திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது ஜூஸா? விஷமா? நான் கொடுக்கவே இல்லையே.. கோர்ட்டில் பல்டி அடித்த பாய்சன் காதலி கிரீஷ்மா

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஷாரோன் ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் தன்னை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கியதாக கிரீஷ்மா கோர்டில் பல்டி அடித்துள்ளார்.

கேரளாவில் ஷாரோன் என்ற இளைஞரை கிரீஷ்மா என்ற பெண் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ்.

இவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கிரீஷ்மா அவருக்கு காஷயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். வேறு ஒரு பணக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்வதற்காக இந்த இளைஞரை அந்த பெண் கொலை செய்துள்ளார்.

காதலி கிரீஷ்மா கொடுத்த கஷாயம்.. துடித்து இறந்த ஷாரோன்.. கொலை வழக்கு தமிழகத்துக்கு மாற்றம்? என்னாச்சுகாதலி கிரீஷ்மா கொடுத்த கஷாயம்.. துடித்து இறந்த ஷாரோன்.. கொலை வழக்கு தமிழகத்துக்கு மாற்றம்? என்னாச்சு

மரணம்

மரணம்

மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த ஷாரோன் கடந்த சில வாரங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி பலியானார். ஷாரோன் பலியான மறுநாள் என்ன செய்தேன் என்று கிரீஷ்மா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன்படி ஷாரோன் மரணம் அடைய வேண்டும் என காத்து இருந்தேன். அவர் கடைசி நாட்களில் உடல்நிலை மோசமானதுமே மரணத்திற்காக காத்து இருந்தேன். அவர் இறந்துவிட்டால் என் மீது சந்தேகம் வர கூடாது என்று வீட்டில் இருந்த தடயங்களை அழித்தேன் என்று கூறி உள்ளார். அதன்படி விஷம் கொடுக்க பயன்படுத்தப்பட்ட கஷாய சட்டியை ஷாரோன் மரணம் அடைந்ததும் அப்புறப்படுத்தினேன், என்று கூறி உள்ளார்.

கோர்ட்

கோர்ட்

இந்த நிலையில் தற்போது நெய்யாற்றின்கரை மேஜிஸ்டிரேட் கோர்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் விசாரணை நடக்கும் வரை கிரீஷ்மாவிற்கு பெயில் கொடுக்க கூடாது. வழக்கில் கஸ்டடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போலீசார் தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் முன் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம் ஒன்றை கிரீஷ்மா வழங்கினார். அதில், நான் இந்த குற்றத்தை செய்யவில்லை. என் காதலன் எப்படி மரணம் அடைந்தார் என்று எனக்கு தெரியாது. அவரின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை.

வாக்குமூலம்

வாக்குமூலம்

நான் போலீசிடம் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. போலீஸ் நான் வாக்குமூலம் அளித்ததாக பொய்யாக கூறுகின்றனர். நான் விஷம் கொடுத்ததாக கூறி உள்ளனர். அதேபோல் என் காதலனை பல முறை கொலை செய்ய முயன்றதாக கூறி உள்ளனர். ஆனால் அது உண்மை கிடையாது. என்னிடம் வாங்கப்பட்ட வாக்குமூலம் பொய்யானது. என்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கி உள்ளனர். இந்த வாக்குமூலத்தை கோர்ட் ஏற்றுக்கொள்ள கூடாது இதை நிராகரிக்க வேண்டும் என்று கிரீஷ்மா கோர்டில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். போலீசிடம் தான்தான் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்த கிரீஷ்மா கோர்டில் பல்டி அடித்துள்ளார்.

விஷம்

விஷம்

இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஊடகங்களில் தெரிவித்த தகவலில், அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்த வீடியோ உள்ளது. அதேபோல் கொலைக்கான ஆதாரங்கள் உள்ளன. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. மேலும் கொலை தொடர்பாக மற்ற சாட்சியங்களும் கிரீஷ்மாவிற்கு எதிராக உள்ளது. பொதுவாக கொலை செய்யும் நபர்கள் இப்படி கொலை செய்யவில்லை என்று கோர்ட்டில் வாக்குமூலம் கொடுப்பது வழக்கம். கோர்ட்டில் போலீஸ் மீது புகார் சொல்வது வழக்கம். அதைத்தான் கிரீஷ்மா செய்துள்ளார். ஆனால் இதெல்லாம் கோர்டில் நிற்காது என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

முன்னதாக போலீசார் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வாக்குமூலம் வாங்கினர். ஷரோன் கிரீஷ்மா ஒன்றாக சுற்றி இடங்கள், அவர்கள் ஒன்றாக சென்ற சுற்றுலா தளங்கள் ஆகிய பகுதிகளில் எல்லாம் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை டைம்லைன் உருவாக்க கூடிய ஸ்பாட் விசாரணை என்பார்கள். அதாவது இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் என்ன நடந்தது? எப்படி கொலையை நோக்கி விவகாரங்கள் சென்றது அதில் ஷாரோனிடம் இருந்த போன் பற்றி பேசி இருக்கிறார் கிரீஷ்மா. ஷாரோன் போனில் நாங்கள் ஒன்றாக எடுத்த போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தன. நாங்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்கள் இருந்தன. அவனிடம் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன். அதனால் அதை டெலிட் செய் என்றேன். ஆனால் அவன் என்னிடம் அதை டெலிட் செய்ய முடியாது என்று கூறிவிட்டான். அதோடு மறுநாளே என்னை சர்ச்சைக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டான். ஆனால் போனில் இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் எதையும் அவன் டெலிட் செய்யவில்லை. எங்கே நான் வேறு இளைஞரை திருமணம் செய்தால், என்னை கொன்றுவிடுவானோ என்று அச்சத்தில் கொலை செய்ததாக கிரீஷ்மா கூறி உள்ளார்.

 கொலை பின்னணி

கொலை பின்னணி

இந்த சம்பவம் தொடர்பாக கிரீஷ்மா வீட்டில் இருந்து முக்கியமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அவரின் வீட்டில் இரண்டு விஷ பாட்டில்கள் பயன்படுத்தப்படாமல் கிடைத்து உள்ளன. அதேபோல் ஒரு கஷாய பாட்டிலும் கிடைத்து உள்ளது. இந்த பாட்டில்கள், ஷரோன் ஒருவேளை தப்பித்துவிட்டால் பின்னர் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த பாட்டில்கள் என்று கூறப்படுகிறது. அதாவது எத்தனை தடவை மிஸ் ஆனாலும் ஷரோனை கொலை செய்தே ஆக வேண்டும் என்ற திட்டத்தில் கிரீஷ்மா இருந்துள்ளார். அவள் வீட்டில் விஷத்தை பயன்படுத்துவது தொடர்பான புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட கொலை செய்வதில் அவர் எக்ஸ்பர்ட் போல ஆகி உள்ளார். ஷாரோனுக்கு கஷாயத்தில்தான் விஷம் வைத்து கிரீஷ்மா கொன்றுள்ளார். ஆனால் இந்த வாக்குமூலங்களை தற்போது போலீசில் அவர் மறுத்துள்ளார்.

English summary
Kerala Sharon Murder: I did not kill him, lover Greeshma twists in local Court .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X