Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழக்கின் போதே கலங்கிய நடிகை! நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன.. நீதிபதி ஹனி யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மட்டுமன்றி நாடு முழுக்க புயலை கிளப்பிய நடிகை பாலியல் தொல்லை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

2017ம் ஆண்டு நடந்த இந்தக் கொடூரம் குறித்து எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், இன்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம் வர்கீஸ் தீர்ப்பளித்தார். இதில் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திலீப் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Kerala

கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு அதிர வைக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 2017 பிப்ரவரி 17ம் தேதி கொச்சியில் இந்தக் கொடூரம் அரங்கேறியது.

கேரளாவில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான வழக்குகளில் ஒன்றான இந்த வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதால், அனைவரது கவனமும் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஹனி எம். வர்கீஸ் மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே பல முறை விவாதங்களை ஏற்படுத்திய இவரது தீர்ப்புகள், நிலைப்பாடுகள் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

ஹனி எம். வர்கீஸ்

நீதிபதி ஹனி வர்கீஸ், 10 வருடங்களுக்கு மேலாக உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். திருச்சூரில் மூத்த வழக்கறிஞர் கே.பி. மோகன்தாஸ் தலைமையில் தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2012 ஆம் ஆண்டில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, வழக்கறிஞர் பணியில் இருந்து நீதிபதி பணிக்கு மாறினார். பல ஆண்டுகளாக, எர்ணாகுளம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் நிர்வகிக்கப்படும் வழக்குகள் உட்பட முக்கியமான வழக்குகளை அவர் விசாரித்துள்ளார்.

2019ல் விசாரணை தொடங்கியது

அந்த பிரபல நடிகையின் பாலியல் தாக்குதல் தொடர்பான உயர்மட்ட வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஹனி 2019 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.. இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அவர் எர்ணாகுளம் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.

நீதிபதி ஹனி முன் ஆஜரானோர் அவரை உறுதியானவர், முறையானவர், நீதிமன்றத்தில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தத் தயங்காதவர் என்று கூறுகின்றனர். பெண்கள் தொடர்பான வழக்குகளில் இவர் அதிக கவனம் செலுத்தி வந்தார். முக்கியமாக சிறிய குடும்ப வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கி, அவர் ஆழ்ந்த இரக்கத்தையும் வெளிக்காட்டியுள்ளார். சில விஷயங்களில் கருணையும், மற்றவற்றில் கடுமையும் காட்டி கவனம் பெற்றார்.

நீதிபதி ஹனி மீது புகார்

ஆனால் அந்த நடிகை வழக்கில் இவர் பாரபட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. நீதிபதி ஹனி மீது அந்த நடிகை பல முறை புகார்களையும் கொடுத்தார். நீதிபதி ஹனி தனக்கு மன உளைச்சல் கொடுக்கிறார், தனக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கிறார் , விசாரணையில் பாரபட்சம் இருக்கிறது.. அதனால் வேறு அமர்விற்கு வழக்கை மாற்றுமாறு பலமுறை கேரள உயர் நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுகினார். உயர் நீதிமன்றங்கள் வழக்கை மாற்ற மறுத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கியமாக இவர் பல சாட்சியங்களை விசாரிக்கவில்லை, மெமரி கார்ட் மூலம் வீடியோ லீக்கானதை பற்றி விசாரிக்கவில்லை, அதை பற்றிய தடயவியல் ஆதாரம் இருந்தும் அதை விசாரிக்கவில்லை என்று இவர் மீது புகார்கள் வைக்கப்பட்டது. அதோடு நீதிமன்றத்தில் நடிகர் திலீப்பிற்கு எதிராக வாதம் வைத்த அரசு தரப்பை அவர் கடுமையாக சாடினார், பேசவே விடவில்லை என்றும் கூட விமர்சனங்கள் எழுந்தன.

நீதிபதி ஹனி வர்கீஸ், கேரளாவின் இடதுசாரி அரசியல் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அரசியல் செல்வாக்கு தொடர்பான கேள்விகளும் பரவலாக எழுந்தன. கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக வழங்கப்பட்ட நிலையில் இந்த விமர்சனங்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+