திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"யூ டூ ஷைலஜா".. சபையில் "டார் டாராக" அரசை கிழித்தெடுத்த டீச்சர்.. அப்டியே மிரண்டு போன பினராயி விஜயன்

கேரள மாநில மாஜி அமைச்சர் ஷைலஜா டீச்சர் சரமாரியாக விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? ஆயிரம் ரூபாயை வைத்து கொண்டு பிழைப்பு நடத்த முடியுமா? என்று பினராயி விஜயன் அரசை லிஸ்ட் போட்டு குற்றஞ்சாட்டி உள்ளார் மாஜி அமைச்சர் ஷைலஜா.. இதுதான் கேரள அரசியலில் பற்றி கொண்டு எரிகிறது..!

கேரள மாநிலத்தில் கடந்த 2016 முதல் 2021 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஷைலஜா... டீச்சர் ஷைலஜா என்றாலே பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸ்..

குறிப்பாக, கேரளாவை இயற்கை சீற்றங்கள் அதிகமாக தாக்குவது வழக்கம். அந்த வகையில், மழை, வெள்ளம், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் இப்படி நிறைய சிக்கல்களை அந்த மாநிலம் அடுத்தடுத்து எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.

கஸ்டடியில் சாவதா?.. நியாயப்படுத்தவே முடியாது.. ஸ்டேன் சாமி மரணம்.. மனமுடைந்து கலங்கிய பினராயி! கஸ்டடியில் சாவதா?.. நியாயப்படுத்தவே முடியாது.. ஸ்டேன் சாமி மரணம்.. மனமுடைந்து கலங்கிய பினராயி!

நெருக்கடி

நெருக்கடி

அப்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டது ஷைலஜா டீச்சரின் சுகாதாரத்துறைதான். இதில், கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் திறம்பட செயல்பட்டதற்காக சைலஜா டீச்சருக்கு நாடு முழுவதிலும் பாராட்டுகளும் குவிந்தன... ஆனால், சமீபத்தில் அவர் கேபினட்டில் இருந்து நீக்கப்பட்டார்.. இது அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்..

ஷைலஜா

ஷைலஜா

எதற்காக ஷைலஜாவுக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்று அரசை கேள்வி கேட்டனர்.. இதுகுறித்து பினராயி விஜயன் விளக்கம் அளித்தபோது, ஒருத்தரே 2 பொறுப்பில் இருக்க முடியாது என்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.. அதனால், பழைய அமைச்சர்கள் யாருக்கும் வாய்ப்பு இல்லை என்றும் இந்தமுறை புதியவர்களுக்கு அமைச்சர் வாய்ப்பு என்றும் கூறப்பட்டது.

சட்டசபை

சட்டசபை

இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென ஷைலஜா டீச்சர் அம்மாநில அரசை சரமாரியாக விமர்சித்துள்ளார்.. சில நாள்களாக கேரள சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது.. அப்போது பேசிய ஷைலஜா, "கொரோனாவால் மிகவும் மோசமான பிரச்சனைகளை மக்கள் அனுபவித்துவருகிறார்கள்... 1000 ரூபாய் இப்போது வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்து, அவர்களால் வாழ்க்கை நடத்த முடியாது...

பேக்கேஜ்கள்

பேக்கேஜ்கள்

மக்களுக்கு மேலும் உதவ வேண்டும்... கேரள அரசு பல பேக்கேஜ்களை அறிவித்துள்ளது... ஆனால், இது மிகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பிரச்சனை... சிறு, குறு மற்றும் பாரம்பர்யத் தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன... வங்கி கடனை செலுத்த முடியாமலும், குழந்தைகளின் கல்வி கட்டணத்தை கட்ட முடியாமலும் இன்னும் பிற செலவுகளைச் சமாளிக்க முடியாமலும் இருக்கின்றனர்.

வருவாய்

வருவாய்

இதையெல்லாம் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.. ஓணம் பண்டிகை சமயத்தில் கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை. அதனால், இந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு பேக்கேஜ் உருவாக்க வேண்டும் என்றார். இதற்கு தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவ் பதிலளிக்கும்போது, "ஷைலஜா கூறிய விஷயங்கள் பரிசீலிக்கப்படும்" என்றார்..

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

ஆனாலும், ஷைலஜாவின் இந்த கருத்து இரு வேறு விதமாக பார்க்கப்பட்டு வருகிறது.. ஷைலஜா சொன்ன அதே குற்றச்சாட்டுகளைதான் இத்தனை நாட்களும் எதிர்க்கட்சிகளும் சொல்லி வருகின்றன.. இப்போது ஆளும் தரப்பின் எம்எல்ஏவே பினராயி அரசை சீண்டி உள்ளாரே? ஒருவேளை தனக்கு பதவி தராத வருத்தத்தில், நேரம் பார்த்து இப்படி அரசை குறை சொல்கிறாரா? என்பதும் விவாதப்பொருளாக மாறியுள்ளது...

ஆதரவு

ஆதரவு

அதேசமயம், ஷைலஜா ஒன்றும் தப்பாக பேசவில்லையே.. அவர் முன்வைத்த வாதங்களும் கருத்துகளும் சரிதானே? தொற்று கேரளாவில் பரவிக் கொண்டிருக்கிறது.. 3வது அலை என்று பயமுறுத்தல்கள் உள்ளன.. அடுத்த 3 வாரங்களில் தொற்று அந்த மாநிலத்தில் அதிகமாகும் என்றும் மத்திய சுகாதாரத்துறை வார்னிங் தந்துள்ளது..

கருத்துக்கள்

கருத்துக்கள்

அப்படி இருக்கும்போது, ஏற்கனவே தொற்று தடுப்பை கையாண்ட ஒரு மாஜி அமைச்சர் கருத்து சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது செயல்பட்ட அளவிற்கு தற்போது கேரள சுகாதாரத்துறை செயல்படவில்லை என்று சொல்லி உள்ளதை, அந்த மாநில அரசுதான் விளக்க வேண்டும்.. ஷைலஜா மக்களின் பக்கம் நின்று, நியாயமாகவே பேசுகிறார் என்றும் ஆதரவு பெருகி வருகிறது.

English summary
Kerala former Health Minister KK Sailaja criticized kerala gov in the assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X