மா.கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு குட்பை.. கேரளாவில் அரியணை ஏறும் காங்கிரஸ்.. Satta Bazaar எக்ஸிட் போல்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வாய்ப்புள்ளது? என்பது தொடர்பான எக்ஸிட் போல் கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி Satta Bazaar கருத்து கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 78 முதல் 85 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன.ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி ஒரே கட்டமாக கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 79.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தை போல் மே 4ம் தேதி கேரளா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேரளாவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) மாலை 6.30 மணி முதல் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
கேரளாவை எடுத்து கொண்டால் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே மும்முனை போட்டி உள்ளது. இதில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி UDF எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி LDF என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் Satta Bazaar நிறுவனத்தின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி 78 முதல் 85 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி இந்த தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டணி 56 முதல் 66 தொகுதிகளில் வெல்லலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கேரளாவில் கால்பதிக்க துடிக்க பாஜக கூட்டணி 2 - 3 இடங்களை கைப்பற்றலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி அரியணை ஏறப்போவதாக Satta Bazaar கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
