திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர் ட்விஸ்ட்.. பிரபல பைக் ரேசர் மரணத்தில் திருப்பம்.. 3 வருடம் கழித்து வந்த உண்மை.. என்ன நடந்தது

பிரபல பைக் ரேசர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பிரபல பைக் ரேசர் மரணம் அடைந்த வழக்கில், 3 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது... இது ஒரு விபத்து மரணம் என்று முடிவான நிலையில், மனைவியே கணவரின் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் அஸ்பக்மான்.. 34 வயதாகிறது.. இவர் ஒரு சர்வதேச பைக் ரேசர்.. மனைவி பெயர் சுமேரா பர்வேஸ்.. அஸ்பக், சுமேரா இருவரும் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த 2018, ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், இந்தியா பஜார் மோட்டார் சைக்கிள் போட்டி நடந்தது.. இதில் பங்கேற்க அஸ்பக்மான் ராஜஸ்தான் சென்றார்.. அப்போது அவருடன் நண்பர்கள் 5 பேரும் கூடவே சென்றிருந்தனர்.. ஆகஸ்ட் 15-ம் தேதி அங்கிருந்த பாலைவனத்தில், போட்டிக்காக பயிற்சியும் மேற்கொண்டு வந்தார்.

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க அப்பல்லோ நிர்வாகம் முட்டுகட்டை: ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க அப்பல்லோ நிர்வாகம் முட்டுகட்டை: ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு

மனைவி

மனைவி

ஒருநாள், பயிற்சிக்காக சென்ற தன் கணவன் திடீரென காணவில்லை என்று மனைவி சுமேரா போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து போலீசாரும் அஸ்பக்கை தேடி வந்த நிலையில், பிணமாக அவரை மீட்டனர்.. இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பாலைவனத்தில் தண்ணீர் இல்லாததால், தாகம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.

சந்தேகம்

சந்தேகம்

மேலும், சந்தேகம் ஏற்படும்வரை வேறு எதுவுமே அந்த மரணத்தில் தனக்கு தென்படவில்லை என்று மனைவியும் வாக்குமூலம் அளித்ததால், வீரரின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அஸ்பக்கின் குடும்பத்தினர் மட்டும் அந்த காரணத்தை ஏற்கவே இல்லை.. அஸ்பக் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஜெய்சால்மர் போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் இது தொடர்பாக மறுவிசாரணை நடத்தி வந்தனர்..

தாகம்

தாகம்

அப்போதும் போலீசாருக்கு எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. கணவர் மரணத்தில் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று மனைவி மீண்டும் போலீசில் திட்டவட்டமாக சொன்னதால், இந்த வழக்கு கிடப்பிலே போடப்பட்டுவிட்டது.. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ஜெய்சால்மர் மாவட்டத்துக்கு அஜய்சிங் என்பவர் புதிய எஸ்பியாக பதவியேற்றார்.. இதனால் அஸ்பக்கின் தாய் புது எஸ்பியை சென்று சந்தித்து இந்த வழக்கில் மறுவிசாரணை தேவை என்று வலியுறுத்தினார்..

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இதையடுத்து அஸ்பக்கின் சடலம் மீண்டும் தோண்டிஎடுக்கப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், அஸ்பக்கின் உடம்பில் காயங்கள் இருந்தும், அதை ஏன் அவரது மனைவி பெரிதுபடுத்தவில்லை? பைக் சரியாக நிறுத்தப்பட்டிருந்தும் ஏன் தவறான தகவலை தந்தார்? என்பன போன்ற சந்தேகங்கள் அதிகாரிகளுக்கு எழுந்தது.. அதுமட்டுமல்ல, போஸ்ட் மார்ட்டம் ரிப்போரட்டில், தாகம் ஏற்பட்டு அதனால் அஸ்பக் உயிரிழக்கவில்லை என்றும் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த ரிப்போர்ட்டையும் மனைவி மறைத்திருந்தார்.

விசாரணை

விசாரணை

இதையடுத்து அஸ்பக்கின் விபத்து மரணம், கொலை வழக்காக மாற்றப்பட்டது.. 2 நாளைக்கு முன்பு, அஸ்பக்கின் நண்பர்கள் 2 பேரை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்... அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.. அஸ்பக்கின் மனைவிக்கு, சஞ்சய் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது.. இந்த விஷயம் அஸ்பக்குக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார்.. இதனால் தம்பதிகளிடம் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது..

 அதிரடி கைது

அதிரடி கைது

இறுதியில், சஞ்சய் மூலம் கணவரை கொலை செய்ய, மனைவி பிளான் செய்துள்ளார்.. அதன்படி சம்பவத்தன்று ஜெய்சால்மரில் பயிற்சிக்கு சென்றபோது, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கொலை செய்துவிட்டு விபத்துபோல் சித்தரித்து நாடகமாடியுள்ளார்.. இவ்வளவும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.. ஆனால் அதற்குள் மனைவி சுமேரா தலைமறைவாகி விட்டார்.. அவரையும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.. 3 வருடம் கழித்து, கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை தந்து வருகிறது.

English summary
Malayalee bike racer killed; Planned by wife and friends
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X