சிக்கலில் முதல்வர் மகள்.. மாதாமாதம் வீணா விஜயன் அக்கவுண்டிற்கு வந்த பணம்.. 1.72 கோடி சர்ச்சை! பரபர!
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், சிஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் மாதா மாதம் சில லட்சங்கள் என இதுவரை ரூ.1.72 கோடி பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) என்ற நிறுவனத்துடன் ஒரு தொழில் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

வீணா விஜயனின் நிறுவனம் தனியார் நிறுவனமான சி.எம்.ஆர்.எல்-க்கு தகவல் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் ஆலோசனை மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்க ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், எந்த சேவையும் வழங்கப்படாமலேயே மாதா மாதம் பணம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு, சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ. 3 லட்சமும், வீணா விஜயனுக்கு ரூ.5 லட்சமும் பணம் வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் வீணா விஜயன் மொத்தம் ரூ. 1.72 கோடியைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வீணா விஜயன் மற்றும் கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) இடையே நடந்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தியதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் 1.7 கோடி ரூபாய் அளவுக்கு சந்தேகத்திற்குரிய நிதிப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
முதல்வரின் மகள் சர்ச்சையில் சிக்கியிருப்பது கேரளா அரசியலில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications