் சமூகத்தை சேர்ந்தவர் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் இது வரலாற்று சிறப்புமிக்க முடிவாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இந்த பதவி தலித் சமூகத்தை சேர்ந்த யாருக்கும் கொடுக்கப்பட்டது இல்லை. நாயர் சமூகத்தின் மறைமுக அழுத்தம் காரணமாகவும், அவர்களின் என்எஸ்எஸ் அமைப்பின் மறைமுக அழுத்தம் காரணமாகவும் இந்த பதவி தலித் சமூகத்திற்கு வழங்கப்பட்டது இல்லை.

யார்

யார்

இதற்கு முன் இந்த தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவை பதவியை கடகம்பள்ளி சுரேந்திரன் வகித்து வந்தார். பினராயி விஜயன்தான் தற்போது கே ராதாகிருஷ்ணனுக்கு தற்போது இந்த அமைச்சரவை பதவியை ஒதுக்கி உள்ளார். 1996ல் கேர்ளாவில் சிபிஎம் முதல்வராக இருந்தம் இகே நய்யாரின் அமைச்சரவையில் கே ராதாகிருஷ்ணன் சிறுபாண்மைத்துறை அமைச்சராக இருந்தார்.

சபரிமலை

சபரிமலை

கேரளாவில் கடந்த 3 வருடமாக சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையும் விவகாரம் பெரிய பிரச்சனை ஆகி உள்ளது. இதை வைத்து பாஜக, காங்கிரஸ் இரண்டும் அங்கு அரசியல் செய்ய முயன்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

English summary
Kerala: CM Pinarayi chooses CPM K Radhakrishnan as the new Devaswom board minister. He is the first Dalit community MLA to hold this post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X