கேரள தனலட்சுமி லாட்டரியில் கோடியை வென்ற அதிர்ஷ்டசாலி.. எந்த ஊரில் வாங்கிய டிக்கெட் பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று தனலட்சுமி லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. இந்த டிக்கெட்டில் முதல் பரிசாக ரூ. DE 770015 என்ற எண்ணிற்கு அடித்துள்ளது. சுகுமாரன் என்ற ஏஜென்சியில் இந்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார் என அறிந்து கொள்ள கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
கேரளாவில் தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. அங்கு வாரத்தில் ஏழு நாட்களும் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். முதல் பரிசுத்தொகை சமீபத்தில்தான் அதிகரிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.40 ஆக இருந்த டிக்கெட்டின் விலை தற்போது ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் முதல் பரிசுத்தொகையும் ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நமக்கு அதிர்ஷடம் அடித்து கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமா என்ற ஆர்வத்தில் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். பல லட்சம் பேர் வாங்கும் டிக்கெட்டில் ஒருவருக்குதான் முதல் பரிசு என்பதால் பல லட்சம் பேருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இது ஒருவகையான சூதாட்டம் என்றாலும் பலருக்கும் லாட்டரி மீதான மோகம் குறைவது இல்லை என்பதால் கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை சக்கை போடு போடுகிறது. செவ்வாய்க்கிழமைமையான நேற்று தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. கேரள லாட்டரி தலைமை அலுவலகத்தில் இந்த குலுக்கல் நடைபெற்றுள்ளது. இதன்படி முதல் பரிசாக ரூ.1 கோடி DE 770015 என்ற எண்ணிற்கு அடித்துள்ளது.
இந்த டிக்கெட் குருவாயூர் மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்ற நகரில் விற்கப்பட்டது ஆகும். சுகுமாரன் பி என்ற ஏஜெண்ட் விற்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. இரண்டாவது பரிசு DH 852097 (IRINJALAKKUDA) என்ற எண்ணிற்கு அடித்துள்ளது. இதன் பரிசுத்தொகை 30 லட்சம் ஆகும். மூன்றாவது பரிசாக ரூ. 5 லட்சம் DF 102014 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது.
4- வது பரிசாக ரூ.5 ஆயிரம் விழுந்த டிக்கெட் எண்;
0113 0283 0376 1029 1332 1866 2493 2573 2916 3443 4270 4686 4963 5450 5534 6272 6603 6663 7554 7682
5-வது பரிசு ரூ. 2 ஆயிரம்:
2052 3559 4387 5114 7121 8124
6 வது பரிசு ரூ.1,000:
0024 0654 0990 1182 2546 2553 2890 2967 3243 3460 3693 3972 4469 4610 4747 4825 5271 5408 5718 5805 6293 6438 7327 7891 8272 8406 8650 8890 8927 9947
தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தடை உள்ளது. எனவே தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும். மீறி விற்பனை செய்தால் போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கி பரிசு அடித்தாலும் கேரள லாட்டரி விதிகளின் படி, பரிசுத்தொகையை மறுக்க முடியும்.












Click it and Unblock the Notifications